திங்கள், 11 ஆகஸ்ட், 2014

சிவம்-சிவன்

      சிவம்-சிவன்   உண்மையிலே யார்? அவனை பார்க்க முடியுமா? 

இந்த பிரபஞ்சத்தை பற்றி எப்படி ஒரு முடிவுக்கு வர முடிவதில்லையோ அவ்வாறே சிவனை பற்றியும் ஒரு முடிவுக்கு வருதலும் மிகவும் சிரமமாகவும். சிவனை அறிந்த உலகம் மூன்று விதமாக அவரை பார்க்கின்றது.

"சிவம்" என்பதற்கு ஒன்றும் இல்லாதது என்று பொருள் கூறுகிறார்கள்.

புகைப்படம்: லிங்காஷ்டகம் - 1

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்

ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

***

லிங்கம் என்ற வடமொழிச் சொல்லுக்கு அடையாளம் என்று பொருள். சிவலிங்கம் என்றால் சிவனைக் குறிக்கும் ஒரு அடையாளம் என்று பொருள். ஆனால் பழம் என்றாலே வாழைப்பழம், பூ என்றாலே தாமரைப்பூ, ஸஹஸ்ரநாமம் என்றாலே விஷ்ணு ஸஹஸ்ரநாமம், தமிழ்கடவுள் என்றால் முருகப்பெருமான் என்று ஆனது போல் லிங்கம் என்றாலே அது சிவலிங்கம் என்றே பொருள் என்று ஆகிவிட்டது. அதனால் இந்தப் பாடல் முழுவதும் சிவலிங்கம் என்ற பொருளில் லிங்கம் என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது.

ராவண தர்ப விநாசன லிங்கம் (லிங்காஷ்டகம் 2)

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்

காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்

ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

ப்ரவர என்றால் மூத்தவர், முதன்மையானவர், தலைவர், சிறந்தவர் என்று ஒருவரைக் குறிக்கும் பல பொருளும் சில இடங்களில் பரம்பரை என்ற பொருளும் இருக்கின்றன. இங்கே இந்த பொருட்களில் (அர்த்தங்களில்) எதனை எடுத்துக் கொண்டாலும் பொருத்தமே. தேவர்களிலும் ரிஷிகளிலும் முதன்மையானவர்கள், மூத்தவர்கள், தலைவர்கள், சிறந்தவர்களால் வணங்கப்படும், தொழப்படும், அருச்சிக்கப்படும் லிங்கம் என்று சொன்னாலும் சரியே. தேவர்கள், ரிஷிகள் பரம்பரையினரால் அருச்சிக்கப்படும் லிங்கம் என்று சொன்னாலும் சரியே.

சித்தர்கள், தேவர்கள், அசுரர்கள் வணங்கும் பரம்பொருள் (லிங்காஷ்டகம் 3)

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்

சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.             
சிவனை யோகிகள் ஆதி யோகி என்றும் உலகில் முதன் முதலில்  தோன்றியவர்  என்றும் பார்க்கின்றனர்.  சிவன் தான் முதன் முதலில் யோகங்களை கண்டுபிடித்தவர் என்றும், மனிதனும் இறை நிலைக்கு உயர இவரே வித்திட்டவர் என்றும் சொல்லப்படுகிறது. 

சிவனை தமிழ் நாட்டு சித்தர்கள் இயற்கையாகவும்,  பிரபஞ்சமாகவும்,இறைவனாகவும்   பார்க்கின்றனர். 

சிவனை பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் முழு முதல் கடவுளாக பாக்கின்றனர். இவரை அனைத்து உலகையும் உயிரையும் படைக்க காரண கர்த்தா என்றும் இவரே அனைவருக்கும்  படி அளக்கிறார் என்றும் நம்பப்படுகிறது.

இதில் எது உண்மை என்று தெரியாது. ஆனால் ஓம், ஓம் நமசிவாய, சிவ சிவ வார்த்தைகள் ஒருவனுக்கு சிவ தரிசனம் கிடைக்க உதவுகின்றது என்றே நினைக்கின்றேன்.

ஆம் சிவனை இவ்வுலகில் உள்ள அனைத்து மனிதர்களும் காண முடியும்.
அதற்கு யோகம்,தியானம், தவம் மற்றும் அவரது பெயர்கள் உதவி செய்கின்றது.

சிவன் எங்கும் உள்ளான் உங்கள் உள்ளும் உள்ளான். 
எது இந்த பிரபஞ்சத்தில் உள்ளதோ அது உன்னுள்ளும் உள்ளது.(அகம் பிரம்மாஸ்மி) 
நான் தான் இறைவன்/ நான் கடவுள் (அகம் பிரம்மாஸ்மி)
நீ எதை தேடுகிறாயோ அதுதான் நீ....நீ அதுவாக இருக்கிறாய்  (தத்வமசி).

ஆதலால் தான் நம்ம பாட்டி அவ்வை "உடம்பிலே உத்தமனை காண்" என்கிறார்.
நமது சித்தர்களும் சிவ தரிசனத்தை பெற்றவர்கள் தான். 

இந்த சிவ தரிசனத்தை தான் இறை தரிசனம், ஒளி தரிசனம், இறை வெளிப்பாடு, அருட்பெரும்ஜோதி என்று பலவாறு குறிப்பிடுகின்றனர்.

சிவனை,இறைவனை, அல்லாவை, கர்த்தரை  காண எங்கும் செல்லத்தேவை இல்லை. ஏன் உனில் அவன் உங்கள் உள் தான் இருக்கிறான். இந்த உண்மை அனைத்து மதங்களிலும் ஒளிந்திருந்தாலும் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

யூதர்களின் புனித நூலும் இறைவன் அனைவரிலும் உள்ளான் என்றே குறிப்பிடுகிறது.
 (இந்த யூத புனித நூலின் தாக்கத்தால் உருவானவை தான் பைபிள் மற்றும் குரான் என்று கூறப்படுகிறது).
கிருத்துவம் இறைவன் ஒளியாக உள்ளான் என்கிறது (God is light).
அல்லாவின் ஒளியை ஊதி அணைக்க முடியாது என்று குரானும் இந்த சிவ ஒளியையே குறிக்கின்றது.

நான் இங்கு சில மதங்களை எடுத்து காட்டுவதற்கு காரணம் அங்கும் சில ஆன்மீக விடயம் உள்ளது என்பதற்காகவே. மத்த படி மதம் ஒரு கலங்கிய குட்டை தான். அதில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இதற்கு எந்த ஒரு மதமும் விதி விலக்கல்ல. 

யார் யார் சிவம்....நீ.....நான் சிவம் என்று பாடலும்  வந்துவிட்டது. 

மதத்தை பார்க்காமல் மனிதனை மனிதனாக பார்த்தலே- இறைவனுக்கு செய்யும் மிகப்பெரிய வழிபாடாகும். 

நீங்கள் எந்த இறைவனையும்,அல்லாவையும், கர்த்தரையும், சாமியையும் கும்பிடாமலும் இறை தரிசனத்தை பெற முடியும். 

யோகம், ஆன்மீகமே உங்களுக்கு உண்மையான  சிவ/இறை  தரிசனத்தை காட்டும். 
உங்கள் நெற்றிகண்ணை திறக்கலாம், ஒளியை காணலாம், நீங்களும் சிவனாகலாம்.உண்மையை உணரலாம். அதற்கு சிவ ராத்திரி உகந்தது என்று கூறப்படுகிறது. 

அஉம், ஓம், ஆமென்,ஆமின் 


                                              பகிர்வில் ர.சடகோபால்