செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

மூன்றடி நிலம்-

மூன்றடி நிலம்- அளந்து கொடுத்தால் போதும்'

              புகைப்படம்: மூன்றடி நிலம்- அளந்து கொடுத்தால் போதும்'
நரசிம்மரால் வதைக்கப்பட்ட இரண்யன் அசுர குணம் கொண்டவனாக இருந்தாலும், அவன் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவின் பக்தனாகத் திகழ்ந்தான். அந்த பிரகலாதனின் வம்சத்தில் வந்தவனே மகாபலிச் சக்கரவர்த்தி. மகாபலி மலைநாட்டினை நீதி வழுவாது நேர்மையுடன் ஆட்சிபுரிந்து வந்தான். இவனை மக்கள் "மாவேலி' என சிறப்புப் பெயரிட்டு அழைத்துப் போற்றினர். மிக நல்லவனாகத் திகழ்ந்தாலும் பெயரும் புகழும் பெற்றதால் ஆணவம் கொஞ்சம் கொஞ்சமாகத் தலை தூக்கியது. ஒரு கட்டத்தில் தேவலோகத்தையே வெற்றிகொண்டான். மகாபலி மன்னன் முற்பிறவியில் எலியாகப் பிறந்தவன். இந்த எலி, வேதாரண்யம் கோவில் வளாகத்திற்குள் சுற்றித் திரிந்து சுகமாக வாழ்ந்து வந்தது. ஒருசமயம் வேதாரண்யேஸ்வரர் கோவில் கருவறைக்குள் நுழைந்த அந்த எலி, அங்கே உணவு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தது. சுவாமி முன் சரவிளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அந்த விளக்கில் நெய் இடப்பட்டிருந்ததால் அதன் மணம் எலியைக் கவர்ந்தது. அதனால் அந்த விளக்கு நோக்கி மேலே பாய்ந்து ஏறியது எலி. அந்த வேளையில் விளக்கின் திரி அணையும் தறுவாயில் இருந்தது. எலி, விளக்கில் உறைந்திருந்த நெய்யினை உண்டபோது, தற்செயலாக திரி தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது. அணையவிருந்த ஆலய விளக்கைத் தூண்டி எரியச் செய்ததால் அந்த எலி மகாபுண்ணியம் பெற்றது. அதன் விளை வாக மறுபிறவியில் மலை நாட்டின் சக்கரவர்த்தி யாக- மகாபலியாக அசுர குலத்தில் பிறந்தது. பிரகலாதன் வம்சத்தில் பிறந்ததால் தெய்வீகப்பற்று இருந்தாலும், பிரக லாதனின் தந்தை இரணியனின் அசுர குணமும் சிறிதளவு இருந்ததால்தான் அவனுக்கு கர்வமும் உண்டானது. இந்நிலையில் மகாபலியின் அசுரகுணம் மேலோங்கியிருந்ததால், தேவலோகவாசிகள் பயத்துடன் மறைந்தே வசிக்கலானார்கள். இந்த நிலையை மாற்ற எண்ணிய அதிதி தேவி, தன் கணவர் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். விரதம் மேற்கொண்டு மகாவிஷ்ணுவை வணங்குமாறு கூறினார் காசிபர். அவ்வாறே அதிதி தவம் மேற்கொள்ள, அவள் தவத்திற்கு மகிழ்ந்து காட்சி தந்த மகா விஷ்ணு, ""என்ன வரம் வேண்டும்?'' என்றார். ""தாங்கள் எனக்கு மகனாகப் பிறந்து, மூவுலகத் தில் வாழும் தேவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்'' என்று வேண்டினாள்; மகாவிஷ்ணு வும் அருளினார். அதன்படி ஆவணி மாத சுக்லபட்ச துவாதசி திதியில், திருவோணம் கூடிய சுபயோக சுபதினத் தில் அதிதி- காசிப முனி தம்பதிக்கு வாமனராக அவதரித்தார் மகாவிஷ்ணு. குழந்தையாகக் காட்சி தந்த பகவான், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே ஐந்து வயது பாலகனாக மாறி காட்சி தந்தார். மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தை அறிந்த தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் மகிழ்ந்தனர். ஒவ்வொருவரும் ஒரு பரிசை அளித்து கௌரவித்தனர். இந்நிலையில் மகாபலிச் சக்கரவர்த்தி நர்மதைக் கரையில் அசுவமேத யாகம் செய்து கொண்டிருந்தான். யாகம் முடிந்ததும் அனைவருக்கும் தானம் கொடுத்து வாழ்த்துகள் பெற்றுக் கொண்டிருந்தான். மகாபலியின் யாகத்தாலும், தான தர்மத் தாலும் அவனது பலம் வலுப்படும் என்பதை அறிந்த வாமனர், மகாபலி தானம் கொடுக் கும் இடம் நோக்கி வந்தார். வாமனரை வர வேற்ற மகாபலி தன் மனைவி விந்தியா வலி மற்றும் மகள் ரத்னமாலாவுடன் வாமனருக்கு பாத பூஜை செய்தார். அப்போது மகாபலியின் மகள் ரத்னமாலா, "இந்தச் சிறுவன் எத்தனை அழகு! இவனுக்குத் தாயாகி பாலூட்டும் பாக்கி யம், எனக்கு அடுத்த பிறவியிலாவது கிட்ட வேண்டும்' என்று மனதிற்குள் நினைத் தாள். மகாபலியோ, "இந்தச் சிறுவன் வரவால் நம் நாடு மேன்மேலும் சிறப்பு பெறவேண்டும்' என்று நினைத்தான். அவர்களின் மனப்போக்கை அறிந்த வாமனர், "நினைத்தது நிறைவேறும்!' என்று அருளினார். "நான் நினைத்ததைத்தான் வாமனர் கூறுகிறார்' என்று இருவரும் எண்ணி மகிழ்ந்தார்கள். பாதபூஜை முடிந்ததும் மகாபலி, ""சுவாமி! தங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்க, ""பெரிதாக ஒன்றும் வேண்டாம். மூன்றடி நிலம்- அதுவும் என் காலடியில் அளந்து கொடுத்தால் போதும்'' என்றார் வாமனர். ""அவ்வாறே தருகிறேன்'' என்று மகாபலி கூற, அருகிலிருந்த அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் மகா பலியிடம் ரகசியமாக, ""மகாபலி, வந்திருப்பவன் சாதாரண சிறுவன் அல்ல. அவனுக்குத் தானம் தராதே. அவன் மூன்றடி மண் கேட்பது உன்னை அழிக்கத்தான்'' என்று கூறினார். ""வாக்குக் கொடுத்து விட்டேன். கொடுத்த வாக்கை மீற மாட்டான் மகாபலி'' என்று நீர் வார்க்க கமண்டலத்தை எடுத்தான். அப்போது சுக்கிராச்சாரியார் வண் டாக மாறி கமண்டலத் தின் வாயை நீர் வராமல் அடைத்தார். இதை யறிந்த வாமனர், தர்ப் பையை எடுத்துக் குத்தவே, அது வண்டின் ஒரு கண்ணைப் பழுதாக்கிவிட்டது. வலி பொறுக்கமுடியாமல் கமண்டலத்திலிருந்து வெளியேறிப் பறந்தார் சுக்கிராச்சாரியார். அதன்பின் தாரை வார்த்துக் கொடுத்தான் மகாபலி. மறுகணம் திரிவிக்கிரமனாக விண்ணுக்கும் மண்ணுக்கும் வளர்ந்து நின்றார் வாமனர். வானையும் பூமியையும் இரண்டடியால் அளந்து, ""மூன்றாவது அடிக்கு எங்கே இடம் மகாபலி?'' என்று கேட்க, அவரை வணங்கிய மகாபலி, ""இதோ என் தலை. மூன்றாவது அடியாக அளந்து ஆட்கொள்ளுங்கள்'' என்று திரிவிக்கிரமன் காலில் பணிந்தான். உடனே பகவான், மகாபலியின் தலையில் வலது காலை வைத்து, ""ஏழு சிரஞ்சீவிகளுள் நீயும் ஒருவனாக இடம் பெறுவாய். நான் உன்னை என்றும் பாதுகாப்பேன்'' என்றார். மகாவிஷ்ணுவின் பாதம் பட்டதும் மகாபலியின் ஆணவம் முழுவதுமாக அழிந்தது. அந்தச் சமயத்தில், ""பகவானே, ஒரு வரம் வேண்டும்'' என்றான் மகாபலி. ""என்ன?'' என்று பகவான் கேட்க, ""பிரபுவே, நான் பாதாளத்தில் அழுத் தப்படும் இந்த நாள் போற்றப்பட வேண்டும். இதே நாளில் நான் மீண்டும் என் நாட்டு மக்களைக் காண வரவேண்டும்'' என்றான். அந்த வரத்தையும் அருளி னார் பகவான். பகவானிடம் மகாபலி வாங்கிய வரத்தின்படி ஆவணி மாத திருவோண நாளில் மக்களைக் காண மலை நாட்டிற்கு மகாபலி வருவதாக நம்பப் படுகிறது. ஆகவே, மலை நாடான கேரளாவில் அந்த நாள் ஓணம் பண்டிகையாகக் கொண் டாடப்படுகிறது. ஆவணி மாத அஸ்த நட்சத்திரம் துவங்கி பத்து நாட்கள் விழா கொண்டாடப் பட்டாலும், "ஆவணி திருவோணம், அதற்கு முதல் நாளான தலை ஓணம், மறுநாள் வரும் ஒன்றாம் ஓணம் ஆகிய மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக- தெருவெங்கும் மலர் மணம் மணக்க விழா கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின்போது இடப்படும் "அத்தப்பூ' கோலம் மிகவும் பிரசித்தம். சாதாரண மலர்களுடன், ஆவணியில் மட்டும் மலரும் விசேஷ பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு இந்தக் கோலம் அமையும். மகாவிஷ்ணு குள்ள உருவில் வாமனராக அவதாரம் எடுத்து, அதேசமயம் நெடிதுயர்ந்த திரிவிக்கிரம திருக்கோலத்தில் காட்சி கொடுத்த தால்- அவதாரத்திற்குள் அவதாரமாகத் திகழ்வதால், ஆவணி மாதத் திருவோணம் மிகவும் போற்றப்படுகிறது. இந்தப் பண்டிகையின்போது பல்வகைப் பாயாசத்துடன் விருந்து படைப்பார்கள். இதை மலையாளத்தில் "ஓணசத்ய' என்பர். புத்தாடை அணிவது பண்டிகையின் சிறப்பு. ஓணம் பண்டிகைக்கென்றே சிறப்பாக புத்தாடை அணிவர். இப்பண்டிகையையொட்டி கேரளாவில் படகுப் போட்டிகள் நடைபெறும். கோவில்களில் பகவானுக்கு மஞ்சள் துண்டு அணிவித்து வழிபடுவது வழக்கம். பத்மநாபபுரம் பத்மநாப சுவாமிக்கு ஓணவில் சாற்றி வழிபடுவர். சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோவில் ஓணத்துக்காக ஐந்து நாட்கள் திறந்திருக்கும். குருவாயூரில் குழந்தை கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பால் பாயாசம் சமர்ப்பித்து வழிபாடு நடைபெறும். அன்று குருவாயூர் உன்னிகிருஷ் ணரை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இதற்கு ஒரு புராணக்கதை சொல்லப்படுகிறது. வாமனராக வந்த பகவான், தன் தந்தை மகாபலியை பாதாளத்தில் அழுத்தியதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மகாபலியின் மகள், பகவானை பழிவாங்க வேண்டுமென்று நினைத்தாள். "நயவஞ்சகனாக வந்தவனுக்கா நான் பாலூட்ட நினைத்தேன். இவனை விஷம் கொடுத்துக் கொன்றால் என்ன?' என்ற எண்ணம் அவள் மனதில் உதித்தது.காலம் சென்றது. யுகம் மாறியது. திருமால், கிருஷ்ணனாக தேவகியின் வயிற்றில் பிறந்து, யசோதையிடம் கோகுலத்தில் வளர்ந்தபோது, மகாபலியின் மகள் ரத்னமாலா கம்சனின் அரக்கர் குலத்தில் பூதகியாகப் பிறந்து வளர்ந்து வந்தாள். கிருஷ்ணன், கோகுலத்தில் வளர்வதை அறிந்த கம்சன், பூதகியை அழைத்து அவனைக் கொல்லும்படி கட்டளையிட்டான். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த பூதகி- அதாவது வாமன அவதாரத்தின்போது மகாபலியின் மகளாகப் பிறந்தவள், இதுதான் நல்ல சமயமென்று ஓர் அழகியாக மாறி கோகுலம் சென்றாள். அவள் வந்த வேளையில் வானத்தில் இடி மின்னல் தோன்றி, மழை வருவதற்கு அறிகுறியாக பலத்த காற்று வீசிக் கொண்டிருந்தது. அப்போது யசோதையின் வீட்டுக்கதவைத் தட்டினாள் பூதகி. கதவைத் திறந்த யசோதை, ""இந்த அகால வேளையில் வந்திருக்கும் நீ யாரம்மா?'' என்று இரக்கப்பட்டு கேட்டாள். ""அம்மா, எனக்கு பெண் குழந்தை பிறந்ததால், என் கணவர் வீட்டை விட்டு என்னைத் துரத்திவிட்டார். குழந்தையைக்கூட என்னிடம் தரவில்லை. இன்றிரவு இங்கே தங்குவதற்கு இடம் தாருங்கள். விடிந்ததும் சென்று விடுகிறேன்'' என்று கண்ணீர்விட்டாள். அந்தச் சமயத்தில் குழந்தை கண்ணன் அழும் குரல் கேட்கவே, ""அம்மா, குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. தொட்டிலை ஆட்டித் தாலாட்டவா?'' என்று கேட்க, யசோதையும் அவளை உள்ளே அனுமதித்தாள். இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசவே, விளக்குகள் அணைந்தன. எங்கும் இருள். இதுதான் தக்க சமயம் என்று குழந்தையை வாரி எடுத்து பூதகி தன் மார்போடு அணைத் தாள். முன்கூட்டியே மார்பகத்தில் விஷத்தைத் தடவிக் கொண்டிருந்தவள் குழந்தைக்குப் பால் கொடுப்பதற்கு முயற்சித்தாள். குழந்தை கிருஷ்ணன், அவள் மார்பகத்தை உறிஞ்சி, கால்களால் உதைக்கவே அவள் மல்லாக்க விழுந்து பிணமாகிப்போனாள். அணைந்த விளக்கை ஏற்றிக்கொண்டு வந்த யசோதை தரையில் அரக்கி ஒருத்தி பிணமாகக் கிடப்ப தைக் கண்டு அஞ்சி நிற்க, குழந்தை கிருஷ்ணனோ அரக்கியான பூதகியின்மீது கால்களை உதைத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் யசோதைக்குப் புரிந்தது, இவள் கம்சனால் அனுப்பப்பட்ட அரக்கி என்று. குழந்தையை வாரி எடுத்து அணைத்துக் கொண்டாள் யசோதை. இதில் தனிச்சிறப்பு என்னவென்றால் பகவான் கிருஷ்ணனைக் கொல்ல வந்த அரக்கி யானவள் பிணமானதும், அவளை இடுகாட்டில் எரியூட்டினார்கள். அப்போது பிணம் எரியும் போது வெளிப்படும் துர்நாற்றம் எழாமல், சந்தனக்கட்டையை எரித்தால் வரும் நறுமணம் போல வாசம் வந்ததாம். பகவானின் பாதங்கள் பூதகியின் உடல்மீது பட்டதால் அவள் புனிதம் அடைந்தாள் என்று புராண வரலாறு கூறுகிறது. மகாவிஷ்ணுவின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம் என்பதால், ஆவணி திருவோணம் மிகவும் போற்றப்படுகிறது. அன்று திருமால் கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபடும்போது, அவர் பாதங்களை தரிசித்தால் பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும்; வைகுண்டத்தில் ஓர் இடம் கிட்டும் என்பர் பெரியோர்

தர்மம்

"எங்கு தர்மம் உள்ளதோ அங்கு வெற்றி நிச்சயம்'
பாரத நாட்டின் பொக்கிஷமான மகாபாரதம், தர்மத்தையே நிலைக்களமாகக் கொண்டது. 

                                     புகைப்படம்: எங்கு தர்மம் உள்ளதோ அங்கு வெற்றி நிச்சயம்'
பாரத நாட்டின் பொக்கிஷமான மகாபாரதம், தர்மத்தையே நிலைக்களமாகக் கொண்டது. இதில் காணப்படும் தர்மங்கள் எண்ணிலடங்காதவை.மகாபாரதக் கதையில் வீரம், சூழ்ச்சி என எத்தனையோ இருந்தாலும், தர்மத்தின் அடிப்படையில்தான் வெற்றி கிட்டியிருக்கிறதே தவிர, வீரத்தினாலோ சூழ்ச்சியினாலோ மட்டுமல்ல. வீரமும் சூழ்ச்சியும் தற்காலிக வெற்றியைத் தேடும் உபாயங்கள். ஆனால் நிலையான- அழி வில்லாத வெற்றிக்கு தர்மமே முற்றிலும் சாதனமாக இருந்தது. பாண்டவர்கள் தர்மத்தைவிட்டு சிறிதும் விலகாதவர்கள். கௌரவர்கள் சாதுக்க ளான பாண்டவர்களுக்கு வஞ்சகமும் சூழ்ச்சியும் செய்து துன்பத்தையே கொடுத்தனர். துன்மதி கொண்ட துரியோதனன் பக்கத்திலும் நல்லவர் கள் இருந்தார்கள். இந்தப் பட்டியலில் முக்கிய இடம் பெறுபவள் துரியோதனனைப் பெற்றவளான காந்தாரிதேவியே. காந்தார தேசத்து இளவரசியான காந்தாரி, திருதராஷ்டிர மன்னன் பார்வை அற்றவன் என்று தெரிந்தேதான் மணம் புரிந்துகொண்டாள். பிறவிக் குருடனான திருதராஷ்டிரனை மணம் செய்துகொண்டபிறகு, தன் கணவன் காணாத இந்த உலகத்தை இனி தானும் பார்க்கக் கூடாது என்று, தன் இரண்டு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு இறுதி வரை வாழ்ந்தாள். இவளுடைய பதிவிரதா தர்மத்தின் முன்பு பரந் தாமனான கண்ணனும் செயலிழந்து நின்றான். பாரதப் போர் கடுமையாக நடந்து பதினேழு நாட்கள் முடிந்துவிட்டன. குருஷேத்ர புண்ணிய பூமி குருதி வெள்ளத்தில் மிதந்தது. கௌரவ சேனையின் பாசறையில் சூன்யம் நிறைந்திருந்தது. அவர்கள் தரப்பில் போரிட்ட மாவீரர்கள் அனைவரும் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார்கள். துரியோதனனுக்குத் துணையிருந்த நண்பன் கர்ணன், அருமைச் சகோதரர்கள், வஞ்சகமே உருவான சகுனி மாமன் யாவருமே இப்போது இல்லை. கௌரவர்களுக்காக- அஸ்தினாபுர அரசைக் காப்பதற்காகவே இருந்த பீஷ்ம பிதாமகர், உயிரை விடாமல் உத்திராயண புண்ணிய காலத்தை எதிர்பார்த்துக்கொண்டு வெட்டப் பட்ட மரம்போல அம்புப் படுக்கையில் சயனித்து விட்டார். தனித்து விடப்பட்ட அஸ்தினாபுரத்து இளவல் தன்னந்தனியாகத் தவிக்கிறான். சித்தம் தடுமாறி நிலை குலைந்து நிற்கிறான். பாண்டவர் பக்கம் வெற்றி கிட்டும் நிலை. துரியோதனனின் மனம் கொந்தளிக்கிறது; எதை யெல்லாமோ எண்ணுகிறது. அன்று பரமாத்மா கண்ணன் சொன்ன சொற்கள் நினைவில் நிழலாடுகிறது. "தர்மத்தை சூது கவ்வும்; காலம் வரும்போது தர்மமே வெல்லும் என்று சொன்னானே! அந்தக் காலம் வந்துவிட்டதே. எனக்குத் துணையாக யாருமே இல் லையே!' என்று கலங்குகிறான். அன்று அரச சபையில் "பாவி துச்சாதனனின் செந்நீர், துரியோதனனின் ரத்தம், மேவி இரண்டும் கலந்து குழலில் பூசி, நறுநெய் குளித்தபிறகே சீவிக் குழல் முடிப்பேன்' என்று கூந்தலைக் கலையவிட்ட பாஞ்சாலியின் சபதம் ஈட்டியாகக் குத்துகிறது. இருண்ட பாசறையில் தன்னந்தனி யாகப் புலம்பித் தவிக்கிறான். கூடாரத்தில் எங்கேயோ இருந்த பகடைக்காய்கள் அவனைப் பார்த்து சிரிப்பது போன்ற ஒரு பிரமை. வெறிபிடித்தவன்போல அங்கும் இங்கும் நடக்கிறான். பாசறைக் கதவருகே ஏதோ நிழலாடுகிறது. யாரோ வரும் காலடிச் சப்தமும் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறான். அங்கே அவனைப் பெற்ற அன்னை காந்தாரி நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, ""அம்மா, நீங்களா? என்ன இந்த வேளையில்... அதுவும் யுத்த பூமியில்?'' என்று வேதனையோடு கேட்டான். ""அன்பு மகனே, உன் நிலையை அறிந்து தாயான நான் எப்படி நிம்மதியாக இருப்பேன். குழந்தையின் தவிப்பை தாயையன்றி யார்தான் அறிவார். வருந்தாதே மகனே'' என்று அவன் தலையை அன்போடு வருடினாள். வணங்காமுடியான துரியோதனனுக்கு தாயின் வருடல் இதமளிக்கிறது. ""அம்மா! நாளை நடக்கும் போரில் எனக்கு மரணம் நிச்சயமென்று என் உள்ளுணர்வு அச்சுறுத்துகிறது'' என்றான். மகனின் நிலைகண்டு அன்பு மேலிட, ""கௌரவக் குலத்தோன்றலே! நீயா மரணத்தைக் கண்டு அச்சப்படுகிறாய். கோழையாகி விடாதே. நீ மரணத்திலிருந்து தப்ப வழியுண்டு மகனே. உன்னை யாரும் வெல்ல முடியாது. அதற்கு உபாயம் சொல்லத்தான் உன்னைத் தேடிவந்தேன்'' என்றாள் வாஞ்சையோடு. ""என்ன சொல்கிறீர்கள் தாயே?'' என்றான் துரியோதனன் ஆச்சரியத்தோடு. ""சுவேதனா! எனது கற்பு நெறியும் பதிவிரதா தர்மமும் உண்மையாக இருக்கு மாயின், உன்னை யாராலும்- எந்த அஸ்திரத்தினாலும் வெல்ல முடியாது. மரணமும் உன்னைத் தீண்டாது. நான் சொல்வதை நீ செய்யவேண்டும்'' என்றாள். ""சொல்லுங்கள் தாயே!'' ""துரியோதனா, இந்தப் போர்க்களத்தின் அருகிலுள்ள தடாகத்தில் குளித்துவிட்டு, பிறந்த மேனியாக என்னிடம் வா. எந்தவிதமான ஆடையோ ஆபரணமோ உன் மேனியில் இருக் கக்கூடாது. இத்தனைக் காலமாகக் கட்டியிருந்த கண் களைத் திறந்து, என் பரிபூரணமான கடாட்சத் தைப் பொழிந்து உன்னை ஆசீர்வதிக்கிறேன். எனது நயன தீட்சை உன் மேனியில் பட்டு விட்டால் உனக்கு மரணம் கிடையாது. விரை வாகப் போய் வா மகனே'' என்று துரிதப்படுத்தி னாள் காந்தாரி. ""அப்படியே தாயே'' என்று ஆனந்தமாக தடாகத்தை நோக்கி ஓடினான் காந்தாரி மைந்தன். அதேவேளை பாண்டவர் பாசறையில் இருந்த கண்ணனின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. துரியோதனனின் பாசறையில் காந்தாரிக்கும் துரியோதனனுக்கும் நடந்த உரையாடல்கள் எல்லாம் சர்வ வியாபியான கண்ணன் அறிந்துகொண்டான். காந்தாரியின் கற்பின் ஆற்றலையும், அவளுடைய பதிவிரதா தர்மத்தின் பவித்ரத்தையும் அறிந்த கண்ணன் கவலைப்படலானான். கடவுளான கண்ணனே கவலைப்படுவதா? ஆம்; காந்தாரியின் கற்பு எதையும் செய்யவல்லது. காந்தாரியின் திட்டப்படி துரியோதனன் தடாகத்தில் நீராடிவிட்டு பிறந்த மேனியோடு வந்து அவளுடைய நயன தீட்சையையும் ஆசி களையும் பெற்றுவிட்டால் அவனை யாருமே வெல்ல முடியாது. பதிவிரதா தர்மத்தின் முன்பாக பார்த்தசாரதியான கண்ணனாலும் எதுவும் செய்யமுடியாது. பாஞ்சாலியின் அவிழ்ந்த கூந்தலும் சபதமும் மாதவனுடைய மனதில் தோன்றுகிறது. பாண்டவ தூதன் கண்ணன் பாசறைக்கு வெளியே வந்து தடாகத்தை நோக்கி விரைந்தான். நட்ட நடுநிசி. யாரும் அறியாமல் மறைவான இடத்தில் நின்றான் மாயக்கண்ணன். காந்தாரி மைந்தன் தடாகத்தில் மூழ்கி நீராடியபின் பிறந்த மேனியுடன் நீர்த்திவலைகள் உடம்பில் வழிய மேலே எழுந்தான். அப்போது மெல்லிய குழலோசை கேட்கிறது. "என்ன இது! இந்த நள்ளிரவில் யார் குழலை இசைக்கிறார்கள்? எல்லாம் அந்த மாயாவி கிருஷ்ணன் வேலையாகத் தான் இருக்கும். அவர் வருவதற்குள் தாயிடம் சென்று விட வேண்டும்' என்று துடிப்புடன் கிளம்பும் போது, கபடமாகச் சிரித்தபடி எதிரிலே வந்து நின்றான் கண்ணன். அதைக் கண்டு அதிர்ச்சி யடைந்து நின்றுவிட்டான் துரியோதனன். ""கௌரவக் குலத் தோன்றலே! என்ன இது? ஏனிந்த அவலம்? எதற்காக இந்த விபரீத விளையாட்டு! எல்லா சாஸ்திரங்களும் அறிந்தவன்தானே நீ? இந்த மதியீனமான காரியம் செய்ய எப்படித் துணிந்தாய்?'' என்றான் கண்ணன். ""கண்ணா! நேரத்தை வீணாக்காமல் வழியை விடு. நான் உடனே என் தாயைக் காணவேண்டும். இந்த இடத்தை விட்டுச் சென்றுவிடு'' என்றான் வெறுப்போடு. ""துரியோதனா! நீ செய்யும் காரியம் சரியானது அல்ல. என்னதான் தாயாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே. தோளுக்குமேல் போனால் தோழன் என்பார்கள். இத்தனை வயது கடந்த ஆண் மகன் பிறந்த மேனியோடு எந்தப் பெண்ணையாவது பார்ப்பானா? உன் வீரமும் ஆற்றலும் எங்கே போயிற்று? நீ செய்யும் இந்தக் கேவலமான காரியம் பெண்மையையே இழிவுபடுத்துவதாக உள்ளதே!'' என்றான் கண்ணன் விஷமச் சிரிப்போடு. துரியோதனன் ஒரு வினாடி குழம்பி, ""கண்ணா, என்னிடம் தற்போது ஆடை எதுவுமே இல்லை'' என்றான் பரிதாபமாக. கண்ணன் அவசரமாக, ""துரியோதனா, கவலையை விடு. பக்கத்தில் உள்ள வாழை இலையைப் பறித்து உனது இடுப்பில் மட்டுமாவது மறைத்துக்கொண்டு உன் மாதாவிடம் செல்'' என்று சொல்லிவிட்டு, தான் வந்த வேலை முடிந்துவிட்ட திருப்தியோடு அங்கிருந்து நகர்ந்தான். ""அம்மா, அம்மா'' என்று கூவியபடி ஆவலோடு வந்தான் துரியோதனன். மகனின் குரலைக் கேட்ட காந்தாரி, மகனைப் பார்த்து அருளைப் பொழிய வேண்டும் என்று தன் கண்களின் கட்டுகளை அவிழ்த்தாள். தன் சக்தியை எல்லாம் திரட்டி தன் மகனின் தலையிலிருந்து ஒவ்வொரு அங்கமாக தனது பார்வையைச் செலுத்திக்கொண்டே வந்த காந்தாரி, இடுப்பிற்குக் கீழே இலை ஒன்று மூடியிருப்பதைக் கண்டு தீயை மிதித்தவள்போல அதிர்ச்சியானாள். தனது கற்பின் சக்தியாலும், பதிவிரதா தர்மத்தின் ஆற்றலாலும் தன் மகனைக் காப்பாற்றிவிடலாம் என்று திடமாக நம்பி வந்தாள். காந்தாரியின் எண்ணம் பலிக்கவில்லை. தனது பார்வை படமுடியாத இடுப்பிற்குக் கீழே துரியோதனன் தாக்கப்பட்டால் அவன் அழிவு நிச்சயம் என்பதை எண்ணி கண்ணீர் வடித்தாள். பதினெட்டாம் நாள் யுத்தம். பீமனுக்கும் துரியோதனனுக்கும் கடும் போர். எல்லாவித அஸ்திரங்களையும் கையாண்ட பிறகு கதாயுத யுத்தம் தொடங்கியது. துரியோதனனு டைய கதையைத் தாக்கினான் பீமன். அவனுடைய கதாயுதம் மேலே எழும்பிற்று. அதைப் பிடிப்பதற்காக துரியோதனன் மேலே எம்பிப் பாய்ந்தான். இந்தத் தருணத்தில் கண்ணன் தனது தொடையைத் தட்டி சைகை காட்டி, துரியோதன னின் தொடையில் அடிக்கும்படி பீமனுக்கு உணர்த்தினான். ஆகாயத்தின் உயர்ந்த அரவக் கொடியோன் கதையைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கும்போது பீமன் அவனது தொடையில் தன் கதையால் ஓங்கி அடித்தான். அலறித் துடித்துக்கொண்டு கீழே விழுந்த துரியோதனன் தன் உயிரை விட்டான். திரௌபதியின் கற்பின் ஆற்றல் துரியோதன னின் முடிவிற்கு சபதம் இட்டது. காந்தாரியின் கற்பின் சக்தி அவனைக் காப்பாற்ற முயன்றது. பாரதப் போர் தொடங்குவதற்கு முன்பாக தருமபுத்திரன், துரியோதனன் இருவரும் காந்தாரியை வந்து வணங்கும்போது, "எங்கு தர்மம் உள்ளதோ அங்கு வெற்றி நிச்சயம்' என்று ஆசி கூறிய காந்தாரியின் வாக்கு பொய்யாகாமல் பலித்துவிட்டது

இதில் காணப்படும் தர்மங்கள் எண்ணிலடங்காதவை.மகாபாரதக் கதையில் வீரம், சூழ்ச்சி என எத்தனையோ இருந்தாலும், தர்மத்தின் அடிப்படையில்தான் வெற்றி கிட்டியிருக்கிறதே தவிர, வீரத்தினாலோ சூழ்ச்சியினாலோ மட்டுமல்ல. வீரமும் சூழ்ச்சியும் தற்காலிக வெற்றியைத் தேடும் உபாயங்கள். ஆனால் நிலையான- அழி வில்லாத வெற்றிக்கு தர்மமே முற்றிலும் சாதனமாக இருந்தது. பாண்டவர்கள் தர்மத்தைவிட்டு சிறிதும் விலகாதவர்கள். கௌரவர்கள் சாதுக்க ளான பாண்டவர்களுக்கு வஞ்சகமும் சூழ்ச்சியும் செய்து துன்பத்தையே கொடுத்தனர். துன்மதி கொண்ட துரியோதனன் பக்கத்திலும் நல்லவர் கள் இருந்தார்கள். இந்தப் பட்டியலில் முக்கிய இடம் பெறுபவள் துரியோதனனைப் பெற்றவளான காந்தாரிதேவியே. காந்தார தேசத்து இளவரசியான காந்தாரி, திருதராஷ்டிர மன்னன் பார்வை அற்றவன் என்று தெரிந்தேதான் மணம் புரிந்துகொண்டாள். பிறவிக் குருடனான திருதராஷ்டிரனை மணம் செய்துகொண்டபிறகு, தன் கணவன் காணாத இந்த உலகத்தை இனி தானும் பார்க்கக் கூடாது என்று, தன் இரண்டு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு இறுதி வரை வாழ்ந்தாள். இவளுடைய பதிவிரதா தர்மத்தின் முன்பு பரந் தாமனான கண்ணனும் செயலிழந்து நின்றான். பாரதப் போர் கடுமையாக நடந்து பதினேழு நாட்கள் முடிந்துவிட்டன. குருஷேத்ர புண்ணிய பூமி குருதி வெள்ளத்தில் மிதந்தது. கௌரவ சேனையின் பாசறையில் சூன்யம் நிறைந்திருந்தது. அவர்கள் தரப்பில் போரிட்ட மாவீரர்கள் அனைவரும் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார்கள். துரியோதனனுக்குத் துணையிருந்த நண்பன் கர்ணன், அருமைச் சகோதரர்கள், வஞ்சகமே உருவான சகுனி மாமன் யாவருமே இப்போது இல்லை. கௌரவர்களுக்காக- அஸ்தினாபுர அரசைக் காப்பதற்காகவே இருந்த பீஷ்ம பிதாமகர், உயிரை விடாமல் உத்திராயண புண்ணிய காலத்தை எதிர்பார்த்துக்கொண்டு வெட்டப் பட்ட மரம்போல அம்புப் படுக்கையில் சயனித்து விட்டார். தனித்து விடப்பட்ட அஸ்தினாபுரத்து இளவல் தன்னந்தனியாகத் தவிக்கிறான். சித்தம் தடுமாறி நிலை குலைந்து நிற்கிறான். பாண்டவர் பக்கம் வெற்றி கிட்டும் நிலை. துரியோதனனின் மனம் கொந்தளிக்கிறது; எதை யெல்லாமோ எண்ணுகிறது. அன்று பரமாத்மா கண்ணன் சொன்ன சொற்கள் நினைவில் நிழலாடுகிறது. "தர்மத்தை சூது கவ்வும்; காலம் வரும்போது தர்மமே வெல்லும் என்று சொன்னானே! அந்தக் காலம் வந்துவிட்டதே. எனக்குத் துணையாக யாருமே இல் லையே!' என்று கலங்குகிறான். அன்று அரச சபையில் "பாவி துச்சாதனனின் செந்நீர், துரியோதனனின் ரத்தம், மேவி இரண்டும் கலந்து குழலில் பூசி, நறுநெய் குளித்தபிறகே சீவிக் குழல் முடிப்பேன்' என்று கூந்தலைக் கலையவிட்ட பாஞ்சாலியின் சபதம் ஈட்டியாகக் குத்துகிறது. இருண்ட பாசறையில் தன்னந்தனி யாகப் புலம்பித் தவிக்கிறான். கூடாரத்தில் எங்கேயோ இருந்த பகடைக்காய்கள் அவனைப் பார்த்து சிரிப்பது போன்ற ஒரு பிரமை. வெறிபிடித்தவன்போல அங்கும் இங்கும் நடக்கிறான். பாசறைக் கதவருகே ஏதோ நிழலாடுகிறது. யாரோ வரும் காலடிச் சப்தமும் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறான். அங்கே அவனைப் பெற்ற அன்னை காந்தாரி நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, ""அம்மா, நீங்களா? என்ன இந்த வேளையில்... அதுவும் யுத்த பூமியில்?'' என்று வேதனையோடு கேட்டான். ""அன்பு மகனே, உன் நிலையை அறிந்து தாயான நான் எப்படி நிம்மதியாக இருப்பேன். குழந்தையின் தவிப்பை தாயையன்றி யார்தான் அறிவார். வருந்தாதே மகனே'' என்று அவன் தலையை அன்போடு வருடினாள். வணங்காமுடியான துரியோதனனுக்கு தாயின் வருடல் இதமளிக்கிறது. ""அம்மா! நாளை நடக்கும் போரில் எனக்கு மரணம் நிச்சயமென்று என் உள்ளுணர்வு அச்சுறுத்துகிறது'' என்றான். மகனின் நிலைகண்டு அன்பு மேலிட, ""கௌரவக் குலத்தோன்றலே! நீயா மரணத்தைக் கண்டு அச்சப்படுகிறாய். கோழையாகி விடாதே. நீ மரணத்திலிருந்து தப்ப வழியுண்டு மகனே. உன்னை யாரும் வெல்ல முடியாது. அதற்கு உபாயம் சொல்லத்தான் உன்னைத் தேடிவந்தேன்'' என்றாள் வாஞ்சையோடு. ""என்ன சொல்கிறீர்கள் தாயே?'' என்றான் துரியோதனன் ஆச்சரியத்தோடு. ""சுவேதனா! எனது கற்பு நெறியும் பதிவிரதா தர்மமும் உண்மையாக இருக்கு மாயின், உன்னை யாராலும்- எந்த அஸ்திரத்தினாலும் வெல்ல முடியாது. மரணமும் உன்னைத் தீண்டாது. நான் சொல்வதை நீ செய்யவேண்டும்'' என்றாள். ""சொல்லுங்கள் தாயே!'' ""துரியோதனா, இந்தப் போர்க்களத்தின் அருகிலுள்ள தடாகத்தில் குளித்துவிட்டு, பிறந்த மேனியாக என்னிடம் வா. எந்தவிதமான ஆடையோ ஆபரணமோ உன் மேனியில் இருக் கக்கூடாது. இத்தனைக் காலமாகக் கட்டியிருந்த கண் களைத் திறந்து, என் பரிபூரணமான கடாட்சத் தைப் பொழிந்து உன்னை ஆசீர்வதிக்கிறேன். எனது நயன தீட்சை உன் மேனியில் பட்டு விட்டால் உனக்கு மரணம் கிடையாது. விரை வாகப் போய் வா மகனே'' என்று துரிதப்படுத்தி னாள் காந்தாரி. ""அப்படியே தாயே'' என்று ஆனந்தமாக தடாகத்தை நோக்கி ஓடினான் காந்தாரி மைந்தன். அதேவேளை பாண்டவர் பாசறையில் இருந்த கண்ணனின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. துரியோதனனின் பாசறையில் காந்தாரிக்கும் துரியோதனனுக்கும் நடந்த உரையாடல்கள் எல்லாம் சர்வ வியாபியான கண்ணன் அறிந்துகொண்டான். காந்தாரியின் கற்பின் ஆற்றலையும், அவளுடைய பதிவிரதா தர்மத்தின் பவித்ரத்தையும் அறிந்த கண்ணன் கவலைப்படலானான். கடவுளான கண்ணனே கவலைப்படுவதா? ஆம்; காந்தாரியின் கற்பு எதையும் செய்யவல்லது. காந்தாரியின் திட்டப்படி துரியோதனன் தடாகத்தில் நீராடிவிட்டு பிறந்த மேனியோடு வந்து அவளுடைய நயன தீட்சையையும் ஆசி களையும் பெற்றுவிட்டால் அவனை யாருமே வெல்ல முடியாது. பதிவிரதா தர்மத்தின் முன்பாக பார்த்தசாரதியான கண்ணனாலும் எதுவும் செய்யமுடியாது. பாஞ்சாலியின் அவிழ்ந்த கூந்தலும் சபதமும் மாதவனுடைய மனதில் தோன்றுகிறது. பாண்டவ தூதன் கண்ணன் பாசறைக்கு வெளியே வந்து தடாகத்தை நோக்கி விரைந்தான். நட்ட நடுநிசி. யாரும் அறியாமல் மறைவான இடத்தில் நின்றான் மாயக்கண்ணன். காந்தாரி மைந்தன் தடாகத்தில் மூழ்கி நீராடியபின் பிறந்த மேனியுடன் நீர்த்திவலைகள் உடம்பில் வழிய மேலே எழுந்தான். அப்போது மெல்லிய குழலோசை கேட்கிறது. "என்ன இது! இந்த நள்ளிரவில் யார் குழலை இசைக்கிறார்கள்? எல்லாம் அந்த மாயாவி கிருஷ்ணன் வேலையாகத் தான் இருக்கும். அவர் வருவதற்குள் தாயிடம் சென்று விட வேண்டும்' என்று துடிப்புடன் கிளம்பும் போது, கபடமாகச் சிரித்தபடி எதிரிலே வந்து நின்றான் கண்ணன். அதைக் கண்டு அதிர்ச்சி யடைந்து நின்றுவிட்டான் துரியோதனன். ""கௌரவக் குலத் தோன்றலே! என்ன இது? ஏனிந்த அவலம்? எதற்காக இந்த விபரீத விளையாட்டு! எல்லா சாஸ்திரங்களும் அறிந்தவன்தானே நீ? இந்த மதியீனமான காரியம் செய்ய எப்படித் துணிந்தாய்?'' என்றான் கண்ணன். ""கண்ணா! நேரத்தை வீணாக்காமல் வழியை விடு. நான் உடனே என் தாயைக் காணவேண்டும். இந்த இடத்தை விட்டுச் சென்றுவிடு'' என்றான் வெறுப்போடு. ""துரியோதனா! நீ செய்யும் காரியம் சரியானது அல்ல. என்னதான் தாயாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே. தோளுக்குமேல் போனால் தோழன் என்பார்கள். இத்தனை வயது கடந்த ஆண் மகன் பிறந்த மேனியோடு எந்தப் பெண்ணையாவது பார்ப்பானா? உன் வீரமும் ஆற்றலும் எங்கே போயிற்று? நீ செய்யும் இந்தக் கேவலமான காரியம் பெண்மையையே இழிவுபடுத்துவதாக உள்ளதே!'' என்றான் கண்ணன் விஷமச் சிரிப்போடு. துரியோதனன் ஒரு வினாடி குழம்பி, ""கண்ணா, என்னிடம் தற்போது ஆடை எதுவுமே இல்லை'' என்றான் பரிதாபமாக. கண்ணன் அவசரமாக, ""துரியோதனா, கவலையை விடு. பக்கத்தில் உள்ள வாழை இலையைப் பறித்து உனது இடுப்பில் மட்டுமாவது மறைத்துக்கொண்டு உன் மாதாவிடம் செல்'' என்று சொல்லிவிட்டு, தான் வந்த வேலை முடிந்துவிட்ட திருப்தியோடு அங்கிருந்து நகர்ந்தான். ""அம்மா, அம்மா'' என்று கூவியபடி ஆவலோடு வந்தான் துரியோதனன். மகனின் குரலைக் கேட்ட காந்தாரி, மகனைப் பார்த்து அருளைப் பொழிய வேண்டும் என்று தன் கண்களின் கட்டுகளை அவிழ்த்தாள். தன் சக்தியை எல்லாம் திரட்டி தன் மகனின் தலையிலிருந்து ஒவ்வொரு அங்கமாக தனது பார்வையைச் செலுத்திக்கொண்டே வந்த காந்தாரி, இடுப்பிற்குக் கீழே இலை ஒன்று மூடியிருப்பதைக் கண்டு தீயை மிதித்தவள்போல அதிர்ச்சியானாள். தனது கற்பின் சக்தியாலும், பதிவிரதா தர்மத்தின் ஆற்றலாலும் தன் மகனைக் காப்பாற்றிவிடலாம் என்று திடமாக நம்பி வந்தாள். காந்தாரியின் எண்ணம் பலிக்கவில்லை. தனது பார்வை படமுடியாத இடுப்பிற்குக் கீழே துரியோதனன் தாக்கப்பட்டால் அவன் அழிவு நிச்சயம் என்பதை எண்ணி கண்ணீர் வடித்தாள். பதினெட்டாம் நாள் யுத்தம். பீமனுக்கும் துரியோதனனுக்கும் கடும் போர். எல்லாவித அஸ்திரங்களையும் கையாண்ட பிறகு கதாயுத யுத்தம் தொடங்கியது. துரியோதனனு டைய கதையைத் தாக்கினான் பீமன். அவனுடைய கதாயுதம் மேலே எழும்பிற்று. அதைப் பிடிப்பதற்காக துரியோதனன் மேலே எம்பிப் பாய்ந்தான். இந்தத் தருணத்தில் கண்ணன் தனது தொடையைத் தட்டி சைகை காட்டி, துரியோதன னின் தொடையில் அடிக்கும்படி பீமனுக்கு உணர்த்தினான். ஆகாயத்தின் உயர்ந்த அரவக் கொடியோன் கதையைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கும்போது பீமன் அவனது தொடையில் தன் கதையால் ஓங்கி அடித்தான். அலறித் துடித்துக்கொண்டு கீழே விழுந்த துரியோதனன் தன் உயிரை விட்டான். திரௌபதியின் கற்பின் ஆற்றல் துரியோதன னின் முடிவிற்கு சபதம் இட்டது. காந்தாரியின் கற்பின் சக்தி அவனைக் காப்பாற்ற முயன்றது. பாரதப் போர் தொடங்குவதற்கு முன்பாக தருமபுத்திரன், துரியோதனன் இருவரும் காந்தாரியை வந்து வணங்கும்போது, "எங்கு தர்மம் உள்ளதோ அங்கு வெற்றி நிச்சயம்' என்று ஆசி கூறிய காந்தாரியின் வாக்கு பொய்யாகாமல் பலித்துவிட்டது.....................................

                                            பகிர்வில் ர.சடகோபால்.BA                                                            

விநாயகர் தத்துவம்

தோப்புக்கரணம் போடுவது ஏன்?
                                
                              புகைப்படம்: விநாயகர்  தத்துவம்
தோப்புக்கரணம் போடுவது ஏன்?
 
விஷ்ணு தாம் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று சக்ராயுதம். அவர் அச்சக்கரத்தை ஒரு போரில் ததீசி என்ற முனிவர் மேல் ஏவ அது சக்தி இழந்து திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.

அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றார். இதனால் விஷ்ணு மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு சிவனை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவனின் ஆயிரம் திருநாமங்களாகிய "சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.

மனம் மகிழ்ந்த சிவபெருமான் முன்பொருசமயம் ஜலந்தராசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சுதர்சனம் எனும் சக்கரப்படையை விஷ்ணுவுக்கு கொடுத்தார். விஷ்ணு திரும்பி வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார். விஷ்ணுவின் கையிலிருந்த சுதர்சனக் சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக் கொண்டார்.

அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு, தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இருகாதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோர்பி, கர்ணம் இட்டார். இந்த செயல் பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் விநாயகர் தம் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.அப்போது அவர் வாயில் இருந்த சுதர்சனச் சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசி பெற்றார் விஷ்ணு. (இந்த கணபதி விகடச்சக்கர விநாயகர் என போற்றப்படுகிறார். இவர் காஞ்சீபுரம் கோவிலில் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார்). இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.....

விஷ்ணு தாம் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று சக்ராயுதம். அவர் அச்சக்கரத்தை ஒரு போரில் ததீசி என்ற முனிவர் மேல் ஏவ அது சக்தி இழந்து திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.

அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றார். இதனால் விஷ்ணு மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு சிவனை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவனின் ஆயிரம் திருநாமங்களாகிய "சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.

மனம் மகிழ்ந்த சிவபெருமான் முன்பொருசமயம் ஜலந்தராசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சுதர்சனம் எனும் சக்கரப்படையை விஷ்ணுவுக்கு கொடுத்தார். விஷ்ணு திரும்பி வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார். விஷ்ணுவின் கையிலிருந்த சுதர்சனக் சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக் கொண்டார்.

அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு, தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இருகாதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோர்பி, கர்ணம் இட்டார். இந்த செயல் பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் விநாயகர் தம் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.

அப்போது அவர் வாயில் இருந்த சுதர்சனச் சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசி பெற்றார் விஷ்ணு. (இந்த கணபதி விகடச்சக்கர விநாயகர் என போற்றப்படுகிறார். இவர் காஞ்சீபுரம் கோவிலில் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார்). இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.....

                                           பகிர்வில் ர.சடகோபால் .BA