வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

சரஸ்வதி மந்திரம்

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க கீழ்க்கண்ட சரஸ்வதி மந்திரம் மிகவும் சிறந்தது .காலையில் இதை நூற்றி எட்டு முறை சொல்லிவந்தால் நல்லபலன் உண்டு .மொத்தம் ஒருலட்சத்து இருபது ஐந்தாயிரம் முறை சொன்னால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் .
இதோ அந்தமந்திரம் ......ஓம்ஹிரீம் ஐம்ஹிரீம் சரஸ்வத்யை நமஹ என்பது .
இதில் ஹிரீம் என்பது சிந்தாமணி பீஜம் ,ஐம் என்பது வாக்பீஜம் .இதில் ஹிரீம் எனபது சிந்தாமணி பீஜம் என்று பார்த்தோம் ,சிந்தாமணி என்பது தேவ லோகத்தில் இந்திரனிடம் இருக்கும் மணி இதை வைத்து இருந்தால் நினைப்பது நடக்கும் கேட்டது கிடைக்கும் .அதைபோல் இந்த பீஜத்தை அதிகமாக உருஜெபித்தால் நினைத்த காரியம் வெற்றியடையும் .மேலும் ,குருவின் நட்சத்திரமான புனர்பூசம் ,விசாகம் ஆகிய நட்செதிரங்களில் பெருமாள் கோவில் சென்று துளசி மாலை சாத்தி அர்ச்சனை செய்து ,தீர்த்தம் வாங்கி சாப்பிட்டு வந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்

கருத்துகள் இல்லை: