காணுதற்கே யின்மைமொன்றுக ருவைக் கேளு
காசினியில் வேறெல்லாங் காய்க்கும் பூக்கும்
தோணுதற்கு சொன்ன பலர் வேறே மைந்தா
சுத்தமுடன் றானுலர்த்திந றுக்கிக் கொண்டு
பூணுதற்கு மால்தேவிந ருக்கிக் கொஞ்சும்
பக்தியுடன் பாம்பரணை பிச்சுங்கூட்டி
ஆணுவத்தான் மூன்றுமொன்றாய் பொடித்துக் கொண்டே
வப்பனே அயக்கரண்டி தன்னிற் போடே.
- இவ்வுலகில் இன்னுமொரு அதிசயத்தை கேளு இப்பூமியில் வேரெல்லாம் பூத்துக் காய்க்கும் மூலிகையின் வேரினை எடுத்து உலர்த்தி நறுக்கிக் கொண்டு அதனுடன் தாளகம் பாம்பரணையின் பிச்சு ஆகியவற்றை சம அளவாக எடுத்து பொடித்துக் கொண்டு அயக்கரண்டியில் போட வேண்டும் .
தன்னிலே பசுநெய்யால் வறுத்துக் கொண்டு
சாதகமாய் காகிதத்திற்று ழாவி வைத்தே
உன்னிதமாய் பசுநெய்யால றைத்து மைந்தா
உறுதியுள்ள தந்தமென்ற செப்பில் வைத்துத்
தன்னிலையை தானறிந்துதி யானஞ் செய்து
தன்மையுள்ள வெற்றிலையிற்ற டவிப் பாரு
உன்னிதமாய் வெகுதூர முள்ள செய்தி
உறுதியுடன் தோணுமடா வுற்றுப் பாரே
-அகத்தியர் பரிபூரணம்-400
- அதனை பசு நெய்விட்டு வறுத்து துழாவி வைத்துக் கொள்ளவும். பிறகு கல்வத்திலிட்டு மேலுமந்த பசுநெய்விட்டு அரைத்து தந்தச் சிமிழில் வைத்துக் கொள்ளவும். குருவை நினைத்து தியானம் செய்து வெற்றிலையில் தடவி பார்க்க வெகு தூரமுள்ள செய்தியானது தோன்றும்.
பகிர்வில் ர.சடகோபால்.BA