தோற்றுமடா மேனியொன்று தனித்து நின்றால்
சுத்தி செய்து பால் பொங்கல் இட்டுப்பின்னும்
மாற்றமுடன் கலைக்கொம்பால் கெல்லிக்கொண்டு
மந்திரந்தான் துட்டமிருக ஆகர்ஷணி
ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகாவென்று
சொல்லியே வாங்கிதன் வாயிற்போட
ஆற்றமுடன் மிருகங்கள் தன்னை நோக்கி
அழைத்துடனே மிருக ஆக்ருஷ்ணமுமமே.
-கருவூரார்
பொருள்:
குப்பைமேனி செடி தனியாக முளைத்திருந்தால் அந்த இடத்தில் சுத்தம் செய்து பால்,பொங்கல் வைத்து மான் கொம்பால் கொத்தி
"துட்ட மிருக ஆகர்ஷணி ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகா " என்று மந்திரம் சொல்லி வேரை பிடுங்கி வாயில் அதக்கிக்கொண்டு மிருகங்களை அழைக்க அவை வரும் .
பகிர்வில் .ர.சடகோபால்.BA