சனி, 20 பிப்ரவரி, 2016

சிவனுக்குரிய விபூதி அணியும்போது சொல்ல வேண்டிய மந்திரம்

சிவனுக்குரிய விபூதி அணியும்போது சொல்ல வேண்டிய மந்திரம்சிசிவனுக்குரிய விபூதி அணியும்போது இம்மந்திரத்தை சொல்லி நெற்றியில் விபூதி தரித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு அணியும்போது

விபூதியின் முழுப்பலனும் கிடைக்கும்.

பாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்ம கல்மஷ பக்ஷணாத்  
பூதி; பூதிகரீபும்ஸாம் ரக்ஷா ரக்ஷாகரீ சுபா.

சிவனுக்குரிய விபூதி அணியும்போது சொல்ல வேண்டிய மந்திரம்

சிவனுக்குரிய விபூதி அணியும்போது சொல்ல வேண்டிய மந்திரம்


சிவனுக்குரிய விபூதி அணியும்போது இம்மந்திரத்தை சொல்லி நெற்றியில் விபூதி தரித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு அணியும்போது
விபூதியின் முழுப்பலனும் கிடைக்கும்.

பாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்ம கல்மஷ பக்ஷணாத்  
பூதி; பூதிகரீபும்ஸாம் ரக்ஷா ரக்ஷாகரீ சுபா.

மகேஸ்வரி தியான மந்திரம்

மகேஸ்வரி தியான மந்திரம்

)
     ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச மஹாதேவீம் சதுர்புஜாம்
ஜடாமகுட ஸம்யுக்தாம்
சுக்லவர்ணாம் ஸுசோபிதாம்
வரதாபய ஹஸ்தாம் தாம் ம்ருகம் டக்காம் ச தாரிணீம்
வ்ருஷவாஹன ஸமாரூடாம்
வந்தே மாஹேச்வரீம் சுபாம்

ஒரு முகம், மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவளும், ஜடாமகுடத்தைத் தரித்திருப்பவளும், வெண்மை நிறத்துடன் மிக அழகாக ஒளிர்பவளும், வரத, அபய முத்திரைகளைக் கொண்டவளும், மான், உடுக்கை இவற்றைக் கைகளில் ஏந்தியிருப்பவளும், வ்ருஷப வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், மகாதேவியும் மங்கள வடிவினளும் ஆன மாகேஸ்வரியை (மகேசுவரி) தியானம் செய்து பூஜிக்கிறேன்

வாஸ்து குறை நீங்க மந்திரம்

வாஸ்து குறை நீங்க மந்திரம்

     ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:

- வீட்டில் வாஸ்து குறை இருந்தால் இந்த மந்திரத்தை தினமும் 12 முறை உச்சரிக்க எல்லா பிரச்சனைகளும் நீங்கி நலமுண்டாகும்

பிராம்மி தியானம்

பிராம்மி தியானம்

         சதுர்புஜாம் சதுர்வக்த்ராம்
பீதமால்யாம் ப்ரோஜ்வலாம்
வரதாபய ஹஸ்தாம் ச ஸாக்ஷமாலாம்
ஸகண்டிகாம் ஜடாமகுட ஸம்யுக்தாம்
ஹம்ஸவாஹன ஸுஸ்திதாம்
ஸர்வாபரண ஸம்யுக்தாம்
ப்ராஹ்மீம் த்யாத்வா பூஜயேத்

நான்கு முகங்களையும் நான்கு கைகளையும் உடையவளும், மஞ்சள் நிற ஆடை, மாலை இவற்றால் மிகவும் பிரகாசிக்கின்றவளாகவும், வரத, அபய முத்திரைகளைக் கைகளில் ஏந்தியிருப்பவளும், உத்திராக்க மாலையை அணிந்திருப்பவளும், கையில் மணியைத் தரித்திருப்பவளும் ஜடா மகுடத்தைக் கொண்டவளும், அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், எல்லாவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பவளுமான பிராம்மி தேவியைத் தியானம் செய்து பூஜிக்கிறேன்.

நன்மைகள் பெருக, துயரங்கள் விலக...

நன்மைகள் பெருக, துயரங்கள் விலக...


     ஆதாரே ப்ரதம: ஸஹஸ்ர கிரண: தாராதிப: ஸவாலயே
மா ஹேயோ மணிபூரகே ஹ்ருதிபுத கண்டேச வாசஸ்பதி:
ப்ருமத்யே ப்ருகு நந்தன: தினமணே: புத்ர த்ரிகூட ஸ்தலே
நாடீ மர்மஸு ராஹு கேது குளிகர: குர்யாத் ஸனோ மங்களம்.
நவக்ரக ஸ்லோகம்

பொதுப் பொருள்:

மூலத்தில் கதிரவனும் ஸ்வாதிஷ்டானத்தில் சந்திரனும் மணிபூரகத்தில் சீலமிகு அங்காரகனும் அநாகத்தில் புதனும் விசுத்தியிலே குருவும் சுக்கிரபகவான் ஆக்ஞையிலும் சனிபகவான் சுழிமுனையிலும் நாடிதனில் ராகுவும் மர்மக் குறிதனில் கேதுபகவானும் நின்று எங்களுக்கு எப்போதும் நன்மைகளைப் பெருக்கட்டும்; எங்கள் துயரங்களை விலக்கட்டும்.

(இத்துதியை தினந்தோறும் பாராயணம் செய்து வர கோள்களினால் விளையும் துயரங்கள் அகன்று நன்மையே நிலைக்கும்

வஜ்ர தேகம் பெற ஸ்ரீ நரசிம்ம மந்திரம்

வஜ்ர தேகம் பெற ஸ்ரீ நரசிம்ம மந்திரம்

         ஓம் நமோ நாரசிம்ஹாய வஜ்ரதம்ஷ்ட்ராய வஜ்ரினே
வஜ்ர தேகாய வஜ்ராய நமோ வஜ்ரா நகாய ச !!

இந்த மந்திரத்தினை தினமும் 10 முறை பாராயணம் செய்யவும். ஒரு கப் பசும்பாலை வைத்துப் பாராயணம் செய்து அதைக் குடித்து வந்தால் வஜ்ர தேகம் பெறலாம். ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியின் அனுக்ரஹத்தால்

நோயை விரட்டும் தியான சுலோகம்

நோயை விரட்டும் தியான சுலோகம்

         
அதர்வண வேத சரப மந்திரன் எல்லா பாபங்களையும் போக்கி நம்மை காக்க வல்லது அந்த தியான சுலோகம் வருமாறு:-

ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:   
பக்ஷீ சதுர் பாஹுக:
பாதா கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர:   
 காலாக்னி கோடித்யுதி:
விச்வ க்ஷோப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:   
பிரும்மேந்திர முக்யைஸ்துத:
கங்கா சந்தரதர: புரஸ்த சாப:   
ஸத் யோரிபுக் னோஸ்து

(சரபேஸ்வரருக்கு எட்டு கால்களும், 4 கைகளும், இரு இறக்கைகளும், கருடனைப் போன்ற மூக்கும், கால்களால் நரசிம்மத்தை சாந்தப்படுத்தி வைத்தும், காலாக்னி போன்ற காந்தியும், கங்கை, சந்திரன், மான், மழு, ஏந்தி உலகத்தின் கஷ்டத்தைப் போக்க மனம் கொண்ட சரபேஸ்வரர் என்முன் தோன்றி என்னைக் காத்து அருள வேண்டும்.)

இந்த தியான சுலோகத்தை மனப்பாடம் செய்து தினம் காலை மாலை பாராயணம் செய்கிறவர்கள் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயினின்றும் விடுபட்டு சகல மங்களங்களையும் பெறுவார்கள்