சனி, 20 பிப்ரவரி, 2016

மகேஸ்வரி தியான மந்திரம்

மகேஸ்வரி தியான மந்திரம்

)
     ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச மஹாதேவீம் சதுர்புஜாம்
ஜடாமகுட ஸம்யுக்தாம்
சுக்லவர்ணாம் ஸுசோபிதாம்
வரதாபய ஹஸ்தாம் தாம் ம்ருகம் டக்காம் ச தாரிணீம்
வ்ருஷவாஹன ஸமாரூடாம்
வந்தே மாஹேச்வரீம் சுபாம்

ஒரு முகம், மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவளும், ஜடாமகுடத்தைத் தரித்திருப்பவளும், வெண்மை நிறத்துடன் மிக அழகாக ஒளிர்பவளும், வரத, அபய முத்திரைகளைக் கொண்டவளும், மான், உடுக்கை இவற்றைக் கைகளில் ஏந்தியிருப்பவளும், வ்ருஷப வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், மகாதேவியும் மங்கள வடிவினளும் ஆன மாகேஸ்வரியை (மகேசுவரி) தியானம் செய்து பூஜிக்கிறேன்

கருத்துகள் இல்லை: