சதாசிவனார் "விந்து" என வேதம் குறிப்பிடுவது சூதம் என்னும் இரசத்தினுடைய
பெருமையைத்தான். வானவர்கள்,ரிஷிகள்,சித்தர்கள்,முனிவர்கள், ஆகிய அனைவரும் சக்தி பெற்றவிதம் இதன் மூலமே . தேன் போன்ற இச்சூதம் உண்டு. பூத உடல் நீங்கி சூக்கும உடல் (கண்ணுக்கு புலப்படாத வடிவமற்ற உடல்) அடைந்தார்கள் என்றும், அனைத்துக்கும் மூலமான இச் சூதத்தின் மகிமையே அண்ட பகிரண்டத்தின் அமைப்புகள் என்றும் கூறுகின்றனர்.
நாதமோடு விந்து இணைதலே இவ்வுலக படைப்பின் தத்துவம். எழுவகை உயிர்களும் இதன் அடிப்படையில் உண்டாகின்றன." நாதம்" என்பது பூரணம் . அதாவது கந்தகம். விந்து என்பது ரசம் அதாவது பாதரசம்.
இவற்றை அறிந்து இணைக்கும் முயற்சியில் சிறிது தவறு செய்து செய்து விட்டால் பொன் , யோகம் ,கயசித்து , குளிகை , செந்தூரம் என்ற எதுவும் சித்தி அடையாது போய்விடும் .
பகிர்வில் ர. சடகோபால்...............
காளி தேவி பற்றி சொல்ல இந்த ஒரு யுகம் போதாது. காளி என்பவள் கருணையின் வடிவானவள் இந்த பிரபஞ்சத்தில் காளியே தெய்வம். இந்த கலி யுகத்தில் தன் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க காத்திருக்கிறாள். கீழ் தரமான மனிதன் கூட காளி யை வணங்குவதால் நற்கதி அடைகிறான். காளி தன் பக்தர்களை காப்பவள் தான் பக்தர்களுக்கு இடையூறு செய்பவர்களை தன் இரு கரங்களால் ஆழிப்பவள். காளியை வீட்டில் வைத்து வணங்குபவர்கள் காளி படத்திற்கு கீழே சிறிய விநாயகர் வைத்து வழி பட்டால் போதும். காளி உக்கிரமாக இருக்கும் காரணம் அவள் இவ்வுலகை காப்பவள் தானே. கருத்த மேனியும் மூன்று கண்களும் எட்டு கரங்களும் அன்பெ வடிவான புன்னகையும் தவறு செய்பவர்களை தண்டிக்கும் ஆயுதமும் தன் பக்தனை ஆசீர்வதி க்கும் கரமும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் அன்பான தாயாகவும் இருக்கும் ஆதி சக்தியை பாதம் பணிந்து போற்றுவோம். ஓம் காளி ஜெய் காளி.
பகிர்வில் ர.சடகோபால்