இந்து திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?
இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர் மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்ச பூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப் பெண்ணானவள் தன்னையும் தன் உடலையு ம் காமக்கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்து கொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண்சூடிய கணவன் மணப் பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மி மீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டு கின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜென்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.
பகிர்வில் ர.சடகோபால் .BA
ஆத்ம லிங்கம்
தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம் ஆகும். இவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.
1. மண் ..... காஞ்சிபுரம் ..... ஏகாம்பர லிங்கம்
2. நீர் ..... திருவானைக்கா ...... ஜம்பு லிங்கம்
3. நெருப்பு ..... திருவண்ணாமலை ..... அருணாசல லிங்கம்
4. வாயு ..... திருகாளத்தி ..... திருமூல லிங்கம்
5. ஆகாயம் ..... சிதம்பரம் ..... நடராச லிங்கம்
இஷ்ட லிங்கம்
மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.
1. இந்திரன் ..... பத்மராக லிங்கம்
2. குபேரன் ..... ஸ்வர்ண லிங்கம்
3. யமன் ..... கோமேதக லிங்கம்
4. வருணன் ..... நீல லிங்கம்
5. விஷ்ணு ..... இந்திர நீல லிங்கம்
6. பிரம்மன் ..... ஸ்வர்ண லிங்கம்
7. அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் ..... வெள்ளி லிங்கம்
8. வாயு ..... பித்தளை லிங்கம்
9. அசுவினி தேவர்கள் ..... மண் லிங்கம்
10. மகா லட்சுமி ..... ஸ்படிக லிங்கம்
11. சோம ராஜன் ..... முத்து லிங்கம்
12. சாதுர்யர்கள் ..... வஜ்ஜிர லிங்கம்
13. பிராம்மணர்கள் ..... மண் லிங்கம்
14. மயன் ..... சந்தன லிங்கம்
15. அனந்தன் முதலான நாகராஜர்கள் .... பவள லிங்கம்
16. தைத்தியர்கள், அரக்கர்கள் ..... பசுஞ்சாண லிங்கம்
17. பைசாசங்கள் ..... இரும்பு லிங்கம்
18. பார்வதி .... வெண்ணெய் லிங்கம்
19. நிருதி ..... தேவதாரு மர லிங்கம்
20. யோகிகள் ..... விபூதி லிங்கம்
21. சாயா தேவி ..... மாவு லிங்கம்
22. சரஸ்வதி ..... ரத்தின லிங்கம்
23. யட்சர்கள் ..... தயிர் லிங்கம்
ஷணிக லிங்கம்
நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.
1. புற்றுமண் லிங்கம் ..... மோட்சம் தரும்
2. ஆற்றுமண் லிங்கம் ..... பூமிலாபம் தரும்
3. பச்சரிசி லிங்கம் ..... பொன், பொருள் தரும்
4. அன்ன லிங்கம் ..... அன்ன விருத்தி தரும்
5. பசுவின் சாண லிங்கம் ..... நோய்கள் தீரும்
6.வெண்ணெய் லிங்கம் ..... மன மகிழ்ச்சி தரும்
7. ருத்ராட்ச லிங்கம் ..... அகண்ட அறிவைத் தரும்
8. விபூதி லிங்கம் ..... அனைத்து செல்வமும் தரும்
9. சந்தன லிங்கம் ..... அனைத்து இன்பமும் தரும்
10. மலர் லிங்கம் ..... ஆயுளை அதிகமாக்கும்
11. தர்ப்பைப்புல் லிங்கம் ..... பிறவியிலா நிலை தரும்
12. சர்க்கரை லிங்கம் ..... விரும்பிய இன்பம் தரும்
13. மாவு லிங்கம் ..... உடல் வன்மை தரும்
14. பழ லிங்கம் ..... சுகத்தைத் தரும்
15. தயிர் லிங்கம் ..... நல்ல குணத்தைத் தரும்
16. தண்ணீர் லிங்கம் ..... எல்லா மேன்மைகளும் தரும்
லிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள்
பகிர்வில் ர.சடகோபால்.BA