வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

ஆலயம் தொழுவது சாலவும் நன்று ,கோவிலில்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம் .என்பது அவ்வை வாக்கு தன்னுடைய துன்பம் என்ற மூட்டையை
இறக்கிவைத்து ,ஆறுதல் தேடும் இடம் ஆலயம் பாரத்தை சிறிது நேரம் இறக்கிவைக்கம் சுமைதாங்கி போன்றது .ஆனால் நம்பாரத்தை நாம்
சுமந்துதான் தீரவேண்டும் .அப்படிப்பட்ட அமைதிதேடும் ஆலயமே அமைதி இல்லாமல் இருக்கிறது .[ஒருசில ஆலயங்கள் உள்ளே சென்ற உடனே ,மனம்
சாந்திஅடைகிற து   ]]]சில ஆலயங்களில் சாமிகும்பட விழா எடுக்கும்போது
இருபிரிவாகபிரிந்து சண்டைபோட்டு உயிர்பலியும் ஆகிறது ? இது தேவையா ?
கடவுளே வந்தாலும் இதை திருத்த முடியாது நல்லவர்கள் ,தனித்து இருக்க
வேண்டியதுதான் :[முற்றும் கசந்ததென்று ,பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென
நின்றிருப்பான் ஒருவன் ,அவனை தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன் ]]இன்னும் என்மதம் பெரிது ,என்கடவுள் பெரியவர் என்று உண்மை
உணர்ந்தவர்கள் வாதிடமாட்டார்கள் .ஆகவே கோவில்கள் தேவைதான் ,
பக்தியில் ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு ..ஆரம்ப பள்ளிமாணவர்களுக்கு கண்,,காது ,வாய் ,வண்டி ,வாகனங்களை படம்போட்டு காட்டுவார்கள் ,அதே
மாணவன் ,க்ல்லூரி செல்லும்போது படம்போட்டா விளக்குகிறார்கள் ??
ஆகவே ஆரம்பநிலையில் உள்ளவர்கலுக்கு கோவிலும் சாமியும்
தேவைதான் .

கருத்துகள் இல்லை: