திங்கள், 18 ஆகஸ்ட், 2014

லிங்காஷ்டகம்

லிங்காஷ்டகம் - தமிழில்

                              



ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறிதும் களங்கம் இல்லா சிவ லிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எரித்த கருணாகர லிங்கம்
ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்
தட்சனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
தாமரை மாலையை சூடிய லிங்கம்
முந்திய வினைகளை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவர் கணங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர்ந்விடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

எட்டு தளத்தினில் எழுந்திடும் லிங்கம்
எல்லாம் ஆகிய காரண லிங்கம்
எட்டு தரித்திர நீக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரின் உருவின் பூஜைக்கோர் லிங்கம்
தேவ வணமலரை ஏற்றிடும் லிங்கம்
பரமண அதணாய் பறவிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டகமிதை தினமும்
சிவ சந்நிதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன்
சிவன் அருளும் கொள்வார்கள்.


லிங்காஷ்டக தோத்திரத்தை தினமும் சிவ சந்நிதியில் ராகம் மற்றும் தாளம் தவறாமல் பாடி வர சிவபெருமானின் அருளுக்கு பாத்திரமாகி சிவபெருமானின் நண்பராக சிவலோகத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.


 தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் சிவ சிவ ஓம்

             “சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
              சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
              சிவ சிவ என்றிடத் தேவருமாவர்

              சிவ சிவ என்னச் சிவ கதி தானே”


                                  பகிர்வில் ர.சடகோபால் .BA 

கருத்துகள் இல்லை: