சனி, 27 செப்டம்பர், 2014

எட்சிணி வசிய மந்திரம்

நல்ல வாரமும், நல்ல நட்சத்திரமும், நல்ல வேளையும் கூடிய சுப தினத்தில் சக்தி பூஜை செய்து கீழ் கண்ட மூலமந்திரத்தை 1008 உருவாக , 48 நாட்கள் ஜெபித்து கடைசி நாளில் யட்சணிக்கு பூஜை முடித்துக்கொள்ளவேண்டும் .
இது மஹா ஆச்சர்ய பலன் அளிக்கும்.

           

மூலமந்திரம்:
                            "ஸ்ரீம் இரீம் அவ்வும் மவ்வும் நமசிவாய சுவாகா"

பலன்:
               பால்,பழம் ,தேங்காய் முதலிய வஸ்துவும்; ஆபரணம், நாணயம் முதலியதும்; உடை  முதலியனவும் அளிக்கும்.

                              பகிர்வில் ர.சடகோபால் .BA 

வசிய மருந்து முறிவு

 உயிர் போன ஆட்டின் உணியும், விடத்தோர் பட்டையும் சமனிடையக எடுத்து தண்ணீர் விட்டரைத்து, துவரை அளவு குளிகை செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொண்டு தேவையான போது உணவுகளில் கலந்து கொடுக்கவும் .

பலன்: 
             எந்த வித மருந்துகளானாலும் அதன் வேகம் குறையும் 

 
                        பகிர்வில் ர.சடகோபால்.BA 

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

பச்சோந்திவித்தை

ஒரு பவுன் தங்கம் வாங்கி அதை இரண்டு காசாக அடித்து, ஒன்று லக்ஷ்மி ஒன்று விஷ்ணு  உருவம் பதித்து எடுத்து கொண்டு,இரண்டு பச்சோந்தி, ஆணும் ,பெண்ணும் புணரும் சமயம் பிடித்து வந்து , ஆணின் வாயில் பெண் காசும் ,பெண்ணின் வாயில் ஆண் காசும் செலுத்தி, ஆற்றில் அக்கறையில் ஒன்று இக்கறையில் ஒன்று புதைத்து, நடு ஆற்றில் நின்று கொண்டு பைரவ மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் ஏழு நாட்கள் ஜெபம் செய்தால், ஆண் பச்சோந்தி பெண் பச்சோந்தியுடன் வந்து சேரும். உடனே எடுத்து அந்த பச்சோந்திகளை ஆற்றில் வீசி விட்டு அந்த காசுகளை பத்திரப்படுதிக் கொள்ளவும்.  
           இதில் பெண் உருவம் உள்ள காசை ஒரு பெட்டியில் வைத்து விட்டு ,
ஆண் காசை விற்பனை செய்து விடலாம், அது பெண் காசு உள்ள பெட்டிக்கு வந்து விடும். இதை தினம் விற்றாலும் நம்மிடம் வந்து சேரும், பெண் காசு எங்கு உள்ளதோ அங்கு ஆண்  காசு வந்து விடும். இதை ஏழைகளிடம் விற்பனை செய்வது பாவமாகும். உலோபி, கருமி,சண்டாளன் , இவர்களிடம் விற்பனை செய்து ஏழைகளுக்கு உதவலாம்.

பைரவ மந்திரம்:
                                ஓம் ஹ்ரீம் வாம் வடுகாயா ஆபத்தாறணாய வடுகாய ஹ்ரீம் ஓம்...."

 இந்த மந்திரத்தை ஜெபம் செய்ய வேண்டும்.


                                 பகிர்வில் ர.சடகோபால்.BA     

வியாழன், 25 செப்டம்பர், 2014

குப்பைமேனி வேர் ஆக்ருஷ்ணம்


தோற்றுமடா மேனியொன்று தனித்து நின்றால் 
    சுத்தி செய்து பால் பொங்கல் இட்டுப்பின்னும் 
மாற்றமுடன் கலைக்கொம்பால் கெல்லிக்கொண்டு 
    மந்திரந்தான் துட்டமிருக ஆகர்ஷணி 
ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகாவென்று 
    சொல்லியே வாங்கிதன் வாயிற்போட 
ஆற்றமுடன் மிருகங்கள் தன்னை நோக்கி 
    அழைத்துடனே மிருக ஆக்ருஷ்ணமுமமே.
                                                                                            -கருவூரார் 

பொருள்:
                     குப்பைமேனி செடி தனியாக முளைத்திருந்தால் அந்த இடத்தில் சுத்தம் செய்து பால்,பொங்கல் வைத்து மான் கொம்பால் கொத்தி 
"துட்ட மிருக ஆகர்ஷணி ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகா "     என்று மந்திரம் சொல்லி வேரை பிடுங்கி  வாயில் அதக்கிக்கொண்டு மிருகங்களை அழைக்க அவை வரும் .

                                      பகிர்வில் .ர.சடகோபால்.BA          

புதன், 24 செப்டம்பர், 2014

மதமத்தை வேர் வசியம்

மதமத்தை (பொன்னூமத்தை வேர்)

வசிகரமாம் மதமத்தை மூலம் வாங்க 
     மந்திரத்தை கேள் சொல்வோம் மைந்தாநீதான் 
வசிகரஞ்சேர் கீறிணி வருணியாரே
     மதர்னாமீ சீவி வசியம் பவ்வே 
வசிகரங்க்கான் சாக்காயுப் பருவம் நோக்க 
     வந்து நிற்கும் பருவமதில் சமூலம் வாங்கி 
வசீகரமாய் நிழலுலர்த்தி தைலம் வாங்கி 
     மைந்தனே குப்பிலே அடைத்திட்டாயே
அடைத்ததற்கு வகைகேளு பணந்தான் வாங்கி 
      அதிற்பாதி கற்பூரம் போட்டு தேய்த்து 
படையடைத்து புருவமத்தி திலந்தீட்டு 
      போதுவாறே நினைத்த பெண்கள் வந்து சேரும் 
                                                                                                      -கருவூரார் 

பொருள்:
            மதமத்தை மூலிகையை எடுப்பதற்கு "கீறிணி வருணீ மதர் நாமீ சீவீ 
வசியம் பவ்வே "

 என்று மந்திரம் ஜெபித்து மதமத்தை காயாக இருக்கும் பருவத்தில் மூலமாக எடுத்து நிழலில் உலர்த்தி குழித்தைலம் எடுத்து குப்பியில் அடைத்துகொள் . மேற்படி மதமத்தை தைலத்தை பணவெடை எடுத்து அரை பணவெடை பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து புருவ மத்தியில் போட்டிட்டு கொண்டு எந்த பெண்ணை நினைத்தாலும் அவள் வசியமாகி உன்னிடத்தில் வந்து சேர்வாள் .

                             பகிர்வில் ர.சடகோபால்.BA 

ஆக்ருஷ்ணம்


ஆக்ருஷ்ணம் என்பது அஷ்டகர்மங்களின் ஏழாவது கர்மமாகும் .

தொட்டல்சுருங்கி வேர்                சிறியாநங்கை வேர் 
 தலை சுருளி வேர்                          சிறுமுன்னை வேர் 
நாகமல்லி வேர்                                சந்தன வேர் 
கொழிஞ்சி வேர்                                 சுகறை வேர் 

இவைகளை முறைப்படி காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து , ஆணிவேர் ஆறாமல் வெட்டி எடுத்து , உலர்த்தி தீயில் கறுக்கி கொண்டு , பச்சை தவளை எடுத்து வந்து குடலை நீக்கி குழி தைலம் எடுத்து கொள்ளவும் . பின்பு குங்குமபூ ,கோரோசனம் ,பச்சைகற்பூரம் ,புனுகு,கஸ்துரி , இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி எடை சேர்த்து கல்வத்திலிட்டு, பச்சை தவளை நெய் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து கொம்பு சிமிழில் பதனம் பண்ணவும் .

இதற்க்கு பூஜை மந்திரம் :
                                                   ஓம் நமோ பகவதி சர்வ ஆதார சக்தி க்லீம்  ஹ்ரீம் 
ஸ்ரீம் ஓம் ஆக்ருஷ்ண தூளி ஸர்வம் ஆக்ருஷ்ய ஆக்ருஷ்ய ஹீம் க்லீம் பட் ஸ்வாக "  

 இந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 21 நாட்கள் ஜெபம் செய்ய மை உயிர் பெறும்.

 இதை வைத்து எல்லா விதமான ஆக்ர்ஷ்ணங்களும் செய்யலாம் .
(ஆக்ருஷ்ணம் என்பது அழைப்பு )

                                        பகிர்வில் ர.சடகோபால்.BA


பாதாளஅஞ்சனம்


குப்பைமேனி வேர், வெள்ளைச்சாரணைவேர்

   வெள்ளெருக்கன்வேர், வெள்ளைக்காக்கணம் வேர்

     வெள்ளைவிஷ்ணுகாந்திவேர்


      இவை ஐந்தையும் முறைப்படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணிவேர் அறாமல் பிடுங்கி உலர்த்தி தீயில் கறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு ஒரு கோட்டானை பிடித்து உரோமம், குடல் போக்கி குழித்தைலம் எடுத்து மேற்கண்ட வேரை கல்வத்திலிட்டு இரண்டு சாமம் கோட்டான் தைலம் விட்டு அரைக்க வேண்டும். அதன்பின் புனுகு, கோரோசனை, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, குங்குமப்பூ இவைகளை வகைக்கு குன்றிமணி அளவு சேர்த்து ஒரு சாமம் அரைத்தால் மை பக்குவம் அடையும். மை பக்குவம் ஆனதின் அடையாளம் தெரிய கல்வத்தின் அடியில் ஒரு ரூபாயை போட்டு அரைத்தால் அது மையில் தெரியும்.
                                                              
                                                
இதற்கு பூஜை மந்திரம்
  
ஓம் ஹ்ரிம் ஐம் மதன மேகலே மமகார்யம் ஸாதய ஸாதய ஸ்வாஹா.

இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் பனிரெண்டு நாள் செபித்தால் மை உயிர் பெறும்.அதன் பின் தான் உபயோகத்திற்கு ஆகும்.

நிவேதனம் செவ்வலரி புஷ்பம், சந்தனம், பன்னீர், பால், பழம், இளநீர், தேங்காய், பத்தி, சூடம், தயிர், பொங்கல் ஆகியவைகளை வைத்து தூபதீபம் காட்டி மையை பத்திரம் செய்யவும்.


 இதன் பிரயோகம்

இந்த மையை கொஞ்சம் எடுத்து வெற்றிலை ஒன்றில் தடவி விளக்கின் ஒளியில் பார்த்தால் பூமிக்குள் இருக்கும் பொருள்கள் யாவும் தெரியும். நவரத்தினம், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள் இருப்பதைக் காணலாம்.தண்ணீர், ஊற்று, தண்ணீருக்குள் இருக்கும் பொருள், மண்ணில் புதைந்துள்ள புதையல் முதலியனயாவும் தெரியும்.இது பாதாள அஞ்சனம் என்பதால் வேறு உபயோகத்திற்கு பயன்படாது என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

                         பகிர்வில் ர.சடகோபால்.BA 

சித்தர் தரிசன மார்க்கம்


நம்மில் பலரும் சித்தர்களின் மந்திரங்களையும், 
ஜாலவித்தைகளையும், வைத்தியங்களை அவர்களின் 
நூல்களின் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது.
அவற்றுள் பலவும் பரிபாசைகளாகவே இருப்பதால் அவற்றை 
பொருள் கொள்ளுதல் இயலாத காரியமாகிறது.
அப்படி சித்தர்களின் வழியை தேடி செல்வோர்க்காக 
சித்தர் தரிசன மார்க்கம் என்ற இவ்விடுக்கையில்
 உங்களுக்கு சித்தர்களின் தரிசனத்தை காட்டும் 
மந்திரத்தை வெளியிடுகின்றோம்.

                 


 சித்தர் தரிசன மந்திரம்:

                                         ஓம் சிங் ரங் அங் சிங்.............. மசி வசி

இம்மந்திரத்தில் நீங்கள் எந்த சித்தரை தரிசிக்க 
எண்ணுகிறீகளோ அவரின் பெயரை இடைவெளி 
விட்ட இடத்தில் நிரப்பி செபிக்கவும்.
இம்மந்திரத்தை உடல்,மனசுத்தியுடன் அதிகாலை 
நேரத்தில் 108-உரு விதம் 48 நாட்கள் செபித்து வர 
சித்தர்கள் உனக்கு காட்சி தந்து தீட்சையை தந்து மெய்ஞான 
வழியை காட்டுவார்கள். முழுநம்பிக்கையுடன் 
செபிப்பவர்களுக்கு 48 நாட்களுக்குள்ளாகவே பலன் கிடைக்கும்.

                              பகிர்வில் ர.சடகோபால்.BA 

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

சித்தர்களின் மேலான தெய்வம்


சித்தர்களின் மேலான தெய்வம்!



பெண்மையை இழிவு செய்தவர்கள், அல்லது தூற்றியவர்கள் என்பதாகவே சித்தர்களைப் பற்றி பெரும் பாலானவர்களால் புரிந்து கொள்ளப் படுகிறது. அத்தகைய ஒரு எண்ணப் போக்கினை இந்தபதிவு தகர்த்திடும் என எதிர்பார்க்கிறேன்.

சித்தமெல்லாம் சிவமயமாய் திளைத்திருக்க, ஆதிசக்தியின் அருளும், ஆசியும் பூரணமாக தேவைப் படும். இதை உணர்ந்திருந்த சித்தர்கள், அத்தகைய ஆதிசக்தியின் அம்சம் ஒன்றினையே போற்றி பூசித்தனர்.இந்த அம்சம் பத்து வயதுக்குறிய ஒரு சின்னஞ் சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சர்யமான ஒன்று!, நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று.

இந்த உயர் தெய்வத்தைப் பற்றி கொங்கணவர் பின்வருமாறு கூறுகிறார்.

"வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ? வாலைப் பெண்ணே!"

- கொங்கணவர் -

சித்தர்கள் வணங்கிய அந்த பால தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. அனைத்திற்க்கும் ஆதி காரணமான இந்த வாலை தெய்வத்தையே சித்தர்கள் அகப்புற வழிகளில் பூசை செய்தார்கள். இந்த வாலையை பூசிக்காத சித்தர்கள் யாருமே இல்லை. இவள் அருமையை போற்றிப் பாடாத சித்தர்களும் இல்லை எனலாம்.

இத்தகைய வாலை தெய்வம் நமது உடலில் இருந்து இயங்குவதை உணர்ந்து கொண்டு அவளே அனைத்திற்கும் காரண காரியமாக இருந்து ஆட்டுவிப்பதை அறிந்து எல்லாவித யோகா ஞானங்களுக்கும் அவளே தலைமைத்தாய் என்று அறுதியிட்டு உரைத்த சித்தர்கள். அவளையே போற்றி பூசித்து சித்தி பெற்றனர்.

சின்னஞ்சிறு பெண்ணான வாலையின் அருளால் சித்தியடைந்து, பின் அவளை கண்ணித் தெய்வமாக வழிபட்டு படிப்படியாக மனோன்மணித் தெய்வமாக பூசை முடித்து, இறுதியில் ஆதிசக்தியின் அருள் பெற்று முக்தி நிலையான மெய்ஞான நிலையினை அடைந்தனர். இதுவே ஞானத்தின் அதி உயர் நிலையாக கருதப் பட்டது. இந்த நிலை எய்தியவர்களே சித்த புருஷர்கள்.

வாலை பூசை என்பது என்ன?

இதன் அருமையினை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்

"கூடப்பா துரியமென்ற வாலை வீடு
கூறரிய நாதர் மகேச்சுவரியே யென்பர்
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு
நந்திசொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும்
ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும்
ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊறலாகும்
தேடப்பா இது தேடு காரியம் ஆகும்
செகத்திலே இதுவல்லவோ சித்தியாமே
வாமென்ற அவள் பாதம் பூசை பண்ணு
மற்றொன்றும் பூசை அல்ல மகனேசொன்னேன்!"

- அகத்தியர் -


                                                            பகிர்வில் .ர.சடகோபால்.BA 

                      

வியாழன், 18 செப்டம்பர், 2014

தேவ வசிய மை

 தேவ வசிய மை    -  நாகமல்லி மூலம் 

பாரப்பா நாகமல்லி வாங்கப் பாடுகிறேன் 
மந்திரந்தான் பண்பாய் மக்காள் சேரப்பா 
தேவபிறங்கி மூலி தன்னைச் "செய செய 
ஓம் கிரியும் பகவதா" வென்று தியானம் 
செய்து  ஆரப்பா பிடுங்கி வந்து நிழலில் 
உலர்த்தி அப்பனே பொடியாக்கி  திரியில் 
ஊட்டி பேரப்பா காராவின் நெய் எரித்து 
மையைப் போட்டிடவே தேவரெல்லாம் 
வசியமாமே 
                                                - கருவூரார் பலத்திரட்டு

பொருள் :

                    தேவ பிறங்கி என்னும் நாக மல்லிக்கு காப்பு கட்டி "செய செய 
ஓம் கிரியும் பாகவதா" 
          என்று  மந்திரம்  தியானித்து  பிடுங்கி நிழலில் உலர்த்தி தூள் செய்து திரியில் வைத்துக் காரம் பசுவின் நெய்யில் திரியை போட்டு எரித்து மை வாங்கி திலகமிட தேவர்கள் எல்லாம் வசியமாவர்கள் .

                                  பகிர்வில் ர.சடகோபால் .BA    

புதன், 17 செப்டம்பர், 2014

பெண் வசியம்

பெண் வசியம் 
                      
                                 

நல்ல அமிர்த யோகம் கூடிய வெள்ளிகிழமை அன்று மிளகுசாரணை செடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து பொங்கலிட்டு எலுமிச்சை பலி கொடுத்து ஆணி வேர் ஆறாமல் பிடுங்கி வெள்ளி தாயத்தில் அடைத்து கையில் கட்டி கொள்ள சகல பெண்களும் வசியமவார்கள் . நம் எண்ணப்படி  நடந்து   கொள்வார்கள். 

                                               பகிர்வில் ர.சடகோபால்.BA 

சனி, 6 செப்டம்பர், 2014

மந்திரங்கள் சாப விமோசனம்

மந்திரங்கள் சாப விமோசனம் 

மந்திரங்களை  நாம் செபிக்கும் போது  நம்மை அறியாமலேயே தவறுகள் ஏற்படலாம் . அப்படி பட்ட சூழ்நிலைகளில் நம்மை நாமே பாதுகாத்துகொள்ள கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 உரு போட்டுகொள்ளவும் .

          "ஓம் அங் வங் கிங் ஹ்ரீம் ஸ்ரீம் அவ்வும் சவ்வும் சகல மந்திர சாபம்                  நசி மசி    ஸ்வாக."

                            பகிர்வில் ர.சடகோபால்.BA 

புதன், 3 செப்டம்பர், 2014

சந்திர பகவான் சாபம் பெற்ற கதை

சந்திர பகவான் சாபம் பெற்ற கதை :

                        

விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.
கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, "நீ தேய்ந்து மறையக் கடவது" என்று சபித்தார். பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, "பாலசந்திரன்' என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையத் தந்தார். அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தியாகும். ஆகவே, சதுர்த்தி திதி விநயாகருக்கு உகந்ததாயிற்று.

சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.

சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.
வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வாங்கு வாழ சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு மிக முக்கியமானதாகின்றது.. 

                                  பகிர்வில் ர.சடகோபால்.BA 

திருமணமானவர்களை திருமதி என்பது

திருமணமானவர்களை திருமதி என்பது ஏன்?

                            

திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் மற்றும் ஆண்கள் வீணாகச் செலவழித்து திரிவார்கள். திருமணத்துக்குப் பின் தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்தி விடுகிறாள். அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இதற்காக தனது மதிநுட்பத்தை (புத்திசாலித்தனம்) பயன்படுத்துகிறாள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைத்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் தரப்பட்டது. திரு என்றால் லட்சுமி, மதி என்றால் அறிவு.

                                 பகிர்வில் ர.சடகோபால்.BA 
கிருஷ்ணர் குழலூதுவது எதற்காக?

                          

ஒரு நாள் ராதையின் தோழிகள் கிருஷ்ணனின் புல்லாங்குழலை பார்த்து கேட்டனர், 'மாதவன் உதடுகளில் எப்போதும் அமர்ந்திருக்க நீ என்ன புண்ணியம் செய்தாயோ? கிருஷ்ணரின் தேனூரும் உதட்டின் ருசியை எப்போதும் பருகுகிறாய். அவன் உன்னை வாசிக்கும்போது, உன் சொல்லுக்கு கட்டுப்பட்டவன் போல இயங்குகிறான். அவன் தன்னை மறந்து ஒற்றைக்காலில் நிற்கவும் செய்கிறாய்.
பூப்போன்ற அவனது கையில் உன்னை தூங்க அனுமதிக்கிறான். அவனது சிவந்த உதட்டினால் உனக்கு தலையணை தருகிறான். அவனது விரல்களை உன் மேனியில் வருடி உன் பாதத்திற்கு சுகம் தருகிறான். அவனது அழகிய சுருண்ட முடி காற்றில் அசையும்போது உனக்கு விசிறவும் செய்கிறான்.'
வன்சி (சமஸ்கிருதம்) என்ற குழலின் பெயரை திருப்பினால், 'சிவன்' என்றாகிறது. இந்த குழலே சிவன். நாம் அனைவரும் சிவன் போல ஆக வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் முக்கியமாக புல்லாங்குழலை மூன்று காரணங்களுக்காக விரும்புகிறார். ஒன்று, குழலுக்கு எந்த பக்கமும் அடைப்பு இல்லை. இறுக்கமற்ற வெறுமையான இடமே அதனிடம் உள்ளது. இதன் மூலம் நாமும் இறுக்கமற்று அகங்காரம் இல்லாமல் இருக்கு வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அதனால் மற்றவரிடம் உள்ள கோபத்தை/பொறாமையை மனதில் அடைக்கலாகாது. இரண்டாவது காரணம், அதை யாராவது வாசித்தாலொழிய ஓசை தராது. அதாவது நீங்கள் பேச அவசியமற்ற இடத்தில் பேசாமல் இருத்தல் நல்லது. நமது வார்த்தைகள் மிக மதிப்புள்ளது. அதனால் தீய வார்த்தை பேசுவதைவிட அமைதியாக இருப்பதே சிறந்தது. மூன்றாவது காரணம், புல்லாங்குழலை வாசித்தால் இனிய இசையை மட்டுமே கொடுக்கும், இல்லையேல் ஓசையின்றி அமைதியாக இருக்கும். அதைப்போல நாம் பேசும்போது தீய சொற்கள் தவிர்த்து இனிய சொற்களை பயன்படுத்துவதே நலன் பயக்கும். இந்த மூன்று குணங்கள் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கு இறைவன் தனது உதடில் இடம் கொடுப்பான்.
ஒரு சமயம் ராதையே நேரடியாக குழலிடம், 'அருமை குழலே! நான் கண்ணனை அளவு கடந்து விரும்புகிறேன். ஆனால், அவன் உன் மீது தான் பாசம் அதிகம் வைத்துள்ளான். அதனால், அவன் எப்போதும் அவனது உதட்டிலே உன்னை வைத்துக்கொள்கிறான். இதற்கு காரணம் என்ன? நீ கூறுவாயா?'
அதற்கு குழல் சொன்னது, 'முதலில் என் உடம்பை வெட்டி, அதிலிருந்து எனது இதையைத்தையும் நீக்கி, என்னை வெறுமையாக்கினார்கள். என் மேனியெங்கும் துளைகாள ஆக்கினார்கள். இவ்வாறு இருந்தும், நான் கிருஷ்ணரின் விருப்பத்திற்கு ஏற்பவே ஓசையைக்கொடுக்கிறேன். என் விருப்பத்திற்கு நான் என்றும் ஓசையை தந்ததில்லை. உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் இதுவே. நான் கிருஷணரின் விருப்பம்போல நடக்கிறேன். நீங்களோ உங்கள் விருப்பத்திற்கு அவன் நடக்க ஆசைப்படுகிறீர்கள்

                                 பகிர்வில் ர.சடகோபால்.BA