ஆக்ருஷ்ணம் என்பது அஷ்டகர்மங்களின் ஏழாவது கர்மமாகும் .
தொட்டல்சுருங்கி வேர் சிறியாநங்கை வேர்
தலை சுருளி வேர் சிறுமுன்னை வேர்
நாகமல்லி வேர் சந்தன வேர்
கொழிஞ்சி வேர் சுகறை வேர்
இவைகளை முறைப்படி காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து , ஆணிவேர் ஆறாமல் வெட்டி எடுத்து , உலர்த்தி தீயில் கறுக்கி கொண்டு , பச்சை தவளை எடுத்து வந்து குடலை நீக்கி குழி தைலம் எடுத்து கொள்ளவும் . பின்பு குங்குமபூ ,கோரோசனம் ,பச்சைகற்பூரம் ,புனுகு,கஸ்துரி , இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி எடை சேர்த்து கல்வத்திலிட்டு, பச்சை தவளை நெய் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து கொம்பு சிமிழில் பதனம் பண்ணவும் .
இதற்க்கு பூஜை மந்திரம் :
ஓம் நமோ பகவதி சர்வ ஆதார சக்தி க்லீம் ஹ்ரீம்
ஸ்ரீம் ஓம் ஆக்ருஷ்ண தூளி ஸர்வம் ஆக்ருஷ்ய ஆக்ருஷ்ய ஹீம் க்லீம் பட் ஸ்வாக "
இந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 21 நாட்கள் ஜெபம் செய்ய மை உயிர் பெறும்.
இதை வைத்து எல்லா விதமான ஆக்ர்ஷ்ணங்களும் செய்யலாம் .
(ஆக்ருஷ்ணம் என்பது அழைப்பு )
பகிர்வில் ர.சடகோபால்.BA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக