தேனாம் வெள்ளி ஞாயிறதில்
திங்கள் வியாழம் நெய்யாகும்
பானாம் செவ்வாய் புதன் பாலாம்
பகரு முடவன் நீராகும்
ஆனால் ஆவின் புல்லுருவி
அதிலே குழைத்துத் திலர்த்தமிட
வானோ ரெல்லாம் வசமாவார்
மண்ணில் சர்வ வசியமிதே
- அகத்தியர்
பொருள்:
ஆவின் புல்லுருவிக்கு காப்புக்கட்டிக் கொண்டு வந்து மோகன மந்திரத்தை லட்சம் உரு ஜெபித்து வெள்ளிக் கிழமை,ஞாயிற்றுக் கிழமை தேனிலும்; திங்கட் கிழமை,வியாழக் கிழமை நெய்யிலும்; செவ்வாய்,புதன், காராவின் பாலிலும்; சனிக்கிழமை நீரிலும் குழைத்து திலர்த்தமிட , இப்பூவுலகில் சர்வ ஜனங்களும், விண்ணுலக தேவர்களும் வசியமாவார்கள்.
குறிப்பு:
ஆவின் புல்லுருவி என்பது ஆலமரத்து புல்லுருவியாகும் .
மோகன மந்திரம்:
"ஓம் கிலியும் சவ்வும் றியும் ஸ்ரீயும் ஐயும் ஒம்சங் மசிவயந மோஹனாய சுவாகா"
பகிர்வில் ர.சடகோபால்.BA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக