"பாவென்ற பஞ்சகர்த்தான் பாதம் போற்றி
பண்பான பதினெண்பேர் பாதம் போற்றி"
சிதம்பரம் திருக்கோவில் மானுட தத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பஞ்ச சபைகளில் கனகசபையான இத்தலம் பூலோக கைலாயமாகும். இத்தலம் நிலவுலகுக்கு நடுவான தலம்.
இறைவன் எப்போதும் திருநடனம் புரியும் தலம். சிவ கலைகள் ஆயிரமும் ஒடுங்கியிருக்கும் மூலஸ்தனம் இத்தலம் தான்.
உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களும் சென்று பின்னர் மீண்டும் பின் யாமத்தில் இங்கு வந்து இங்குள்ள மூலஸ்த்தனத்தில் ஒடுங்கும். எனவே தான் இத்தல இறைவன் மூலட்டான நாதர் என பெயர் பெற்றார்.
இங்குள்ள ஒன்பது தங்க கலசங்கள் நவ சக்திகளை குறிக்கும். ஆடல் வல்லான் எழுந்தருளியுள்ள கொலு மண்டபத்தில் உள்ள நான்கு தூண்கள் நான் மறைகளின் சின்னமாகும். அதற்கு சற்று முன்புள்ள ஆறு தூண்கள் உள்ள மண்டபம் ஆறு சாஸ்திரங்களின் சின்னமாகும். அதற்க்கு வெளியே உள்ள 18 தூண்கள் பதினெண் புராணங்களின் சின்னமாகும்.
நடராஜர் அருகில் செல்ல உள்ள 5 வெள்ளி படிகள் ஐம்போறிகளைக் குறிப்பதாகும் . இந்த ஐந்துபடிகள் சிவனின் பஞ்சாட்சரத்தின் சின்னமாகும்.
மனிதன் ஒரு நாளில் விடும் சுவாசம் 21,600 ஆகும். இங்கு வேயப்பட்டுள்ள ஓடுகள் 21,600 ஆகும். சுவாச சஞ்சாரத்திற்க்கு ஆதரவான நாடிகள் 72,000 ஆகும். இங்கு 72,000 ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன.
பிரம்ம பீடத்தில் உள்ள 10 தூண்கள் 6 சாஸ்திரத்தையும் 4 வேதங்களையும் குறிக்கும்.
இவ்வாறாக இத்தலம் மானுட உடலமைப்பினை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பஞ்ச பூதத் தலங்களுள் எல்லா பூதங்களும் தோன்றி இறுதியில் ஒடுங்கும்
ஆகாசத் திருத்தலமாக இத்தலம் விளங்குகிறது.......
பகிர்வில் ர.சடகோபால்.BA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக