புதன், 3 டிசம்பர், 2014

ஓங்காரம் ஓம்


ஓம் என்பதிலே எல்லா வேதங்களும் மந்திரங்களும் பிறந்தன. ஆதலால் இதனைச் செபித்தால் எல்லா மந்திரங்களையும் செபிப்பதால் உண்டாகும் பயனை அடையலாம்.
              "ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி 
              ஈதெழுத் தாலே இசைந்தங் கிருவராய் 
              மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை 
              மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே"
                                                                                        -திருமூலர் 


"ஓ" என்னும் முன்னெழுத்தாலே உலகம் எல்லாம் கலப்பால் தானாகி; "ஓ" என்பதை பிரித்தால் அ+உ என்ற ஈரெழுத்தாய் நிற்கும்.அது சிவன், சிவை என்னும் இரு பொருளாய் தோற்றம் பெரும். 
மூன்றெழுத்தாகிய அ+உ+ம்  என்பவற்றால் தோன்றுகின்ற பேரோளியினை "ஓம்" என்பதின் கடையெழுத்தாகிய ம் என்னும் மகர எழுத்தால் உயிர்க்கு மயக்கம் வந்து பொருந்தும்.
"அ" என்றால் சூரியன். "உ" என்றால் சந்திரன். "ம்" என்றால் அக்கினி அதாவது "ஓம்" என்பது எல்லா பிரகாசங்களும் உள்ள பொருட்களின் சுயவடிவமாகும்.   
                        ஓம் என்னும் மகா மந்திரம் உயிர்களை பரமாத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்யும் ஆற்றலை கொண்டிருப்பதால் அது பிரணவ மந்திரம் என்று சொல்லப்படும் 

               பகிர்வில் ர.சடகோபால்.BA   

கருத்துகள் இல்லை: