கேட்டதை தரும் கால பைரவ அஷ்டமி விரத வழிபாடு
இன்று வளர்பிறை அஷ்டமியாகும். இது கால பைரவரை வணங்குவதற்கு ஏற்ற நேரமாகும். இந்த நேரத்தில் நீங்கள் கால பைரவ வழிபாடு செய்தால் கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும்.பைரவர் சிவனது அம்சம் ஆவார். பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடி யார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள்.
படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தெழில் களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகை படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார். அவருக்கு தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை இடுக்கண்களிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை.
எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரியது.
பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது. கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும்.
சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீபைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீபைரவரை வழிபட உகந்த நாட்கள்தான்.
ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீபைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.
பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்து உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.
மரண பயத்தை போக்குபவர். எம பயத்திலிருந்து பக்தர்களை காப்பவர் கால பைரவர். தமிழ்நாட்டில் சீர்காழி அருள்மிகு சட்டைநாதர் கோவில், உஜ்ஜயினி, தக்கோலம், காட்மாண்டு, திருமீயச்சூர், வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் சுயம்புபைரவர் ஆகிய தலங்களில் காலபைரவர் வழிபாடு சிறப்பாக நடக்கிறது.
வழிபாட்டு முறை:-
பால்,இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாய் மான் தோலில் அமர்ந்து தினம் 1008 வீதம் உரு ஜெபித்து பூஜிக்க வேண்டும்.
சுண்டல், வடை,பாயசம், சர்க்கரைப்பொங்கல், மது, மாமிசம் நிவேதனம் செய்ய வேண்டும். ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். அகந்தை பொய், அக்கிரம அநியாயக்காரர்களை அழித்து நீதியை நிலைநாட்டும் குறிக்கோளோடு வடிவம் எடுத்தவர்.
செய்வினை, சூனிய கோளாறுகள், பேய், பிசாசு, முனி, காட்டேரி போன்ற பாதிப்பிலிருந்து நீங்க யந்திரத்தை 108 உரு ஜெய பூஜை செய்து கையில் தாயத்தாக அணிந்து கொள்ளலாம். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக