திங்கள், 20 அக்டோபர், 2014

வித்துவேஷணம்

வித்துவேஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்


அஷ்ட கர்மங்களில் ஆறாவது கர்மமாக சொல்லப்படுவது 
வித்துவேஷணமாகும். வித்துவேஷணம் என்பது ஒருவருக்கொருவர் 
பகையை உண்டாக்கி பிரிப்பது இதனால் எப்படிப்பட்டவரையும் 
பிரித்து விடலாம். எது தனக்கு வேண்டாததோ அது தானாகத்தன்மேல் 
வெறுப்புற்று தன்னைவிட்டு ஓடிவிடும்படி செய்வதே
வித்துவேஷணமாகும். அதைப்பற்றி இன்றைய பதிவில் காண்போம்.
வித்துவேஷணம் எட்டு உட்பிரிவுகளைக்கொண்டதாகும், அவை

1)சர்வ வித்துவேஷணம்
2)இராஜ வித்துவேஷணம்
3)புருச வித்துவேஷணம்
4)ஸ்திரி வித்துவேஷணம்
5)மிருக வித்துவேஷணம்
6)தேவ வித்துவேஷணம்
7) லோக வித்துவேஷணம் என்பனவாகும். 

வித்துவேஷணத்தின் அதிதேவதை வாயு தேவன் ஆவார்.

வித்துவேஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

பாசமுடன் வித்துவேஷணத்தைக்கேளு
பதிவான மந்திரமிது சுத்தவித்தை
வாசமுள்ள வித்தையடா நேசமான மந்திரமிது
ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகாவென்னே
எண்ணமுடன் மந்திரத்தை செபிக்குமார்க்கம்
இன்பமுடன் விபூதியிலே முக்கோணமிட்டு
கண்ணிறைந்த முக்கோண நடுவே விந்து
கருணைவளர் விந்துநடு ஓங்காரஞ்சாத்தி
முன்னிறைந்த ஓங்கார நடுவிலேதான்
முத்தியுடன் சுத்தமதாய் சிங்கென்றிட்டு
சன்னதியை நோக்கிமனத் தன்மையாலே
சங்கையுடன் மானதமாய்ப் பூசைசெய்யே.

செய்யடா மானதமாய்ப் பூசைபண்ண
சிந்தைமன தொன்றாக சிவனைநோக்கி
மெய்யடா மந்திரமிது தினம்நூறப்பா
விரும்பிமன மொன்றாக உருவேசெய்தால்
அய்யனே வித்துவேஷணந்தானெட்டும்
அரகரா தன்வசமா யடங்கியாடும்
மய்யமென்ற சுழிமுனையிலே அடங்கியாட
வரிசையிடனினைத்தபடி வாய்க்குந்தானே.
                                 -அகத்தியர் பரிபூரணம்1200
பொருள்:
ஒரு செய்வாய் கிழமை நாளில் உடல்மனசுத்தியுடன் சாம்பல்நிற 
பட்டாடை உடுத்தி எட்டிபலகையில் வடமேற்கு திசை நோக்கி 
அமர்ந்துகொண்டு உன் எதிரில் ஒரு எட்டிப்பலகையை வைத்து அதில் 
விபூதியை பரப்பி அவ்விபூதியில் முக்கோணம் போட்டு 
அம்முக்கோணத்தின் நடுவில் "ஓம்" என்று எழுதி அதனுள் "சிங்" என்று 
எழுதவும். பின்னர் பன்றி நெய் ஊற்றி விளக்கேற்றி வைத்து 
அதைச்சுற்றிலும் காக்கணம் மலர்களையும் ஏனைய 
பூசைப்பொருட்களையும் வைத்துக்கொண்டு மனஓர்நிலைப்பாட்டோடு
"ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகா" என்ற 
மந்திரத்தை நாளொன்றுக்கு 100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் 
வித்துவேஷணம் எட்டுக்கும் சித்தியாகும்.

பின்னர் இதை பயன்படுத்தவேண்டுமென்றால் உன் மூச்சை 
உள்நிறுத்தி இம்மந்திரத்தை 3 முறைசெபித்தால் உன் வழியில் 
குறுகிடும் அதிகார பலமுள்ளவர்கள், எதிரிகள், மிருகங்கள்,ஆண்கள்,
பெண்கள், பேய் பிசாசு, துஷ்ட தேவதைகள், ஜீவஜந்துக்கள் என 
அனைத்தும் உன்னை கண்ட மாத்திரத்தில்  மிரண்டு ஓடிவிடும். 
அது மதம் பிடித்த யானையாக இருந்தாலும்,
முரட்டு காளையாக இருந்தாலும் ஓடுவிடும்.
பிறர்க்கு இது பயன்படுவதற்கு முன்சொன்ன முறையில் மந்திரத்தை 
கையில் விபூதியை வைத்து செபித்து அவர்களுக்கு அவ்விபூதியை
பூசிக்கொள்ளும்படி கொடுக்கலாம். அவர்கள் அதை வயல்வெளியில் 
போட்டால் அங்கு எலிகள் வாராது. பிணியாளர்க்கு பூசினால் பிணி 
தீர்ந்துவிடும். இன்னும் பல பயன்கள் இதில் அடங்கியுள்ளன.

                                  பகிர்வில் ர.சடகோபால்.BA 

கருத்துகள் இல்லை: