திங்கள், 20 அக்டோபர், 2014

ஆக்ருஷணம்

ஆக்ருஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

அஷ்டகர்மங்களில் ஐந்தாவதாக சொல்லப்படுவது ஆக்ருஷணமாகும்,
ஆக்ருஷணம் என்றால் தன்னை நோக்கி இழுத்துக்கொள்ளுதல் 
என்று பொருள். எந்த ஒரு பொருளையும் சத்தியையும் 
ஆகர்க்ஷிக்கலாம்.  அதாவது மிருகம்,மனிதர்,தெய்வம் முதல் 
எதையும் நம்மை நோக்கி வரவழைப்பதே ஆக்ருஷணமாகும். 
ஆக்ருஷணம் எட்டு உட்பிரிவுகளைக் கொண்டது. அவை

1)சர்வ ஆக்ருஷணம்
2)பூத ஆக்ருஷணம்
3)இராஜ ஆக்ருஷணம்
4)புருஷ ஆக்ருஷணம்
5)ஸ்திரி ஆக்ருஷணம்
6)மிருக ஆக்ருஷணம்
7)தெய்வ ஆக்ருஷணம்
8)லோக ஆக்ருஷணம் என்பனவாகும்.
ஆக்ருஷணத்தின் தேவதை வருணன் ஆவார்.

ஆக்ருஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர் 

நோக்கமுடன் உச்சாடனத்தைச் சொன்னேன்மைந்தா
நுண்மையுடன் ஆக்ருஷணத்தி னுண்மைகேளு
பார்க்கமனக் கண்ணாலே நோக்கமாகி
பதிவாக ஓம்கிலியும் சவ்வும் றீயும் ஐயும்
நமோபகவதிதேவி டங்டங் சுவாகாவென்று
தீர்க்கமுடனுருவேறக் கருவைக்கேளு
சிவசிவா நவகோணநடுவில்விந்து
மகத்தான விந்துநடு ஓமென்றூணே

உண்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
பேணியந்த மந்திரத்தைத் தினம்நூறப்பா
பிரியமுடன் தினம் நூறுருவேசெய்தால்
காணுமந்த ஆக்கிருஷ்ணந்தான் சித்தியாகும்
கருணையுட னினைத்ததெல்லாங் காணுங்காணும்
வேணுமிந்த ஆக்கிருஷ்ணந்தான் உலகத்தோர்க்கு
வேண்டிமிகச் சொன்னதிந்த விவரம்பாரே.
                       -அகத்தியர் பரிபூரணம் 1200

பொருள்:
நீ தெரிந்து கொள்வதற்க்கா உச்சாடத்தை பற்றி சொன்னேன்,
அதற்கடுத்ததாக ஆக்கிருஷ்ணத்தை சொல்கிறேன் கேள்,
ஒரு வெள்ளிக்கிழமை நாளில் ஒரு தங்க தகட்டில் நவகோணம் 
போட்டு அதன் நடுவில்ஒரு வட்டம் போடவும் பின்னர் 
அவ்வட்ட்த்தினுள் "ஓம்" என்று எழுதவும். எழுதிய அந்த யந்திரத்தை
பூசையில் வைத்து அதை சுற்றி அரளி மலர்களால் அலங்கரிக்கவும்.

பின்னர் உடல்மனசுத்தியுடன் செம்பட்டு ஆடை உடுத்தி வெள்ளாட்டு 
தோலை விரித்து அதன்மீது வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து 
கொண்டு மன ஓர்நிலையுடன்
"ஓம்கிலியும் சவ்வும் றீயும் ஐயும் நமோபகவதிதேவி டங்டங் சுவாகா"
என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் 
செபித்தால் ஆக்ருஷணம் சித்தியாகும்.
ஆக்ருஷணம் சித்தினால் நாம் நினைத்த எதையும் நம்மை 
நோக்கி வரவழைக்கலாம். உலக மக்கள் தனக்கு வேண்டியதை 
அடைந்து கொள்வதற்க்கா இதைப்பற்றி விவரமாக சொன்னேன் 
என்கிறார் அகத்தியர்.

                                          பகிர்வில் ர.சடகோபால்.BA 

கருத்துகள் இல்லை: