ஞாயிறு, 30 நவம்பர், 2014

அஞ்சனா தேவி மந்திரம்.


இன்று நாம் பார்க்க இருக்கும் தெய்வத்தின் பெயர் "அஞ்சனா தேவி" அல்லது "அஞ்சனை தேவி".  ஆரம்பத்தில் இந்த தெய்வம் வாயு புத்திரனான ஆஞ்சனேயரின் தாயாராக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதாலும், அத்தகைய குறிப்புகள் வேறெங்கும் இல்லாததினாலும் இந்த தெய்வம் வாலையைப் போல தனித்துவமான தன்மைகளையும், பண்புகளையும் கொண்டவளாய் இருக்க வேண்டும். 

சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் படைப்புகளின் ஊடே புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இடமில்லை. எனது சிறிய அனுபவத்தில்  நான் பார்த்த வரையில் அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணமோ, காரியமோதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த அஞ்சனா தேவியின் அருளை பெறுவதற்கான மந்திரத்தையும், அதை செயலாக்கும் நுட்பத்தையும் அகத்தியர் தனது "அகத்தியர்12000" எனும் நூலில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின் வருமாறு.....

ஆச்சப்பா இன்னமொரு மார்க்கங்கேளு
அருளான அஞ்சனா தேவிமூலம்
பேச்சப்பா பேசாத மவுனமூலம்
பிலமான புலத்தியனே சொல்லக்கேளு
மூச்சப்பா நிறைந்தவெளி மூலாதாரம்
முத்திதரும் ஆதாரத்தில் மனக்கண்சாத்தி
காச்சப்பா ஓங்கிலியும் ரங்ரங்கென்று
கண்ணார நூறுருவிற் காணலாமே.

காணுகிற விதமென்ன மைந்தாகேளு
கற்பூர தீபஒளி சோதிபோலே
தோணுகிற போதுமனம் ஒன்றாய்நின்று
சோதியெனு மஞ்சனா தேவியென்று
பேணியவள் பாதமதைசிர மேல்கொண்டு
பிலமாக மானதாய்ப் பூசைப்பண்ணி
ஊணிமன மொன்றாக நீறுசாத்தி
உத்தமனே நித்தியமுந் தியானம்பண்ணே.

பண்ணப்பா நித்தியமுந் தியானம்பண்ண
பதிவான இருதயமே வாசமாகி
முண்ணப்பா நிறைந்ததிரு சோதிபோலே
முக்யமுடன் காணுமந்த சோதிதன்னால்
கண்ணப்பா கண்ணுமன மொன்றாய்நின்று
காணுதடா அண்டபதங் கண்ணிநேரே
உண்ணிப்பா உன்னியந்த விண்ணுமண்ணும்
ஊடுருவிப் பார்த்ததைநீ ஒண்டிக்கேளே.

ஒண்டுமிடந் தனையறிந்து அண்டத்தேகி
ஊசாடு மஞ்சனா தேவிமூலம்
நின்றுமன தறிவாலே தியானம்பண்ணி
நேமமுடன் விபூதியைநீ தரித்துக்கொண்டு
சென்றுஅந்த ஆகாச வெளியைப்பாரு
திருவான அஞ்சனா தேவிதன்னால்
கண்டுகொள்வாய் பகல்காலம் நட்சத்திரங்கள்
காணுமடா கண்னறிந்து கண்ணால்பாரே.

கண்ணாரப் பூமியைநீ நன்றாய்ப்பார்த்து
கருணைவிழிப் பார்வையினால் உண்ணிப்பாரு
பொன்னான பூமிநடுப் பாதளத்தில்
பொருளான வெகுநிதிகள் பொருந்தக்காணும்
முன்னோர்கள் வைத்தநிதி கண்டாயானால்
மோகமென்ற ஆசையைநீ வைக்கவேண்டாம்
மெய்ஞானி செய்தவத்தை நன்றாய்ப்பாரு
மெஞ்ஞான அஞ்சனா தேவிதானே.
                                                                            -அகத்தியர் 12000
மூலாதாரத்தில் மனதை நிறுத்தி, அஞ்சனா தேவியின் மூலமந்திரமான "ஓங் கிலியும் ரங்ரங்" என்ற மந்திரத்தினை நூறு தடவைகள் செபிக்க வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து செபித்து வந்தால் அஞ்சனாதேவி மனக்கண்ணில் ஜோதி வடிவாக காட்சி தருவாளாம். அப்போது நம் நெற்றியில் திருநீறு சாத்தி அந்த தேவியை வணங்கி, மனதால் பூசித்து மந்திர ஜெபத்தை தொடர வேண்டும் என்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வந்தால், பகல் நேரத்தில் நட்சத்திரங்கள் தென்படுமாம், அத்துடன் பூமியில் பாதாளத்தில் முன்னோர் வைத்த நிதிகளும் தென்படுமாம். அப்போது  அந்த பொருட்களின் மீது ஆசை கொள்ளாமல், மெய்ஞானிகள் செய்த தவ முறைகளை எண்ணினால், அஞ்சனா தேவியின் அருளினால் அவை யாவும் கைகூடும் என்கிறார் அகத்தியர். 

                      பகிர்வில் ர.சடகோபால்.BA 

வெள்ளி, 28 நவம்பர், 2014

தூரத்து செய்தி அறியும் மை


காணுதற்கே யின்மைமொன்றுக  ருவைக் கேளு 
 காசினியில் வேறெல்லாங் காய்க்கும் பூக்கும் 
தோணுதற்கு சொன்ன பலர் வேறே மைந்தா 
 சுத்தமுடன் றானுலர்த்திந றுக்கிக் கொண்டு 
பூணுதற்கு மால்தேவிந ருக்கிக் கொஞ்சும் 
 பக்தியுடன் பாம்பரணை பிச்சுங்கூட்டி
ஆணுவத்தான் மூன்றுமொன்றாய் பொடித்துக் கொண்டே 
 வப்பனே அயக்கரண்டி தன்னிற் போடே.

  -  இவ்வுலகில் இன்னுமொரு அதிசயத்தை கேளு இப்பூமியில் வேரெல்லாம் பூத்துக் காய்க்கும் மூலிகையின் வேரினை எடுத்து உலர்த்தி நறுக்கிக் கொண்டு அதனுடன் தாளகம் பாம்பரணையின் பிச்சு ஆகியவற்றை சம அளவாக எடுத்து பொடித்துக் கொண்டு அயக்கரண்டியில் போட வேண்டும் .

தன்னிலே பசுநெய்யால் வறுத்துக் கொண்டு 
 சாதகமாய் காகிதத்திற்று ழாவி வைத்தே 
உன்னிதமாய் பசுநெய்யால றைத்து மைந்தா 
 உறுதியுள்ள தந்தமென்ற செப்பில் வைத்துத் 
தன்னிலையை தானறிந்துதி யானஞ் செய்து 
 தன்மையுள்ள வெற்றிலையிற்ற டவிப் பாரு 
உன்னிதமாய் வெகுதூர முள்ள செய்தி 
 உறுதியுடன் தோணுமடா வுற்றுப் பாரே
                                                                                      -அகத்தியர் பரிபூரணம்-400

- அதனை பசு நெய்விட்டு வறுத்து துழாவி வைத்துக் கொள்ளவும். பிறகு கல்வத்திலிட்டு  மேலுமந்த பசுநெய்விட்டு அரைத்து தந்தச் சிமிழில் வைத்துக் கொள்ளவும். குருவை நினைத்து தியானம் செய்து வெற்றிலையில் தடவி பார்க்க வெகு தூரமுள்ள செய்தியானது தோன்றும்.

                   பகிர்வில் ர.சடகோபால்.BA 




     

புதன், 26 நவம்பர், 2014

சிதம்பரம்


                      "பாவென்ற பஞ்சகர்த்தான் பாதம் போற்றி 
                  பண்பான பதினெண்பேர் பாதம் போற்றி" 

சிதம்பரம் திருக்கோவில் மானுட தத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பஞ்ச சபைகளில்  கனகசபையான இத்தலம் பூலோக கைலாயமாகும். இத்தலம் நிலவுலகுக்கு நடுவான தலம். 
இறைவன் எப்போதும் திருநடனம் புரியும் தலம். சிவ கலைகள் ஆயிரமும் ஒடுங்கியிருக்கும் மூலஸ்தனம் இத்தலம் தான்.
உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களும் சென்று பின்னர் மீண்டும் பின் யாமத்தில் இங்கு வந்து இங்குள்ள மூலஸ்த்தனத்தில் ஒடுங்கும். எனவே தான் இத்தல இறைவன் மூலட்டான நாதர்  என பெயர் பெற்றார்.
இங்குள்ள ஒன்பது தங்க கலசங்கள் நவ சக்திகளை குறிக்கும். ஆடல் வல்லான் எழுந்தருளியுள்ள கொலு மண்டபத்தில் உள்ள நான்கு தூண்கள் நான் மறைகளின் சின்னமாகும். அதற்கு சற்று முன்புள்ள ஆறு தூண்கள் உள்ள மண்டபம் ஆறு சாஸ்திரங்களின் சின்னமாகும். அதற்க்கு வெளியே உள்ள 18 தூண்கள்  பதினெண் புராணங்களின் சின்னமாகும்.
நடராஜர் அருகில் செல்ல உள்ள 5 வெள்ளி படிகள் ஐம்போறிகளைக் குறிப்பதாகும் . இந்த ஐந்துபடிகள் சிவனின் பஞ்சாட்சரத்தின் சின்னமாகும். 

மனிதன் ஒரு நாளில் விடும் சுவாசம் 21,600 ஆகும்.  இங்கு வேயப்பட்டுள்ள ஓடுகள் 21,600 ஆகும்.  சுவாச சஞ்சாரத்திற்க்கு   ஆதரவான நாடிகள் 72,000 ஆகும்.  இங்கு 72,000 ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

   பிரம்ம பீடத்தில் உள்ள 10 தூண்கள் 6 சாஸ்திரத்தையும் 4 வேதங்களையும் குறிக்கும்.
இவ்வாறாக இத்தலம் மானுட உடலமைப்பினை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 
  பஞ்ச பூதத் தலங்களுள் எல்லா பூதங்களும் தோன்றி இறுதியில் ஒடுங்கும் 
ஆகாசத் திருத்தலமாக இத்தலம் விளங்குகிறது.......

                 பகிர்வில் ர.சடகோபால்.BA  

அகத்தியர் சொல்லும் வேம்பின் பெருமை


பொதுவாகவே வேப்ப மரத்தின் அரும் பெரும் குணங்கள் தற்போது பலருக்கு தெரியாது. அப்படித் தெரிந்தாலும் அது அம்மரத்தைப் பற்றிய பொதுவான குணமாகவே இருக்கும்.


வேம்பைப் பற்றி அகத்தியர் இயற்றிய நூல்களில் தத்துவம் முன்னூறு என்ற நூலில் மூன்றாவது ஞானகாண்டத்தில் வேம்பின் பெருமையை மிக அழகாகக் கூறுகிறார்.

“பாரப்பா வேம்பினூட பிறப்பைக் கேளு
பணியனையன் பாலாழி யமுர்தம் தனை
நேரப்பா பெண்ணுருவாய் தேவர்க்குப் படைத்தார்
நிகரில்லா ராட்சதர்கள் பெண்ணைப் பார்த்து
சாரப்பா மயங்கி நின்ற ரசுரர்ககளி லொருவன்
தானவர்கள் பந்தியிலே வந் திருந்த தாலே
சேரப்பா தேவருடன் கலந்திருந்த தாலே
திருமாலு மூன்றகப்பை படைத்தான் கேளே.”

விளக்கம் :-

வேம்பின் பிறப்பைப் பற்றிக் கூறுகிறேன் கேளு, திருமால் பெண்ணுருவம் கொண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு அகப்பையினால் பங்கிடும் போது, அசுரர்கள் அந்தப் பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி இருக்கையில், அசுரர்களில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் தேவர்கள் பந்தியில் வந்து அமர்ந்துவிட, திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கும் மூன்றகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார்.
“படைத்திட்ட பெருமாலாம் பெண்ணி னோடு
பருதி மதி யசுரனவ ரென்ற போது
உடைத்திட்ட அசுரனவன் னமுர்த முண்ண
ஓரடியா யாகப்பையினால் வெட்டினார் மால்
படைத்திட்ட யிரண்டாகி ரவி மதிக்கு
பகையாகி ராகுகே துக்களேன்றே சர்ப்பமானார்
அடைத்திட்ட அகப்பையினால் வெட்டும் போது
அவன்வா யாலமுர்த்த மாதைக் கக்கி னானே.”


விளக்கம் :-

அமிர்தத்தை கொடுத்த திருமாலுக்கு அருகிலிருந்த சூரியனும், சந்திரனும், அவன் அசுரன் என்று ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டு இருந்த அசுரனை நோக்கித் திருமால் அகப்பையால் வெட்டி விட, அசுரன் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு, அடையாளம் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களுக்கு பகைக் கிரகமான ராகு, கேது என மாறினார்கள்.

அகப்பையினால் வெட்டுப்படும் போது அசுரன் தனது வாயில் மீதமாக இருந்த அமிர்தத்தைக் கக்கினான்.

“கக்கும்போ தமூர் தமது லிங்கம், போலக்
காசினியில் விழுந்ததுவே வேம்பு மாச்சு
முக்கியமாய்க் கசப்பு வந்த தேதென்றாகால்
முனையசுரன் வாயில் நின்று வீழ்ந்ததாலே
சக்கியமாய் வேம்பு தின்றால் சாவோ யில்லை
சனகாதி நால்வருடன் யானுந் தின்று
அக்கண மேசித்திபெற் றவேம்பு நேர்மை
ஆரறிவா ருலகத்தோ ரறியார் காணே.”

விளக்கம் :-

கக்கும்போது அசுரனின் வாயிலிருந்து பூமியில் விழுந்த அமிர்தமானது வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச்சுவை வந்த காரணம் என்ன வென்றால், அசுரனின் (பாம்பின்) நச்சு வாயிலிருந்து வெளிப்பட்டதால் தான். அப்படிப் பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு சாவு என்பதே கிடையாது. இப்படிதான் சனகாதி நால்வருடன் ( என் குருமார்கள் நால்வருடன்) சேர்ந்து நானும் சாப்பிட்டு காயசித்தி பெற்றேன். இப்படிப்பட்ட வேம்பின் பெருமையை இந்த உலகத்தில் யார் அறிவார் என்று மிகதெளிவாக வேம்பின் பெருமையை அகத்தியர் தெளிவுபடக் கூறுகிறார்.

காயசித்தி :- 

                            காயம் என்றால் உடம்பு சித்தி என்றால் சித்திக்கும்,  ஆகவே,    அழிவில்லா உடல் சித்திக்கும் என்று பொருள்.


                             பகிர்வில் ர.சடகோபால்.BA

புதன், 19 நவம்பர், 2014

ஈசான முகம்

"ஈசான முகம்" என்பது சிவனின் ஐந்து முகங்களில் ஒரு முகமாகும் 

உண்மையின்னஞ் சொல்லுகிறோம் ஆகிர்ஷணந்தான் 
 உத்தமனே சிதம்பரத்தின் ரூபமாகும் 
வன்மையுறும் ராசியும் சிவாயநமா வென்று 
 வாட்டவே உற்பனஞ்சேர் ஈசானங்கள் உண்டாம் 
தன்மைமிகு ஆங்சிவ சிவாய அவ்வுமோதில் 
 தவறாத பிரசாத சுந்தரரை காணலாமே 
                                                                                      -கருவூரார் 

"ஆகர்ஷணம் என்பது சிதம்பரத்தின் உருவமாகும் "

பொருள்:
                சிவாயநமா -  ஈசானங்கள் உண்டாகும் 
                ஆங்சிவ சிவாய - பிரசாத சுந்தரரைக் காணலாகும் 
(பிரசாத சுந்தரர் -சிவ வடிவில் ஒன்று )

             பகிர்வில் ர.சடகோபால்.BA  

வியாழன், 13 நவம்பர், 2014

கார்த்திகை வீரியார்ச்சுன மந்திரம்


அருளாலே ஓம் ஆம் ஸ்ரீயுங் கிலியும் 
 அரிய கார்த்திகை வீரியார்ச்சுன சுவாகா வென்று 
பொருளாக லக்ஷமுரு செபித்து தீரு 
 பொங்கமாய்த் தர்ப்பணமு மோமமன்னம் 
மருளாக பூசையது பத்துஞ்செய் நீ 
 மைந்தனே சித்திக்கக் கிரிகையாகுஞ் 
சுருளாக நினைத்தபடி எல்லாஞ் செய்யுஞ் 
 சுகமான போகருட கடாஷந் தானே 
                                                                              -புலிப்பாணி சித்தர் 
பொருள் :
                    "ஓம் ஆம் ஸ்ரீம் கிலியும் அரிய கார்த்திகை வீரியார்ச்சுன சுவாஹா" 
என்று லக்ஷமுரு ஜெபித்து தர்ப்பணம் முதலிய பத்து பூஜைகள் செய்து வந்தால் சித்தியாய் முடியும். நீ நினைத்தபடி எல்லாஞ் செய்யும். இது போகருட கடாஷத்தாலே புலிப்பாணியாகிய நான் உனக்கு சொல்கிறேன்....

                         பகிர்வில் ர.சடகோபால்.BA   

புதன், 12 நவம்பர், 2014

விநாயகர் வசிய மூலிகை


வெள்ளெருக்கு செடிக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் சதுர்த்தி அல்லது பௌர்ணமி அல்லது தேய்பிறை  அன்று காப்பு கட்டி ஆணி வேர் ஆறாமல் எடுத்து வேருடன் ஒன்பது மிளகு சேர்த்து தாயத்தில் அடைத்து பூஜையில் வைத்து மந்திரம் ஜெபித்து கழுத்திலோ, அல்லது கையிலோ கட்ட எப்படிப் பட்ட எதிரிகளும் வசியமாகி நம் சொற்படி நடப்பார்கள். வியாபாரம், தொழில் விருத்தி உண்டாகும். விநாயகர் வசியம் உண்டாகும்.
மந்திரம்:
               " ஓம் கம் கணபதயே வக்ர துண்டாய ஹீம் சுவாகா"

                         பகிர்வில் ர.சடகோபால்.BA 

செவ்வாய், 11 நவம்பர், 2014

சகல வித்யா யட்சணி மஹா மந்திரம்

  சகல வித்யா யட்சணி மஹா மந்திரம் 

மூல மந்திரம்:
                              " ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் வாக்கு வாகினி வாகிஸ்பரி ஐம் கிலிம்                                          சவ்வும்  மமவாக் சித்தம் குருகுரு சுவாகா".

இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 21-நாட்கள் செபம் செய்ய வேண்டும்.

பூசை முறை: 

பால்,தேன்,மல்லிகை,புஷ்பம்,சந்தனம்,பத்தி,சூடம்,தேங்காய்,வடை,
சுண்டல் முதலியன வைத்து தீபதூபம் காட்டி செபம் செய்தால் மந்திரம் சித்தியாகும்.இதனால் தேவி தரிசனம் உண்டாகும்.அத்தேவி நம் நாக்கில் அட்சரம் எழுதும் இதனால் தானே பாடும் சக்தியும், சகல வியாகரணமும் உண்டாகும்,வேதாந்த இரகசியமும், சகல கலைஞானமும் வெளிப்படும், கவிதா சத்தியும்,வாக்கு சித்தியும் உண்டாகும் என்கிறது மலையாள மாந்திரிகம்...

                       பகிர்வில் ர.சடகோபால்.BA 

தன ரதிப்ரியா யட்சணி

தன ரதிப் பிரியா யட்சணி மஹா மந்திரம் 


கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 30 நாட்கள் ஜெபிக்க 30 ம் நாள் தன ரதிப்பிரியா யட்சணி பிரசன்னமாகும்.

மூல மந்திரம்:
                            "ஓம் ரம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே ரதிப்ரியே சுவாகா"
பூஜை முறைகள் :
                              பால்,பழம்,இனிப்பு வகைகள், தேங்காய்,வெற்றிலைப்பாக்கு முதலியன வைத்து செவ்வரளி புஷ்பத்தால் ஜெபம் செய்ய வேண்டும்.

இதன் பயன்:
                             திரிகாலமும் சொல்லும், மறைமுகமாக தனம் கொடுக்கும், சர்வ வியாதிகளுக்கும் விபூதி மந்திரித்து கொடுக்க குணமாகும். சர்வ சௌபாக்கியம் உண்டாகும் .

                 பகிர்வில் ர.சடகோபால்.BA  

திங்கள், 10 நவம்பர், 2014

மோகினி தேவதை வசிய மஹா மந்திரம்


மோகினி என்பவர்கள் இந்திரன் சபையில் உள்ள நல்ல தேவதைகள். மோகினியை சித்தி செய்தவர்களுக்கு வசியம்,மோகனம் முதலியவை சித்தியாகும். பிறரை எளிதில் கவரக் கூடியவராக விளங்குவார்கள்.

கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 15 நாட்கள் ஜெபம் செய்ய சித்தியாகும்.

மூலமந்திரம்:
                          "ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா வா  ஐயும் க்லீம் சிவ சிவ மோகினி நசி நசி மசி மசி சுவாகா"
பூஜை முறைகள் :
                              பௌர்ணமியில் ஆரம்பித்து அமாவாசையில் முடிக்க வேண்டும்.  பால்,பழம் கற்கண்டு, வெற்றிலைப்பாக்கு, தேங்காய், முதலியன வைத்து பூஜை செய்ய வேண்டும். மல்லிகை மலரால் பூஜித்து, வாசனை திரவியம் வைத்து மோகினியை தியானம் செய்ய வேண்டும். 15 ம் நாள் இரவு மோகினி தேவதை ஓர் அழகிய பெண் உருவத்தில் வந்து நிற்கும். உடனே பணிந்து தாயே என்று வணங்கி நான் அழைக்கும் பொழுது வந்து எனக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என கேட்க வேண்டும் 
          பிறகு மோகினி தேவதை சிரித்து விட்டு மறைந்து விடும். அப்படி சிரித்து விட்டு மறைந்தால் உனது வேண்டுதலை ஏற்று கொண்டதாக அர்த்தம்.

குறிப்பு:
               மோகினிக்குரிய யந்திரம், மை,மூலிகை, கண்டிப்பாக வைக்க வேண்டும் 

                    பகிர்வில் ர.சடகோபால்.BA         

ஞாயிறு, 9 நவம்பர், 2014

ஸ்ரீ-வராஹி மஹா மந்திரம்


வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். மாந்திரிகத்தில் ஓர் அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவள் வராஹி. வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும்  தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.


மூல மந்திரம்:
                           "ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா"

பூஜை முறைகள்:
                            வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை  செய்ய வேண்டும்.

இதன் பலன்:
                          தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

                       பகிர்வில் ர.சடகோபால்.BA 
                               

வியாழன், 6 நவம்பர், 2014

தெய்வ ஆகர்ஷணம்

ஆகர்ஷணம் என்பது அழைப்பது என்பதாகும் 

சுருதியாய் சிறுமுன்னை வேரை வாங்கச் 
 சுரோணிதஞ்சேர் குக்குடமே பலிகொடுத்துச் 
சோமனுட கிரகணத்தில் தியனாங்கேளே 
 கேள் சர்வ ஆக்ரூசணி சுவாகா வென்று 
கிரக்கிச்சு நிழலுலர்த்தித் தூளாயாட்டி 
 வேளப்பா வெள்ளெருக்கம் பஞ்சில்வைத்து 
விளக்கேற்றி வைத்திருக்க பார்த்த தெய்வம் 
 வாளுயர்ந்த வாகனமும் ஏறிக்கொண்டு 
வந்து நிற்கும் உன்முன்னே மைந்தாபாரு
 சூழவே யார்வந்து பார்த்தலுந்தான் 
தோற்றுமடா அவரவர்கள் முன்னேதானே 
                                                                              - கருவூரார் 

பொருள்:
                       சிறுமுன்னை செடிக்கு சந்திர கிரகணத்தில் கோழி பலி கொடுத்து    "சர்வ ஆக்ருஷ்ணி சுவாகா" என்று மந்திரம் சொல்லி வேரை எடுத்து நிழலிளுலர்த்தித் தூள் செய்து, வெள்ளெருக்கம் பஞ்சில் வைத்துத் திரி செய்து விளக்கேற்றி பார்க்க, நினைத்த தெய்வம் தனது வாகனத்துடன் கண்ணுக்கு தோன்றும்,வேறு நபர் பார்த்தாலும் அவ்வாறு காட்சி தெரியும் 

              பகிர்வில் ர.சடகோபால்.BA  

செவ்வாய், 4 நவம்பர், 2014

சர்வ வசியம்

தேனாம் வெள்ளி ஞாயிறதில்
 திங்கள் வியாழம் நெய்யாகும் 
பானாம் செவ்வாய் புதன் பாலாம் 
 பகரு முடவன் நீராகும் 
ஆனால் ஆவின் புல்லுருவி 
 அதிலே குழைத்துத் திலர்த்தமிட 
வானோ ரெல்லாம் வசமாவார் 
 மண்ணில் சர்வ வசியமிதே 
                                                            - அகத்தியர் 

பொருள்:
                   ஆவின் புல்லுருவிக்கு காப்புக்கட்டிக் கொண்டு வந்து மோகன மந்திரத்தை லட்சம் உரு ஜெபித்து  வெள்ளிக் கிழமை,ஞாயிற்றுக் கிழமை  தேனிலும்; திங்கட் கிழமை,வியாழக் கிழமை நெய்யிலும்; செவ்வாய்,புதன், காராவின் பாலிலும்; சனிக்கிழமை நீரிலும்  குழைத்து திலர்த்தமிட , இப்பூவுலகில் சர்வ ஜனங்களும், விண்ணுலக தேவர்களும் வசியமாவார்கள்.

குறிப்பு:
                      ஆவின் புல்லுருவி என்பது  ஆலமரத்து புல்லுருவியாகும் .

மோகன மந்திரம்:
                       "ஓம் கிலியும் சவ்வும் றியும் ஸ்ரீயும் ஐயும் ஒம்சங்  மசிவயந  மோஹனாய சுவாகா"


                      பகிர்வில் ர.சடகோபால்.BA      

ஞாயிறு, 2 நவம்பர், 2014

அனுராஹினி யட்சணி மஹா மந்திரம்

அனுராஹினி யட்சணிக்குரிய யந்திரம்,மை,மூலிகை, வைத்து பூஜை செய்ய வேண்டும் .


கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு 21 நாட்கள் ஜெபிக்க அனுராஹினி யட்சணி தேவி பிரசன்னமாகும்.

மூல மந்திரம் :

                         "ஓம் ஹிரீம்  அனுராஹினி  மைதுன ப்ரியே ஸ்வாஹா"

நிவேதனம் :
                          தேங்காய்,பழம்,வெற்றிலைப்பாக்கு, பால், பழவகைகள், முதலியன வைத்து யட்சணிக்குரிய மூலிகையை வெள்ளி தாயத்தில் அடைத்து வைத்து நெய் விளக்கு ஏற்றி ஜெபம் செய்ய வேண்டும்.

இதன் பயன்:
                          திரிகாலமும் சொல்லும், மறைமுகமாக தனம் கொடுக்கும், 
ஓர் இடத்தில் இருக்கும் பொருளை நாம் தொட்டு விட்டு வந்தால்  அந்த பொருள் அன்று இரவு நம்மிடம் கொண்டு வந்து கொடுக்கும். எட்டு வகையான ஆகார்ஷணம் சித்தி ஆகும்.

குறிப்பு:
               நான் இங்கு மந்திரம் மட்டுமே கூறியிருக்கிறேன். இதற்க்கான மை,மூலிகை, யந்திரம் எதுவும் கூறவில்லை.  தவறாக ஜெபம் செய்தால்  கடும் ஆபத்திற்கு உள்ளாகும் என்பதை கவனம் கொள்ள வேண்டும் ..

           பகிர்வில் ர.சடகோபால்.BA 

சனி, 1 நவம்பர், 2014

ஸ்ரீ நாக கன்னிகா வசிய மந்திரம்

ஸ்ரீ நாக கன்னிகா  என்பது தேவலோகத்தில் உள்ள நல்ல தேவதைகளாகும் 

கீழ் கண்ட மந்திரத்தை 1008உரு 18 நாட்கள் ஜெபிக்க சித்தியாகும் 


மூல மந்திரம்:
                         "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸெளம் நமோ பகவதி நாகலோக வாசினி சர்வ விசும் நாஸயம் நாஸய பீம் பீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாகா"  

நிவேதனம்:
                         பால்,பழவகைகள்,தேன்,கற்கண்டு,லட்டு,தேங்காய்,வெற்றிலைப்பாக்கு  முதலியன வைத்து மல்லிகை மலரால் அலங்கரித்து பூஜை வைக்கவும் 

இதன் பயன்:
                          குறி சொல்லலாம், சுப காரியங்கள் நடத்திக் கொடுக்கும், 

குறிப்பு:
                ஸ்ரீ-நாக கன்னிகா  யந்திரம், மை, மூலிகை  கண்டிப்பாக வைத்து பூஜை செய்தால் தான் சித்தி ஆகும்.

      பகிர்வில்.ர.சடகோபால்.BA 

ஸ்வர்ணரேகா யட்சணி


யட்சணிக்குரிய யந்திரத்தை வைத்து 22 தினம் 1008 உரு ஜெபிக்க தேவி தரிஷனம் கிடைக்கும்



நிவேதனம்:
பால்,பழம்,தேங்காய்,அதிரசம்,அப்பம்,தேன்,கற்கண்டு இவைகளை படையலாக வைத்து கீழ் கண்ட மந்திரத்தை முறைப்படி ஜெபம் செய்ய வேண்டும் . 

மூல மந்திரம்:

"ஓம் ஸகம் ஸகம் சால்மல ஸ்வர்ணரேகா ஸ்வாஹா"

இதன் பயன்:
தேவி தரிஷனம் கிடைத்தவுடன், நாம் வேண்டும் பொழுது தேவி பிரசன்னமாகி நமக்கு வேண்டிய உதவிகளை செய்யும், திரிகாலமும் சொல்லும், மூலிகை,அஞ்சனம், பற்றி தெரிந்துகொள்ளலாம். இன்னும் பல அற்புதமான காரியங்கள் செய்யும். புதையல் எடுக்க உதவும்.

குறிப்பு :
யட்சணிக்குரிய மூலிகை,மை,யந்திரம், எதுவும் நான் இங்கு குறிப்பிடவில்லை, முறையாக செய்யவில்லை என்றால் கடும் ஆபத்திற்கு உள்ளாகும் என்பதை கவனம் கொள்ள வேண்டும்.

          பகிர்வில் ர .சடகோபால்.BA