வெள்ளி, 12 டிசம்பர், 2014

வாலை தேவி மஹா மந்திரம்

வாலை தேவி என்பவள் சித்தர்களால் வணங்கி வழிபட்டு வந்த ஓர் பெண் தெய்வமாகும். அவ்வாறு சித்தர்களால் வழிபட்டு வந்த தேவியை நாமும் வழிபட மாந்திரிகம் என்னும் நூலில் தேவியின் மந்திரத்தையும் வழிபடும் முறையையும் கருவூரார் சித்தர் கூறியிருக்கிறார். கீழ் காணும் மந்திரத்தை ஒரு லட்சம் உரு ஜெபிக்க சித்தியாம்.
 
மூலமந்திரம்:
                          "ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா வாலை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமஹா"

இந்த மந்திரத்தை சித்தி செய்தவர்களுக்கு  மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. மேலும் இந்த தேவியால் சர்வ சுப காரியங்களும் சித்தியாகும். செல்வம் பெருகும். உடலில் உள்ள நோய்களெல்லாம் விலகி விடும்.

                    பகிர்வில் ர.சடகோபால்.BA  

வியாழன், 11 டிசம்பர், 2014

சர்வ வசியம்


ஆமையா றீம் ஐயுங் கிலியுமென்றெ 
 அடைவாக ஸ்ரீயுடனே சவ்வுங் கூட்டித் 
தாமையா இறீம் க்லீம் ஓமென்று சொல்லித் 
 தான்செபிக்க லஷத்திற் சித்தியாகும் 
வாமையா வறுமையெலா மகன்றுபோகும் 
 வளமான தேவதையு மன்னர் தாமும் 
நாமையா லோகமெல்லாம் வசியமாகும் 
 நலமாக தொழிலகளெல்லாஞ் சித்தி தானே
                                                                             -புலிப்பாணி சித்தர் 
பொருள்:
                  "றீம் ஐயுங் கிலியும் ஸ்ரீம் சவ்வும் இறீம் க்லீம் ஓம் "  என்று லட்சம் உரு செபிக்க அம்மந்திரம் சித்தியாய் தரித்தரமெல்லாம் ஒழிந்துபோகும் , இதனால் யாவரும் வசியமாவார்கள். சர்வகாரியங்களும் சித்தியாகும். 

                 பகிர்வில் ர.சடகோபால்.BA   

செவ்வாய், 9 டிசம்பர், 2014

மாந்திரிகம் வசியம்

மாந்திரிகம் என்பது பழந்தமிழத்தில் புழக்கத்தில் இருந்த கலை. பெரும்பாலும் இதொரு தற்காப்பு கலையாகவே அறியப் பட்டிருந்தது. மருத்துவத்திலும் மாந்திரிகத்தின் பயன்பாடுகள் இருந்தன. காலப் போக்கில் மனிதனின் பேராசை இந்த கலையின் திறத்தையும், குணத்தையும் நிழலான காரியங்களின் பக்கம் மாற்றி வைத்தன.

சித்தர் பெருமக்களின் பாடல்க்ளின் ஊடே இந்தக் கலையைப் பற்றி உயர்வாக குறிப்பிடப் பட்டிருக்கின்றது. இந்த கலையினை அறிந்து தெளிந்து தேர்ந்தவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்களாம். அத்தகைய சிறப்புடையவர்களை எளிதில் இனம் காண இயலாது என கூறியிருக்கின்றனர். மேலும், அவசிய அவசரங்கள் இருந்தால் மட்டுமே இந்தக் கலையினை நாடவும், கைகொள்ளவும் வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

இந்த மாந்திரிகத்திலும் எட்டு நிலைகளை வகுத்துக் கூறியிருக்கின்றனர். இவற்றை மாந்திரிக அட்டமாசித்து அல்லது அட்டகன்மம் என்கின்றனர். 

வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் .ஆகியவையே மாந்திரிகத்தின் எட்டு நிலைகள். இவை குறித்தும் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். இனி வரும் நாட்களில் இந்த அட்ட கன்மங்களைக் கொண்டு நோய்நொடிகள் பிரச்சனைகள் என்று தேடிவரும் மக்களுக்கு எவ்வாறு தீர்வுகளை கொடுக்கபட்டது  என்பதைப் பற்றிப் பார்ப்போம்.



வசியம்.

வசியம் என்பது ஒரு மனிதனை அல்லது மனிதர்களை தன் வயப்படுத்தி, தனது இச்சைகளுக்கு ஏற்ப அவரை அல்லது அவர்களை ஆட்டுவிப்பதேயாகும். இந்த வசியக் கலையை பயன்படுத்தி எந்தவகையில் தீர்வுகளை அளிக்க முடியும் என்பதை அகத்தியர் தனது "அகத்தியர் 12000" என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.

வசியமாய்க் காரீயத்தகடு வாங்கி
வளமாக நயமவசி என்று மாறி
உண்மையுள்ள மாந்தருக்கு கட்டினாக்கால்
பசிதாக மானதுபோல் உனைக் கண்டோர்கள்
பணிவார்கள் வசியமதாய்ப் பண்பாய் மைந்தா
நிசிதமுள்ள மிருக தாவர சங்கங்கள்
நேர்மையுடன் வசியமதாய் வணங்கும்பாரே.

காரீயத்தகடு ஒன்றை எடுத்து, அதில் "நயமவசி" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த காரீயத்தகட்டை கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து வசிய மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.

இவ்வாறு செபித்து முடிந்ததும், தீர்வும், தேவையும் உள்ளவர்கள் உடலில் இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களுக்கு மிருகங்கள் தாவரங்கள் வசியமாகுமாம். அத்துடன் அவர்களும் பண்பும் பணிவும் நிறைந்தவர்களாக நடந்து கொள்வார்கள் என்கிறார்.

வசிய மூலமந்திரம் - "ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா."


               பகிர்வில் ர.சடகோபால்.BA 

வெள்ளி, 5 டிசம்பர், 2014

மயேந்திர தேவி மஹா மந்திரம்


தானான மயேந்திரையின் மூலங்கேளு 
 தன்மையுள்ள தேவியென்ற மயேந்திரை தான் 
வேனான வம்வறியும் வையும் வாவா 
 வேதாந்த மயேந்திரையாள்  தேவி றாறா
ஆனான வன்புள்ள மைந்தா கேளு 
 ஆச்சரிய மாச்சரிய மைந்தாசொல்வேன் 
மானான நாள் வித மாயிரத்தெட்டாக 
 மண்டலந்தான் னுருச் செய்ய வசியமாமே.
                                                                                       -நந்தீசர் 

பொருள்:
                       மயேந்திரையின் மூல மந்திரம் சொல்கிறேன் கேள். "ஓம் றியும் வையும் வாவா மயேந்திரை தேவி றாறா" மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 48 நாட்கள் ஜெபம் செய்ய சித்தி ஆகுமாம். இது பல ஆச்சரியமான செயல்களை செய்யும்.

                             பகிர்வில் ர.சடகோபால்.BA 
                  

புதன், 3 டிசம்பர், 2014

ஓங்காரம் ஓம்


ஓம் என்பதிலே எல்லா வேதங்களும் மந்திரங்களும் பிறந்தன. ஆதலால் இதனைச் செபித்தால் எல்லா மந்திரங்களையும் செபிப்பதால் உண்டாகும் பயனை அடையலாம்.
              "ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி 
              ஈதெழுத் தாலே இசைந்தங் கிருவராய் 
              மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை 
              மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே"
                                                                                        -திருமூலர் 


"ஓ" என்னும் முன்னெழுத்தாலே உலகம் எல்லாம் கலப்பால் தானாகி; "ஓ" என்பதை பிரித்தால் அ+உ என்ற ஈரெழுத்தாய் நிற்கும்.அது சிவன், சிவை என்னும் இரு பொருளாய் தோற்றம் பெரும். 
மூன்றெழுத்தாகிய அ+உ+ம்  என்பவற்றால் தோன்றுகின்ற பேரோளியினை "ஓம்" என்பதின் கடையெழுத்தாகிய ம் என்னும் மகர எழுத்தால் உயிர்க்கு மயக்கம் வந்து பொருந்தும்.
"அ" என்றால் சூரியன். "உ" என்றால் சந்திரன். "ம்" என்றால் அக்கினி அதாவது "ஓம்" என்பது எல்லா பிரகாசங்களும் உள்ள பொருட்களின் சுயவடிவமாகும்.   
                        ஓம் என்னும் மகா மந்திரம் உயிர்களை பரமாத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்யும் ஆற்றலை கொண்டிருப்பதால் அது பிரணவ மந்திரம் என்று சொல்லப்படும் 

               பகிர்வில் ர.சடகோபால்.BA   

சக்தி மந்திரம்


பாரப்பா சிவபூஜை செய்துகொண்டு 
 பண்பான தேவிமந்திரம் பகரக்கேளு 
ஆரப்பா அறிவார்கள் அறிவோமென்று 
 அப்பனே ஸ்ரீசிரீங் சிவயவசி வாவென்று 
நேரப்பா சிவரூபி வாவா வென்று 
 நேர்மையுட னோர்மனதாய் நூற்றெட்டானால் 
காரப்பா சக்திசிவம் ரெண்டும்வைத்துக் 
 கருணைபெறத் தொழிற்முகத்திற் பூசைபண்ணே 
                                                                                         -அகத்தியர் பரிபாஷை 300

பொருள்:
                 இது சக்தி பூசை. தேவி மந்திரம் கேள். "ஸ்ரீ சிரீங் சிவயவசி வாவா சிவரூபி வாவா" என்று நூற்றியெட்டு உரு மன ஓர் நிலையுடன் செபிக்க வேண்டும். சக்தி,சிவம் இரண்டையும் வைத்து கருணை பெற தொழில் முகத்தில் பூசை செய்.

          பகிர்வில் ர.சடகோபால்.BA 

செவ்வாய், 2 டிசம்பர், 2014

உடலும் ஆன்மாவும்



உடலை விட்டு ஆன்மா  பிரிந்து விட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது. ஒன்று உடலைச் சுட்டெரித்து விடுகிறோம் அல்லது புதைகுழிக்குப் போகிறது. ஆக உயிர் தங்கி இருக்கும் வரையில்தான் இந்த உடலுக்கு அவசியமும், தேவையும், மரியாதையும் இருக்கிறது.


இப்படிப் பட்ட இந்த உடலும், உயிரும் எப்போது எப்படித் தோன்றுகின்றன?

எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர் தனது "அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய்
இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று
தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி
யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம்
சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று
பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல
ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த
நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்

- அகத்தியர்.

ஆணின் சுக்கிலத்தில் பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையும். இந்த சமயத்தில் ஏற்படும் உறவினால், பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம் என்று சொல்லப்படும் மூன்று விகற்பங்களும் அதனுடன் சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின் உட்சென்று தங்கி வளரத் துவங்கி, இருபத்தி ஐந்து நாளில் முளை போல தோன்றும் என்கிறார். இது உயிரற்ற ஒரு நிலை.

முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும்
பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி
யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள்
ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே.

- அகத்தியர்.

முதல் மாதத்தின் முடிவில் உருவான இந்த முளை பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல உருவாகுமாம். இரண்டாவது மாதத்தில் பிடறி, தோள், முதுகு ஆகிய பாகங்கள் உருவாகுமாம். மூன்றாவது மாதத்தில் உடல், விலா, இடுப்பு போன்றவைகள் உருவாகும்.அந்த கட்டதில் தான் கருவிற்கு உயிரும் வந்து இணையும் என்கிறார்.

ஆக,கருவானது மூன்றுமாத வளர்ச்சியின் பின்னரே உடலில் உயிர் வந்து சேருகிறது. அதன் பிறகே மற்ற அவயங்கள் வளரத்துவங்குகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் அறிவியல் வளராத பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்களால் தீர ஆராய்ந்து சொல்லப் பட்டிருக்கின்றன என்பதில்தான் இந்த தகவலின் மகத்துவமே அடங்கி இருக்கிறது. உடற்கூறியியலில் சித்தர் பெருமக்களின் ஆழ்ந்த அறிவு இன்றைய நவீன அறிவியலின் தெளிவுகளுக்கு கொஞ்சம் குறைந்ததில்லை என்பது நாம் பெருமிதத்துடன் நினைவு கூற வேண்டிய ஒன்று.

           பகிர்வில் ர.சடகோபால்.BA 

திங்கள், 1 டிசம்பர், 2014

ஜாலக்காள் தேவி வசிய மூல மந்திரம்

 ஜாலக்காள் தேவி என்னும் தேவதையை சித்தி செய்தால் தான் ஜால விளையாட்டுகளிலும் சித்து வேலைகளிலும் வல்லவராக விளங்க முடியும்.  அப்படி பட்ட ஜாலாக்காள் தேவதையை சித்தி செய்யும் முறையை நந்தீசர் தனது சகல கலைக் ஞானம் நூலில் குறிப்பிடுகிறார். பாடல் பின் வருமாறு,

சாலமென்ற ஜாலக்காள் மூலங்கேளு 
 ஞானிகட்கு யிம்மூலம் நவில்வோங் கேளு 
ஆலமென்ற ஆம் அறியும் அவ்வும் அய்யும் 
 அரகரா ஜாலக்காள் ஆக்கிருஷயா றாறா 
வாலமென்ற வடமுகமாய்க் குந்திக்கொண்டு 
 வளமாக லட்சமுரு மண்டலந்தானோது 
காலமென்ற காலமதில் செபந்தான்செய்ய 
 கனவுபோ லுண்பங்கில் கருச்சொல்வாளே 
                                                                                   -நந்தீசர் சகல கலைக் ஞானம் 
பொருள்:
                  ஜாலத்தின் அதி தேவதை ஜாலக்காள் மூலமந்திரத்தை சொல்கிறேன் கேள் "ஆம் றியும் அவ்வும் ஐயும் ஜாலக்காள் தேவி ஆக்ரூஷய றாறா" வடக்கு முகமாய் அமர்ந்து கொண்டு 48 நாட்கள் லட்சம் உரு கொடுக்க சித்தியாகும்.

நிவேதனம்:
                        தேங்காய் , பழம்., வெற்றிலைப்பாக்கு, பொங்கல் வைத்து சாம்பிராணி  மற்றும் தீபதூபம் காட்டவும்.
இதன் பயன்:
                          மந்திரம் சித்தி செய்தப்பின் ஜாலக்காள் தேவதை கனவில் வந்து குறி சொல்லும்  ஜால வேடிக்கைகள் காண்பிக்கலாம். 

                     பகிர்வில் ர.சடகோபால்.BA