திங்கள், 27 அக்டோபர், 2014

அன்பே சிவம்


அன்பும் சிவமும் வேறென்பார் அறிவிலார்
அன்பேசிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே


என்பார் திருமூலர்.

                

அவற்றை நான் அனுபவிக்கும் முன்பாக எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருக்கிற இறைவனின் கருணையைக்காண்போம்

ஆதிகாலத்தில் ஜனகாதி முனிவர்கள் சிவபிரானை சந்தித்து ஒரு முக்கிய சந்தேகத்துக்கு விடை கேட்டனர்.

அதாவது ஆன்மாக்கள் இறைவனின் திருவடியை அடைய சரியான வழி எது என்பதில் எங்களுக்குள் சர்ச்சை இருக்கிறது தாங்கள்தான் அதனை விளக்க வேண்டும்
என்றனர்

அப்போது சிவபிரான் ஒரு மரத்தடியில் அமர்ந்து யோக நிலையில் மௌனமாக வலக்கை விரல்களால் அடையாளம் காட்டினார்.

இந்த சிவ ஸ்வரூபத்தில்தான் அவர் தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

அவர் காட்டிய அடையாளம் என்னதெரியுமா
அதுவே சின்முத்திரை!

சிவாலயங்களில் சின்முத்திரையுடன் கூடிய தட்சிணாமுர்த்தியை நாம் காணலாம். அவர் காட்டும் சின்முத்திரை என்பது
கட்டைவிரலில் ஆள்காட்டிவிரல் வளைத்து ஒரு வளையம் போல இணைந்திருக்கும் மற்ற மூன்றுவிரல்கள் மேல் நோக்கி நிமிர்ந்திருக்கும்.

எல்லாம் நம்கைக்குள்ளே என்று பெரியவர்கள் சொல்வது இதைத்தான்!


கட்டைவிரல் என்பது கடவுள் அது எந்தக்கடவுளாக இருந்தாலும் சரி
ஆள்காட்டிவிரல் என்பது ஆன்மா
அதாவது ஆன்மாவைத் தாங்கி இருக்கிற மனிதன் ஏதாவது ஒருபிறவியில் இறைவனது திருவடியை அடைய வேண்டும். அதனால்தான் ஆன்மாவுக்கு அடையாளமான ஆட்காட்டிவிரல்
வளைந்து கட்டைவிரலோடு இணைந்திருக்கிற சின்முத்திரைக்காட்சி.

ஆனால் நமது விரல் அமைப்பில் கட்டைவிரல் தனித்து நிற்கிறது ஆள்காட்டிவிரல் மற்ற மூன்றுவிரலக்ளோடு இணைந்திருக்கிறது. அதாவது இறைவனோடு(கட்டைவிரல்) இணையாமல் இருக்கிறது.

மனிதனுக்கு உலக வாழ்க்கை என்ற ஆசையைக்காட்டி கடவுளைப்பற்றி சிந்திக்க விடாமல் தடுத்துக்கொண்டிருப்பதுமூன்றுவிரல்கள்தான்.

அதாவது ஆணவம் தலைக்கனம் ஈகோ என்பவைகள்( எல்லாம் ஒரே அம்சம்தான்!)

ஓர் அறிஞர் சொன்னார்..

திறந்தே கிடக்கும் கோயிலுக்குள் ஆட்களே இருப்பதில்லை, மூடியே இருக்கும் சிறைச்சாலைக்குள் எப்போதும் ஆட்கள் இருக்கிறார்கள்.


தீப்பெட்டியும் தீக்குச்சியும் ஒருநாள்பேசிக்கொண்டதாம்..

நாம் இருவரும் உரசிக்கொள்கிறோம் ஆனால் நான்மட்டுமே தீப்பிடிக்கக்காரணம் என்ன என்றுகேட்டதாம் தீக்குச்சி

அதற்கு தீப்பெட்டி சொல்லியதாம்..

உன் தலைக்கனம்தான் காரணம் உன்னை இத்தனை நாள் பத்திரமாய் வைத்திருந்த என்னை நீ வெளியே வந்ததும் உரசுகிறாயே பாதுகாததவர்களைப் பதம் பார்த்தால் அழிவுதான் வரும்!


ஆகவே நம்மிடம் அகங்காரம் ஒழிய வேண்டும்

கிறிஸ்துவ மதத்தில் சிலுவைஅதைத்தான் சொல்கிறது ஆங்கில \\ Iஅதாவது நான் இந்த அகந்தைபோகவேண்டுமானால் க்ராஸ்(+) செய்யவேண்டும் ஆணவம் அழிதலே சிலுவையின் அடையாளம்

இஸ்லாம்மததிலும் நான் செய்கிறேன் என்று ஆணவத்தோடு பேசக்கூடாது இன்ஷா அல்லா என்றுதான் சொல்லவேண்டும்!

நாம் அனைவரும் அன்பினால் ஒருமைப்படுவோம்!

                 பகிர்வில் ர.சடகோபால்.BA 

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

சகல வசிய மை -லோக வசியம்

வெண் குன்றிமணி                    வெள்ளைச் சாரணை 
வெள்ளெருக்கு                            வெள்ளை விஷ்ணுகிராந்தி 

இவைகளை முறைப்படி காப்பு கட்டி, சாபம் போக்கி ஆணிவேர் ஆறாமல் தோண்டி எடுத்து, உலர்த்தி தீயில் கருக்கி பத்திரப்படுத்தவும்.

கருங்குருவி பிச்சு கண்            கரிச்சான் பிச்சு கண் 
கரும்பூனை பிச்சு கண்              கருநாய் பிச்சு கண் 

இவைகளை எடுத்து உலர்த்தி வைத்துக் கொண்டு புனுகு,கோரோசனம்,பச்சைக்கற்பூரம்,குங்குமப்பூ, கஸ்தூரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி எடை எடுத்து சேர்த்து, வல்லூறு தைலம் விட்டு இரண்டு சாமம் அரைத்து கொம்பு சிமிழில் பத்திரப்படுத்தவும்.

இதற்கு பூஜை மந்திரம்:
                                              "ஓம் ஹ்ரீம் நமோ பகவதி உச்சிஸ்ட சண்டாளினி சர்வலோகம் தஸமானய சுவாக"

இந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 11 நாட்கள் ஜெபம் செய்ய மை உயிர் பெறும் .
இதை தேவை படும் பொழுது நெற்றியில் இட்டுக்கொள்ள சகல வசியம்{எறும்பு முதல் தாவரம்,மனிதர்கள்,மிருகம், என அனைத்தும் வசியமாகும்}

                   பகிர்வில் ர.சடகோபால்.BA  

வியாழன், 23 அக்டோபர், 2014

விஷ்ணு கிரந்தி


திறமாக முறையின்ன சொல்லக் கேளு 
 திருமால் தன் மூலியிலே மூலம் வாங்கித் 
திறமாக ஓடுகின்ற செலத்தில் நின்று 
 தேவிதனை  நினைத்துக் கொண்டு வேருரைத்துத் 
திறமாக கொண்டு போய் கண்ணும் நெற்றி 
  சேந்தக்கரம் புறமுகம் தேய்த்துக்கொண்டு 
திறமாக பார்த்திடவே விஷ்ணுலோகச் 
  சேதியெல்லாம் வகைவகையாய் செப்புவாரே 
                                                                                 -கருவூரார் பலத்திரட்டு 

பொருள்:
                  விஷ்ணு கிரந்தியின் வேரை எடுத்து ஓடுகின்ற தண்ணீரில் நின்று அஞ்சனா தேவியை நினைத்து விஷ்ணுகிரந்தியின் வேரை  உரைத்து, கண்,நெற்றி,கைகள்,முகம் முதலியவற்றில் தேய்த்து கொண்டு பார்க்க விஷ்ணுலோக செய்திகளை அங்கு நடப்பவைகளை எல்லாம் தெளிவாக காணலாகும்.

                   பகிர்வில் ர.சடகோபால்.BA  

தற்புருட முகம்


பார்த்திட்ட தற்புருசம் இருபத் தஞ்சும்
 பாடுகிறேன் நமசிவ அகோரமாகும் 
சேர்த்துயிது சேவிக்க உச்சாடனமாகும் 
 சிவமான சௌமியத்தை சேவிக்கேளு 
காத்திட்ட அங்சிவாய  நமா வென்றால் 
 காதலித்த புத்திரரைக் கொடுக்குங்காணும்
ஏத்திடவும் அங் உங் வங் சிவாயா நமா வென்றால் 
  இயல்பான தேகத்தில் நோய்கள் தீருங்காணே 
                                                                                                -கருவூரார் பலத்திரட்டு 

பொருள்:
                    "நமசிவ"  என்ற அகோர மந்திரத்தை தொடர்ந்து சொல்லி கொண்டு வர உச்சாடனமாகும்.
                    
                    "அங் சிவாய நமா"  என்று மந்திரம் சொல்லி கொண்டுவர  வேண்டியபடி குழந்தை பாக்கியம் உண்டாகும் .

                    "அங் உங் வங் சிவாய நமா" என்று மந்திரம் சொல்லிக்கொண்டு வர உடலில் உள்ள நோய்கள் குணமாகும்.     


                            பகிர்வில் ர. சடகோபால்.BA 

செவ்வாய், 21 அக்டோபர், 2014

மூலிகை சாப நிவர்த்தி

மூலிகை சாப நிவர்த்தி செய்யும் முறை- கருவூரார் 

மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து, பொங்கல் வைத்து, அதன் முன் வாழை இலையில் தேங்காய்,பழம்,வெற்றிலை பாக்கு,வத்தி சூடம் இவைகளை வைத்து தூப தீபம் காட்டி கீழ் கண்ட மந்திரத்தை 108 உரு கொடுக்கவும். 

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸௌம் சிவயநம ப்ரஹ்ம நாரத தேவமுனி கணசாபம் நாஸய நாஸ ஸ்வாஹா."

மஞ்சள் நூலால்  காப்பு கட்டினவுடன் ஒரு எலுமிச்சம்பழம் அறுத்து அதை மூன்று சுற்று சுற்றி எறிந்து விட்டு, வேர் எடுக்க வேண்டும். வேர் எடுக்கும் போது ஆணிவேர் ஆறாமேல் வேர் எடுக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தான் மூலிகை எடுக்க உரிய நாள். 
 இவ்விதம் காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து எடுத்தால் தான்  மூலிகை நூலில் சொன்ன பலன்  தரும். 
விநாயகர் பூஜை அவசியம் செய்ய வேண்டும்.

                  பகிர்வில் ர.சடகோபால்.BA  

திங்கள், 20 அக்டோபர், 2014

மாரணம்

மாரணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

அஷ்ட கர்மங்களில் எட்டாவதாக சொல்லப்படுவது மாரணமாகும்.
இது தனக்கும் தன்னைச்சார்ந்தவர்க்கும் வேண்டாத அல்லது கேடு
விளைவிப்பவைகளை மாரணிக்க(அழிக்க)செய்வதாகும்.
மாரணத்தின் அதிதேவதை எமன் ஆவார்.
மாரணம் எட்டுவகைப்படும். அவை

1)சர்வ மாரணம்
2)அரச மாரணம்
3)சத்துரு மாரணம்
4)சர்வபூத மாரணம்
5)சர்வஜீவஜெந்து மாரணம்
6)சர்வவிஷ மாரணம்
7)சர்வதேவ மாரணம்
8)சர்வரிஷி மாரணம் என்பதாகும்.

மாரணம் எட்டுக்கும் மந்திரம்

ஆமப்பா பேதனத்தை நன்றாய்ச் சொன்னேன்
 அரகரா மாரணத்தினருமை கேளு
தாமப்பா சொல்கிறே மந்திரசித்து
 தனதாக ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங்
பிறீங் பிறீங் பிறீங் சுவாகாவென்று
 ஓமப்பா ஒருமனதாய்ச் செபிக்கக்கேளு
உறுதியுடன் சூலமிட்டு அடியிலேதான்
 நாமப்பா சொல்லுகிறோங் கம்மென்றேதான்
நாட்டமுடன் தானெழுதி நயனம்பாரே.

பாரப்பா நயனமென்ற சூலந்தன்னை
 பத்தியுடன் மானதமாய் பூசைபண்ணி
காரப்பா மந்திரத்தைத் தினம் நூறாக
 கண்ணார உருச்செபித்து கருணையானால்
நேரப்பா மாரணந்தா னிமிஷத்துள்ளே
 நினைத்தபடி நின்றுவிளையாடும் பாரே
தேரப்பா மனந்தேறி யறிவில்நின்று
 சிவசிவா மாரணத்தைத் தீர்க்கம் பண்ணே.

தீர்க்கமுடன் மாரணந்தான் சித்தியானால்
 தெளிந்துகொண்டு தன்னுயிர்போல் செகத்தைப்பார்த்து
மார்க்கமுடன் சிவயோக வாழ்வில்நின்று
 மைந்தனே பூரணத்தை தினமும்நோக்கி
ஏர்க்கையுடன் தானிருக்க வேண்டுமானால்
 இடும்பாக மாரணத்தைச் செய்ய வேண்டாம்
ஆர்க்கும்வெகு கொடுமைகளைச் செய்தபேரை
 அப்போதே மாரணிக்க அந்தந்தானே.
                   -அகத்தியர் பரிபூரணம்1200
பொருள்:
முன்பு பேதனத்தைப்பற்றி சொன்னேன், அதற்கடுத்ததாக 
மாரணத்தைப் பற்றி சொல்கிறேன் கேள், 
ஒரு வெள்ளித்தகட்டில் சூலம் வரைத்து அச்சூலத்தின் 
அடிமுனையில் "கம்" என்று எழுதவும்.

பின்னர் ஒரு சனிக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன்
தூய்மையானஇடத்தில் கருமைநிற ஆடை அணிந்து தெற்கு
நோக்கி அத்திப்பலகையில்அமர்ந்து கொண்டு உன் எதிரில்
மேற்கூறியமாரண எந்திரத்தை வைத்து அதனைச்சுற்றி 
கடலை மலர்களை வைத்து அதன் எதிரில் வேப்பெண்ணெய் 
ஊற்றி விளக்கேற்றி வைத்து இதர பூசை பொருட்களையும் 
வைத்துக்கொண்டு மன ஓர்நிலையோடு 
"ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங் பிறீங் பிறீங் பிறீங் சுவாகா" 
வென்று நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள் செபிக்க 
மாரணம் சித்தியாகும்.

மாரணம் சித்தியானால் தனக்கு வேண்டாத மனிதர், துன்பம் 
செய்யும் விலங்கு, தீராத நோய்,தீங்கிலைக்கும் துஷ்ட தேவதைகள்,
அரச பதவியில் இருந்து கேடு செய்யும் பாவிகள் என யாவரையும்
அழித்து விடலாம்.
மாரணத்தை சித்தி செய்து விட்டோம் என்பதற்க்காக நல்லவர்க்கு
அதை தவறான வழியில் பயன்படுத்தினால் பெரும் பாவத்திற்க்கும்
 சாபத்திற்க்கும் ஆளாக வேண்டிவரும்.ஆதலால் இம்மாரணத்தை
யாரிடம் பிரயோகிக்க வேண்டுமென்றால் யாவர்க்கும் அதிக கெடுதல்
செய்யும் பாவிகளிடமும், கொடுர விலங்குகளிடமும் பயன்படுத்தி
அவற்றை அழித்து உலக உயிர்களை தன்னுயிர் போல் எண்ணி
அவர்களுக்கு நன்மை செய்வதற்க்காக இதை பயன்படுத்த வேண்டும்.

மேலும் இதை பயன்படுத்து முறைகளை சொல்கிறேன் கேளுங்கள்,
மாரண சித்தி செய்த பின்னர் இந்த எந்திரத்தை வரைந்து 108 உரு
கொடுத்து விலங்குகள், துஷ்டதேவதைகள் நடமாடும் வீடு,
தோட்டங்களில் ஸ்தாபித்து விட்டால் அவ்விடத்தை அவைகள்
 நெருங்காது. அப்படி நெருங்கினாலும் சுருண்டு விழுந்து விடும்,
தீராத நோய்வாய்ப்பட்டவர்க்கு மேற்க்கூறிய யந்திரத்தை 
விபூதியில் வரைந்து 108 உருக்கொடுத்து அவ்விபூதியை அவர்கள் 
பூசியும் சிறிது உண்டும் வர சொல்லினால் அவர்களின் உடலில் 
உள்ள நோய்கள் நீங்கி விடும்.
உடலில் உள்ள விஷத்தன்மைகள் நீங்கவும் இம்மந்திரம் ஓதிய 
விபூதியை கொடுக்க சரியாகி விடும்.
உலக உயிர்களுக்கு கேடு செய்யும் பாவிகளை அவர்கள் அழிந்து 
போக வேண்டுமென எண்ணி இம்மாரண யந்திரத்தில் அவர்களின் 
பெயரை தலைமாற்றி எழுதி அதல் அவர்களின் காலடி மண் அல்லது 
முடி ஏதாவதொன்றை வைத்து சுருட்டி அவர்கள் நடமாடும் பகுதி 
அல்லது சுடுகட்டிலோ அதை புதைக்க அவர்களுக்கு மூச்சடைக்கும் 
உடலெல்லாம் எரியும் நிமிசத்தில் உயிர் பிறிந்து போகும்.
மேலும் சித்தகள் ரிஷிகள் தாங்கள் மறைந்து வைத்துள்ள புதையல் போன்றவற்றிக்கு மந்திரக்கட்டு
போட்டு இருப்பார்கள் அவர்களின் மந்திரக்கட்டை மாரணிக்க செய்து
அவைகளை நாம் அடைந்து விடலாம் இது ரிஷி மாரணமாகும் .
தீமை செய்யும் யாவரையும் அழிக்க வேண்டுமென்றால் உன் மூச்சை இழுத்தடக்கிக்கொண்டு இம்மந்திரத்தை மனதால் 3 முறை
செபித்தவாறு அவனை உற்று நோக்கினால் மதிமயக்கம் ஏற்ப்பட்டு
கிழே விழுந்து விடுவான் பின்னர் விழுந்தவன் எழவே மாட்டான்.
இவையெல்லாம் மாரணத்தின் ஆற்றலாகும் இதை நல்ல வழிக்கு
மட்டுமே பயன்படுத்த வேண்டும் இல்லாவிடில் கொடிய துன்பத்திற்க்கு ஆளாக நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.....


                                               பகிர்வில் ர.சடகோபால்.BA 

பேதனம்

பேதனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

அஷ்டகர்மங்களில் ஏழாவதாக சொல்லப்படுவது பேதனமாகும்.
பேதனத்தின் அதிதேவதை குபேரன் ஆவார். பேதனம் என்பது 
ஒருவரை தான் என்னசெய்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் 
அவரின் புத்தியை  பேதலிக்கச்செய்வதாகும்       . இதுவும்நோக்குவர்மத்தைப்போல் ஒருவகை 
தாக்குதல்தான். ஒருவரை பார்த்து இவண் பேதலிக்க வேண்டுமென 
எண்ணினால் அவன் பேதலித்துப்போய் விடுவான். 
இப்பேதனம் எட்டு வகைப்படும்.
அவை

1)சர்வ பேதனம்
2)இராஜ பேதனம்
3)புருஷ பேதனம்
4)ஸ்திரி பேதனம்
5)மிருக பேதனம்
6)தேவ பேதனம்
7)அக்கினி பேதனம்
8)லோக பேதனம் என்பனவாகும்.

பேதனத்தின் அதிதேவதை குபேரன்

பேதனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

பாரப்பா வித்துவே ஷணத்தைச் சொன்னேன்
  பத்தியுடன் பேதனத்தைப் பகரக்கேளு
மாரப்பா பேதனந்தானதீத வித்தை
 மக்களே ஓம்றீயுஞ்சவ்வும் ஸ்ரீயும் கிலியு
அங்அங் நசி நசி சுவாகாவென்று
 நிசமான யெண்கோணம் நன்றாய்க்கீறி
காரப்பா கோணம்நடு விந்துபோட்டு
 கமலநடு டங்கெனவே கனிவாய்ப்போடே.

போட்டெடுத்துச் சக்கரத்தை முன்னேவைத்து
 புத்தியுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
நாட்டமுடன் மந்திரத்தைத் தினம்நூறப்பா
 நன்மையுடனுருச் செபித்து நயனங்கண்டு
வாட்டமில்லா வாசியிலே நின்றாயானால்
 மகத்தான பேதனந்தான் மார்க்கமாக
காட்டும்முன்னே பேதலிக்குமந்திரசித்து
 கைகண்டவித்தையடா கனிந்துபாரே.
                      -அகத்தியர் பரிபூரணம்1200
பொருள்:

பேதனத்தைப் பற்றி செல்கிறேன் கேள், வித்தைகளில் பேதனம்தான் 
அதிக வித்தைகளை உள்ளடக்கியது. பேதனத்தை சித்தி செய்யும் 
முறை யாதெனில் ஒரு இரும்புத்தகட்டில் தாமரை இதழைப்போல 
எண்கோணம் வரைந்துஅதன் நடுவில் ஒரு வட்டம் போட்டு 
அவ்வட்டத்தினுல் "டங்" என்று எழுதவும்.

பின்னர் இச்சக்கரத்தை பன்னீரால் கழுவி இதன் நான்கு மூலையிலும் 
சந்தனம் குங்குமம் தொட்டு வைக்கவும்.பின்னர் இதை பூசை 
அறையில் வைத்து ஒரு வியாழக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன் 
வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து வடக்கு நோக்கி மரத்தோலாடையில்
அமர்ந்து கொண்டு ஊமத்தம் பூவால் இச்சக்கரத்தை அலங்கரித்து 
அதன் எதிரில் புன்னை எண்னெண்யை உற்றி விளக்கேற்றி வைத்து 
மன ஓர் நிலையோடு
 'ஓம் றீயும் சவ்வும் ஸ்ரீயும் கிலியும் அங்அங் நசிநசி சுவாகா' என்று 
நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபிக்க பேதனம் 
சித்தியாகும். 

பேதனம் சித்தியான பின்பு உனக்கு தேவைப்படும் சமயத்தில் இதை 
பிரயோகிக்க எண்ணினால் உன் மூச்சை நன்கு இழுத்தடக்கிக்கொண்டு இப்பேதனமந்திரத்தை 3 முறை மனதால் நினைத்தவாறு உன் எதிரில் 
இருப்பவர்களைப் பார்க்க அவர்கள் உன்னை கண்ட மாத்திரத்தில் 
பேதலித்து மிரண்டு ஓடிவிடுவார்கள் அல்லது அவர்களை நம் 
எண்ணப்படி செயல்படச்செய்யலாம் என்கிறார் அகத்தியர்.

                                பகிர்வில் ர.சடகோபால்.BA 

வித்துவேஷணம்

வித்துவேஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்


அஷ்ட கர்மங்களில் ஆறாவது கர்மமாக சொல்லப்படுவது 
வித்துவேஷணமாகும். வித்துவேஷணம் என்பது ஒருவருக்கொருவர் 
பகையை உண்டாக்கி பிரிப்பது இதனால் எப்படிப்பட்டவரையும் 
பிரித்து விடலாம். எது தனக்கு வேண்டாததோ அது தானாகத்தன்மேல் 
வெறுப்புற்று தன்னைவிட்டு ஓடிவிடும்படி செய்வதே
வித்துவேஷணமாகும். அதைப்பற்றி இன்றைய பதிவில் காண்போம்.
வித்துவேஷணம் எட்டு உட்பிரிவுகளைக்கொண்டதாகும், அவை

1)சர்வ வித்துவேஷணம்
2)இராஜ வித்துவேஷணம்
3)புருச வித்துவேஷணம்
4)ஸ்திரி வித்துவேஷணம்
5)மிருக வித்துவேஷணம்
6)தேவ வித்துவேஷணம்
7) லோக வித்துவேஷணம் என்பனவாகும். 

வித்துவேஷணத்தின் அதிதேவதை வாயு தேவன் ஆவார்.

வித்துவேஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

பாசமுடன் வித்துவேஷணத்தைக்கேளு
பதிவான மந்திரமிது சுத்தவித்தை
வாசமுள்ள வித்தையடா நேசமான மந்திரமிது
ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகாவென்னே
எண்ணமுடன் மந்திரத்தை செபிக்குமார்க்கம்
இன்பமுடன் விபூதியிலே முக்கோணமிட்டு
கண்ணிறைந்த முக்கோண நடுவே விந்து
கருணைவளர் விந்துநடு ஓங்காரஞ்சாத்தி
முன்னிறைந்த ஓங்கார நடுவிலேதான்
முத்தியுடன் சுத்தமதாய் சிங்கென்றிட்டு
சன்னதியை நோக்கிமனத் தன்மையாலே
சங்கையுடன் மானதமாய்ப் பூசைசெய்யே.

செய்யடா மானதமாய்ப் பூசைபண்ண
சிந்தைமன தொன்றாக சிவனைநோக்கி
மெய்யடா மந்திரமிது தினம்நூறப்பா
விரும்பிமன மொன்றாக உருவேசெய்தால்
அய்யனே வித்துவேஷணந்தானெட்டும்
அரகரா தன்வசமா யடங்கியாடும்
மய்யமென்ற சுழிமுனையிலே அடங்கியாட
வரிசையிடனினைத்தபடி வாய்க்குந்தானே.
                                 -அகத்தியர் பரிபூரணம்1200
பொருள்:
ஒரு செய்வாய் கிழமை நாளில் உடல்மனசுத்தியுடன் சாம்பல்நிற 
பட்டாடை உடுத்தி எட்டிபலகையில் வடமேற்கு திசை நோக்கி 
அமர்ந்துகொண்டு உன் எதிரில் ஒரு எட்டிப்பலகையை வைத்து அதில் 
விபூதியை பரப்பி அவ்விபூதியில் முக்கோணம் போட்டு 
அம்முக்கோணத்தின் நடுவில் "ஓம்" என்று எழுதி அதனுள் "சிங்" என்று 
எழுதவும். பின்னர் பன்றி நெய் ஊற்றி விளக்கேற்றி வைத்து 
அதைச்சுற்றிலும் காக்கணம் மலர்களையும் ஏனைய 
பூசைப்பொருட்களையும் வைத்துக்கொண்டு மனஓர்நிலைப்பாட்டோடு
"ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகா" என்ற 
மந்திரத்தை நாளொன்றுக்கு 100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் 
வித்துவேஷணம் எட்டுக்கும் சித்தியாகும்.

பின்னர் இதை பயன்படுத்தவேண்டுமென்றால் உன் மூச்சை 
உள்நிறுத்தி இம்மந்திரத்தை 3 முறைசெபித்தால் உன் வழியில் 
குறுகிடும் அதிகார பலமுள்ளவர்கள், எதிரிகள், மிருகங்கள்,ஆண்கள்,
பெண்கள், பேய் பிசாசு, துஷ்ட தேவதைகள், ஜீவஜந்துக்கள் என 
அனைத்தும் உன்னை கண்ட மாத்திரத்தில்  மிரண்டு ஓடிவிடும். 
அது மதம் பிடித்த யானையாக இருந்தாலும்,
முரட்டு காளையாக இருந்தாலும் ஓடுவிடும்.
பிறர்க்கு இது பயன்படுவதற்கு முன்சொன்ன முறையில் மந்திரத்தை 
கையில் விபூதியை வைத்து செபித்து அவர்களுக்கு அவ்விபூதியை
பூசிக்கொள்ளும்படி கொடுக்கலாம். அவர்கள் அதை வயல்வெளியில் 
போட்டால் அங்கு எலிகள் வாராது. பிணியாளர்க்கு பூசினால் பிணி 
தீர்ந்துவிடும். இன்னும் பல பயன்கள் இதில் அடங்கியுள்ளன.

                                  பகிர்வில் ர.சடகோபால்.BA 

ஆக்ருஷணம்

ஆக்ருஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

அஷ்டகர்மங்களில் ஐந்தாவதாக சொல்லப்படுவது ஆக்ருஷணமாகும்,
ஆக்ருஷணம் என்றால் தன்னை நோக்கி இழுத்துக்கொள்ளுதல் 
என்று பொருள். எந்த ஒரு பொருளையும் சத்தியையும் 
ஆகர்க்ஷிக்கலாம்.  அதாவது மிருகம்,மனிதர்,தெய்வம் முதல் 
எதையும் நம்மை நோக்கி வரவழைப்பதே ஆக்ருஷணமாகும். 
ஆக்ருஷணம் எட்டு உட்பிரிவுகளைக் கொண்டது. அவை

1)சர்வ ஆக்ருஷணம்
2)பூத ஆக்ருஷணம்
3)இராஜ ஆக்ருஷணம்
4)புருஷ ஆக்ருஷணம்
5)ஸ்திரி ஆக்ருஷணம்
6)மிருக ஆக்ருஷணம்
7)தெய்வ ஆக்ருஷணம்
8)லோக ஆக்ருஷணம் என்பனவாகும்.
ஆக்ருஷணத்தின் தேவதை வருணன் ஆவார்.

ஆக்ருஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர் 

நோக்கமுடன் உச்சாடனத்தைச் சொன்னேன்மைந்தா
நுண்மையுடன் ஆக்ருஷணத்தி னுண்மைகேளு
பார்க்கமனக் கண்ணாலே நோக்கமாகி
பதிவாக ஓம்கிலியும் சவ்வும் றீயும் ஐயும்
நமோபகவதிதேவி டங்டங் சுவாகாவென்று
தீர்க்கமுடனுருவேறக் கருவைக்கேளு
சிவசிவா நவகோணநடுவில்விந்து
மகத்தான விந்துநடு ஓமென்றூணே

உண்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
பேணியந்த மந்திரத்தைத் தினம்நூறப்பா
பிரியமுடன் தினம் நூறுருவேசெய்தால்
காணுமந்த ஆக்கிருஷ்ணந்தான் சித்தியாகும்
கருணையுட னினைத்ததெல்லாங் காணுங்காணும்
வேணுமிந்த ஆக்கிருஷ்ணந்தான் உலகத்தோர்க்கு
வேண்டிமிகச் சொன்னதிந்த விவரம்பாரே.
                       -அகத்தியர் பரிபூரணம் 1200

பொருள்:
நீ தெரிந்து கொள்வதற்க்கா உச்சாடத்தை பற்றி சொன்னேன்,
அதற்கடுத்ததாக ஆக்கிருஷ்ணத்தை சொல்கிறேன் கேள்,
ஒரு வெள்ளிக்கிழமை நாளில் ஒரு தங்க தகட்டில் நவகோணம் 
போட்டு அதன் நடுவில்ஒரு வட்டம் போடவும் பின்னர் 
அவ்வட்ட்த்தினுள் "ஓம்" என்று எழுதவும். எழுதிய அந்த யந்திரத்தை
பூசையில் வைத்து அதை சுற்றி அரளி மலர்களால் அலங்கரிக்கவும்.

பின்னர் உடல்மனசுத்தியுடன் செம்பட்டு ஆடை உடுத்தி வெள்ளாட்டு 
தோலை விரித்து அதன்மீது வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து 
கொண்டு மன ஓர்நிலையுடன்
"ஓம்கிலியும் சவ்வும் றீயும் ஐயும் நமோபகவதிதேவி டங்டங் சுவாகா"
என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் 
செபித்தால் ஆக்ருஷணம் சித்தியாகும்.
ஆக்ருஷணம் சித்தினால் நாம் நினைத்த எதையும் நம்மை 
நோக்கி வரவழைக்கலாம். உலக மக்கள் தனக்கு வேண்டியதை 
அடைந்து கொள்வதற்க்கா இதைப்பற்றி விவரமாக சொன்னேன் 
என்கிறார் அகத்தியர்.

                                          பகிர்வில் ர.சடகோபால்.BA 

உச்சாடனம்

உச்சாடனம் எட்டுக்கும் மந்திரம்

அஷ்ட கர்மங்களில் நான்காவதாக கூறப்படுவது உச்சாடனம் ஆகும். 
உச்சாடனம் என்பது தீயசக்தி முதல் எந்தவொரு சத்தியின்னையும் 
அது இருக்கும் இடத்திலிருந்து விரட்டுவது ஆகும்.
உச்சாடனத்தின் அதிதேவதை நிருதி ஆவார்.
அதைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். 

உச்சாடனம் எட்டுவகை உட்பிரிவுகளை கொண்டதாகும்.
அவை
1)சர்வ உச்சாடனம் 
2)மிருக உச்சாடனம்
3)சத்துரு உச்சாடனம்
4)தேவ உச்சாடனம்
5)விஷ உச்சாடனம்
6)ஸ்திரி உச்சாடனம்
7)வியாதி உச்சாடனம் என்பதுவாகும்.

உச்சாடனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர் 

காணவே தம்பனத்தைச் சொன்னேன்மைந்தா
கண்காண உச்சாடத்தைக் கருதிக்கேளு
பூணவே உச்சாடனந்தா னெட்டுங்கேளு
பூரணமாய் ஓம் சங்வுங்கிலியும் தாக்கு தாக்கு 
தூக்கு தூக்கு டங் டங் சுவாகாவென்று
தோணவே செபிக்கிறதோர் வகையைக்கேளு
துருவமுள்ள அறுகோணம் நடுவேவிந்து
பேணவே விந்தெழுதி விந்துக்குள்ளே
பிலமாக டங்கென்று பிலமாய் நாட்டே.

நாட்டமுடன் சக்கரத்தை முன்னேவைத்து
நன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
தேட்டமுள்ள மந்திரத்தைத் தினம்நூறப்பா
சிந்தைமனங் கோணாமலுருவே செய்தால்
வாட்டமென்ன உச்சாடனந்தான் சித்தியாகும்
மகத்தான புருவமதில் மனதைநாட்டி
பூட்டறிந்து வாசியினாற் திறந்துமைந்தா
பொன்னுலகில் நின்று விளையாடுவாயே.
                     -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:

நீ அறிந்து கொள்வதற்காக தம்பனத்தைப்பற்றி சொன்னேன்,
அதற்கு அடுத்ததாக உச்சடனத்தைப் பற்றி சொல்கிறேன் கேள்.
இப்போது உச்சாடனம் எட்டுக்குமான மந்திரத்தை 
சொல்கிறேன் கேள்,

"ஓம் சங்வுங்கிலியும் தாக்கு தாக்கு தூக்கு தூக்கு டங் டங் சுவாகா" 
இம்மந்திரத்தை செபிக்கும் முறையை சொல்கிறேன் கேள்,
உச்சாடன மந்திரத்தை ஒரு வியாழக்கிழமை நாளில் உடல் 
மனசுத்தியுடன் பச்சைப்பட்டு உடுத்தி நீலக்கம்பளம் விரித்து 
அதன்மேல் மேற்கு நோக்கி அமர்ந்து கொண்டுஒரு வெள்ளீயதகட்டில் 
அறுகோணம் வரைந்து அதன் நடுவில் ஒரு வட்டம்போட்டு 
அவ்வட்டத்தினுள் "டங்" என்று எழுதவும்.

 பின்னர் நீ வரைந்த சக்கரத்தை உனக்கு முன்பாக வைத்து அதனை சுற்றி தும்பை பூவை வைத்து புங்க எண்ணெயால் விளக்கேற்றவும்.
பிறகு தேங்காய்,பழம்,பத்தி,சூடம்,சந்தனம் உள்ளிட்ட பூசை 
பொருட்களை வைத்து மன ஓர்நிலையுடன் வேறு சிந்தைகள் 
இல்லாமல்மேற்சொல்லிய மந்திரத்தை நாளொன்றுக்கு 
100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் உச்சாடனம் சித்தியாகும்.

உச்சாடனம் சித்தியான பின்னர் மனதை புருவ நடுமையத்தில் 
நிறுத்தி பேய்,மிருகம்.அகாத மனிதர் முதல் எந்தவொரு தீயசக்தியும் 
ஓரிடத்திலிருந்து விலக வேண்டுமென எண்ணினாலே அது 
அவ்விடத்தை விட்டு விலகி ஓடிவிடும். உச்சான சக்கரத்தை 
விட்டில் வைத்தால் அங்குள்ள தீய சக்திகள் ஓடி விடும். 
நோய் உள்ளவர்களுக்கு கட்டினால் அந்நோய் நீங்கி விடும். 
இது இருக்கும் இடத்தில் உள்ள சகல தீயசத்திகளும் விலகி விடும் 
என்கிறார் அகத்தியர்.

                                   பகிர்வில் ர.சடகோபால்.BA 

தம்பனம்

தம்பனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்


அஷ்ட கர்மங்களில் மூன்றாவதாக சொல்லப்படுவது தம்பனமாகும், 
தம்பனம் என்பது எந்த ஒரு இயக்கத்தையும் அப்படியே 
தம்பிக்கச்செய்வதாகும், இது எட்டு உட்பிரிவுகளை கொண்டது.
அவை
1)சர்வ தம்பனம்
2)சுக்கில தம்பனம்
3)ஆயுத தம்பனம்
4)மிருக தம்பனம்
5)ஜல தம்பனம்
6)அக்கினி தம்பனம்
7)தேவ தம்பனம்
8)சர்ப்ப தம்பனம் என்பவாகும்.

தம்பனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

அறிந்துகொண்டு மோகனத்தை நன்றாய்ப் பார்த்து
அதன்பிறகு தம்பனத்தையருளக்கேளு
வருந்திமன துரிமையினால் வாசிகொண்டு
மகத்தான கேசரியில் மனக்கண்சாத்தி
தெரிந்துஓம் ஐயும்கிலியும்ஸ்ரீயும் ரீயும்சுகசுகசுவாகாவென்று
திறமாக உருசெபிக்க செயலைக்கேளு
விரிந்துபஞ்ச கோணமதில் நடுவேவிந்து
விந்துநடு ஸ்ரீயும் நன்றாய்ச்சாத்தே.

நன்றாக கேசரியில் மனதைவைத்து
நன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
குன்றாமல் மந்திரத்தைத் தினம் நூறப்பா
குறையாமல் உருவேற்ற குணத்தைக்கேளு
விண்டதொரு எட்டுவகைத் தம்பனந்தான்
விபரமுடனின்று விளையாடும்பாரு
மண்டலத்திற் சென்றுவிளையாடுதற்கு
மகத்தான வித்தையடா மகிழ்ந்துபாரே.
பாரப்பா மனங்குவிந்து பதியில்நின்றால்
பத்தியுடன் சகலசித்து மாடலாகும்.
                      -அகத்தியர் பரிபூரணம்1200

விளக்கம்:
மோகனத்திற்குஅடுத்தபடியாக தம்பனத்தை பற்றி சொல்கிறேன் 
கேள், ஒரு புதன் கிழமை நாளில் உடல் மன சுத்தியுடன் பச்சை 
நிற வஸ்திரம் அணிந்து தென்கிழக்கு திசை நோக்கி பலாபலகையில் 
அமர்ந்து கொண்டு ஒரு செம்பு தகட்டில் ஐங்கோணம் (5 ஸ்டார்) 
போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும்,
அவ்வட்டத்தினுள் ஸ்ரீயும் என்று எழுதவும்,

பின்னர் அந்த தம்பனச்சக்கரத்தினை உன் எதிரில் வைத்து அதற்கு தாமரை மலர் சாற்றி ஆதளை எண்ணை ஊற்றி விளக்கேற்றி 
வைத்து முறையான பூசை பொருட்களை வைத்துக்கொண்டு மனதை ஓர்நிலைப்படுத்தி புருவநடு மையத்தில் குவித்து 
"ஓம் ஐயும்கிலியும்ஸ்ரீயும் ரீயும் சுகசுக சுவாகா"
என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு 108-உரு வீதம் 48-நாட்கள் 
செபித்தால் மந்திரம் சித்தியாகும். மந்திரத்தை எண்ணிகை 
குறையாமல் 48 நாட்கள் செபித்தால் எட்டுவகை தம்பனமும் 
சித்தியாகும். தம்பனம் ஒரு மகத்தான வித்தையாகும்.
தம்பனத்தின் அதிதேவதை இந்திரன் தம்பன சித்தியினால் 
சகலசித்தும் ஆடலாம் என்கிறார் அகத்தியர்

                     பகிர்வில் ர.சடகோபால்.BA 


மோகனம்

மோகனம் எட்டுக்கும் மந்திரம் -அகத்தியர்

அஷ்ட கர்மங்களில் இரண்டாவதாக கூறப்படும் மோகனம் 
எட்டு உட்பிரிவுகளைகொண்டது, அது

மோகனத்தின் அதிதேவதை அக்கினிபகவான்

1)சர்வ மோகனம்
2)இராஜ மோகனம்
3)புருஷ மோகனம்
4)ஸ்திரி மோகனம்
5)மிருக மோகனம்
6)சொர்ண மோகனம்
7)சத்துரு மோகனம்
8)லோக மோகனம்
என்பனவாகும்.
இம்மோகனம் எட்டும் சித்திசெய்யும் முறையை இன்றைய
பதிவில் காண்போம்.

மோகனம் எட்டுக்கும் மந்திரம் -அகத்தியர்

பாரப்பா வசியமென்ற யெட்டுஞ்சொன்னேன் 
பத்திகொண்டு மோகனத்தைப் பகரக்கேளு
நேரப்பா மோகனந்தானெட்டும் நன்றாய்
 நேர்மையுடன் நின்றாட மந்திரங்கேளு
காரப்பா ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகாவென்று
 கண்ணார செபிக்கிறதோர் வகையைக்கேளு
சாரப்பா நாற்கோணம் நடுவில்விந்து
 தானெழுதி றீங்கென்று சாத்திட்டாயே.

சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
 தன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
போத்தியிந்த மந்திரத்தை தினம்நூறப்பா
 புத்தியுடன் தான்செபித்து நின்றாயானால்
பார்த்திபனே மோகனந்தானெட்டும் நன்றாய்
 பத்தியுடனுன் வசமாய்ப் பதிவதாகும்
கார்த்துநன்றாய்க் கருணைபெறச்சித்தி பெற்றால்
 கண்கண்ட தெல்லாமோகனமாம் பாரே.

பாரடா மோகனத்திற் பதிவாய்நின்று
 பத்தியுடன் தான்செபித்து சுத்தமானால்
நேரடா சகலசெந்து மிருகமெல்லாம்
 நேர்மையுடனுன் முகங்கண்டபோது
வீரடா தானொடுங்கி மோகமாகும்
 வேதாந்த பூரணமே தான்தானானால்
ஆரடா உனக்கு நிகரொருவருண்டோ
 அப்பனே மோகனத்தை யறிந்துதேரே.
                -அகத்தியர் பரிபூரணம் 1200

பொருள்:
வசியம் எட்டும் சொன்னேன், அதுக்கடுத்ததாக மோகனத்தை 
சொல்கிறேன் கேள்,
ஒரு திங்கள்கிழமை நாளில் ஒரு வங்கத்தகட்டில் 
நாற்கோணம் போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும்,
அவ்வட்டத்தினுள் 'றீங்" என்று எழுதவும். 

பின்னர் இச்சக்கரத்தை பூசையில் வைத்து முல்லை பூக்களை 
சக்கரத்தை சுற்றி வைத்து எதிரில் நல்லெண்ணை தீபமேற்றி
உடல் மனசுத்தியுடன்மஞ்சள் நிற ஆடை உடுத்தி மாம்பலகையில் 
தெற்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு மனஓர்நிலையுடன் 
"ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகா" என்ற மந்திரந்தை 
நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் 
இம்மோகனம் எட்டும் சித்தியாகும்.

மோகனம் சித்தியானால் உன்னைகாணும் சகல ஜீவஜந்துகளும், 
மிருங்களும், மனிதர்களும் உன்னை கண்டமாத்திரத்தில் தனது 
நிலைமறந்து ஒடுங்கி உன்மீது மோகம் கொள்ளுவர்.
மோகனத்தை சித்தி செய்தவர்களை சகலத்தையும் அவர்கள் 
வசமாக்கி விடுவார்கள் அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை 
எனலாம் என்கிறார் அகத்தியர்.

                             பகிர்வில் ர.சடகோபால்.BA 


ஞாயிறு, 19 அக்டோபர், 2014

வசியம் எட்டுக்கும் மந்திரம்


அஷ்ட கர்மங்களில் முதலாவதாக கூறப்படும் வசியம் 
எட்டு உட்பிரிவுகளை கொண்டது. அது 

1) சர்வவசியம்
2)இராஜ வசியம் 
3)புருஷவசியம் 
4)ஸ்த்ரீ வசியம்
5)மிருகவசியம் 
6)சர்ப்ப வசியம் 
7) சத்துரு வசியம் 
8) லோகவசியம் என்பனவாகும். 

இந்த எட்டுவகை வசியத்திற்குமான 
மூலமந்திரத்தையும் அதனை செபிக்கும் முறையினையும் 
அகத்தியர் தனது பரிபூரணம்1200 என்ற நூலில் கூறியுள்ளார்.
.
    வசியம் எட்டுக்கும் மந்திரம்

கேளடா வசியமென்ற யெட்டுக்குந்தான்
கிருபையுள்ள மந்திரமிது சொல்லக்கேளு
வாளடா ஓம் பிறீங் அங்அங் டங் ஸ்ரீயும் கிலியும் சுவாகா வென்று
வளமையுடன் செபிக்கிறதோர் வரிசைகேளு
காலடா முக்கோணம் நடுவில்விந்து
கருவாக லங்கெனவே சந்திரபீஜம்
ஆளடா தானெழுதிப்பூசைபண்ணி
அன்புடன் மந்திரத்தை உருவேசெய்யே.

செய்யடா தினம்நூறு உருவேசெய்தால்
செம்மையுடன் வசியமெட்டுஞ் சித்தியாகும்
மெய்யடா வசியமது சித்தியானால்
மேன்மைபெற நினைத்ததெல்லாஞ் சித்தியாகும்
அய்யனே புலத்தியனே உனக்காய்ச்சொன்னேன்
கையடா அடக்கமது மெய்யாய்ச்சொன்ன
கருணைவளர் வசியமதை கனிவாய்ப்பாரே.                                       
                                              அகத்தியர் பரிபூரணம் 1200
பொருள்:

வசியம் எட்டுக்குமான மந்திரத்தைச் சொல்கிறேன் கேள், 
"ஓம் பிறீங் அங் அங் டங் ஸ்ரீயும் கிலியும் சுவாகா
என்ற மந்திரத்தை செபிக்கும் முறை எப்படியெனில் முதலில் 
ஒரு காரீயத்தகட்டில் முக்கோணம் போட்டு அதன் நடுவில் 
ஒரு வட்டம் போட்டு அவ்வட்டத்தினுள் லங் என்று எழுதவும்.

பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் உடல் சுத்தியுடன் சிவப்பு நிற 
ஆடை அணிந்து கிழக்கு முகமாய் அமர்ந்து கொண்டு முறையான 
பூசை வைத்து அதன் நடுவில் இந்த யந்திரத்தை வைத்து முன் கூறிய 
வசியமந்திரத்தை நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள் 
செபித்தால் வசியம் எட்டும் சித்தியாகும். அப்படி சித்தியானால் நீ நினைப்பதெல்லாம் சித்தியாகும். 
மாணவனே உனக்காக இதை சொல்கிறேன் கைஅடக்கமாக 
இருந்து இதன் பலனைப்பார் என்கிறார் அகத்தியர். 


                           பகிர்வில் ர.சடகோபால்.BA 

அஷ்ட கர்மம்


அஷ்ட கர்மம் என்பது மாந்திரீகத்தின் எட்டு அங்கங்களை 
குறிக்கும். அவை

1) வசியம் 
2) மோகனம் 
3) தம்பனம் 
4) உச்சாடனம் 
5) ஆக்ருஷணம் 
6) பேதனம் 
7) வித்துவேஷணம் 
8) மாரணம் என்பனவாகும்.

இவற்றை முறைப்படி கற்று தேர்ந்தவர்க்கே இது சித்தியாகும்.
அப்படி முறையாக கற்றவரே உண்மையான 
மாந்திரீகவாதியாவார். 

அப்படி அஷ்ட கர்மங்களை முறையாக கற்றுத்தேர்வதற்குரிய 
முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்காக அருளியுள்ளனர்.
அவ்வகையில் சல்லிய முனிவர் அருளிய சல்லியம் என்னும் 
மாந்திரீக நூலில் அஷ்ட கர்மங்களுக்குரிய நாள், திசை, உடுப்பு, 
உலோகம்,எண்ணை, அதிதேவதை, மலர், ஆசனம் இவைகள் 
பற்றிய தகவல்களை தந்துள்ளார். அதைப்பற்றி இன்றைய 
பதிவிலும் இனிவரும் பதிவுகளிலும் தெளிவாக பார்ப்போம்.

அஷ்டகர்மத்திற்குரிய நாட்கள்:

ஞாயிறு  -   வசியம்
திங்கள் -    மோகனம்
செவ்வாய் - வித்துவேஷணம்
புதன்         - தம்பனம்
வியாழன் - உச்சாடனம்
வெள்ளி      - ஆக்ருஷணம்
சனி - மாரணம் இந்நாட்களில் அக்கர்மங்கள் செய்ய அது 
சித்தியாகும்.

இதில் குறிப்பாக வியாழக்கிழமையில் எந்த வேலைகளைச் 
செய்தாலும் அது பச்சை மரத்தில் ஆணிஏறுவது போல
உடனுக்குடன் பலிக்கும் என்கிறார் சல்லிய முனிவர்.

திசைகள்:

கிழக்கு - வசியம்
தெற்கு - மோகனம்,மாரணம்
மேற்கு - உச்சாடனம்
வட்க்கு - பேதனம்
தென்மேற்கு - வித்துவேஷ்ணம்
தென்கிழக்கு - தம்பனம்
வடமேற்கு - ஆக்ருஷணம்
வடகிழக்கு - சகல கர்மத்திற்கும் உகந்த திசையாகும்.

உடுப்புகள்:

சிவந்த வஸ்திரம் - வசியம்
மஞ்சள்வஸ்திரம் - மோகனம்
பச்சை வஸ்திரம் - தம்பனம்
வெள்ளை வஸ்திரம் - பேதனம்
பச்சைப்பட்டு - உச்சாடனம்
கருப்பு வஸ்திரம் - மாரணம்
செம்பட்டு-சகல கர்மத்திற்கும் உகந்த உடுப்புகளாகும்.

உலோகங்கள்:

காரீயம்                  - வசியம்
வங்கம்                    - மோகனம்
பொன்                      - ஆக்ருஷணம்
செம்பு                       - தம்பனம்
வெள்ளீயம்          - உச்சாடனம்
குருத்தோலை - வித்துவேஷணம்
இரும்பு                    -  பேதனம்
வெள்ளி                  - மாரணத்திற்கும் உகந்த உலோகங்களாகும்.

எண்ணைகள்:

பசு நெய்                          -  வசியம்
நல்லெண்ணை            - மோகனம்
வேப்பெண்ணை         - மாரணம்
புங்கெண்ணை              - உச்சாடணம்
புன்னை எண்ணை - பேதனம்
ஆதளை எண்ணை - தம்பனம்
கழுதை,ஆடு,பன்றிகளின் நெய் - வித்துவேஷணம்
வன்னி,ஆல்,விளா,இவைகள் - சுபகர்மத்திற்கும்
கள்ளி,எருக்கு,எட்டி
அத்தி,இச்சி,விடத்தலை
இவைகள்} - அசுபகர்மத்திற்கும் உகந்த எண்ணை வகைகளாகும்.

அதிதேவதைகள்:

ஈசன்                      -  வசியம்
அக்கினி               - மோகனம்
இந்திரன்             - தம்பனம்
நிருதி                    - உச்சாடனம்
வருணன்            - ஆக்ரூஷணம்
வாயுதேவன் - வித்துவேஷனம்
குபேரன்              - பேதனம்
எமன் - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய 
அதிதேவதைகளாகும்.

மலர்கள்:

மல்லிகை   -  வசியம்
முல்லை -    மோகனம்
தாமரை -      தம்பனம்
தும்பை -       உச்சாடனம்
அரளி       -       ஆக்ரூஷணம்
காக்கண மலர் - வித்துவேஷணம்
ஊமத்தம் - பேதனம்
கடலை மலர் - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய 
மலர்களாகும்.

ஆசனங்கள்:

வில்வப்பலகை               -    வசியம்
மாம்பலகை                        -   மோகனம்
பலாப்பலகை                     -    தம்பனம்
நீலக்கம்பளம்                    -    உச்சாடனம்
வெள்ளாட்டுத்தோல் -   ஆக்ருசணம்
எட்டிப்பலகை                    -  வித்துவேஷனம்
மரத்தோலாடை              -பேதனம்
அத்திப்பலகை - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய 
ஆசனங்களாகும்.

                 பகிர்வில் ர.சடகோபால்.BA 

சூன்யம்

சூன்யம்

பாரப்பா நிலவானை மலைகள் தோறும்
பண்பாகத் தானிருக்கு மறிந்து பாரு
வாரப்பா வதினுடைய விரையத் தானும்
வளமாகப் பத்துபல மெடுத்து வந்து
சீரப்பா தலைமஞ்சன் கொடியு மாவுஞ்
சிற்ப்பாக முப்பூவும் வராகன் கூட்டித்
தேரப்பா வில்லைதட்டி யுலரப் போடு
திறமாக யுலர்த்தியதைத் தயிலம் வாங்கே - புலிப்பாணி ஜாலத்திரட்டு 30 

மலைகளில் நிலவாகை என்னும் செடி வளர்ந்திருக்கும் அந்தச் செடியைக் கண்டுபிடித்து அதன் விரைவில் பத்து பலம் எடுத்துக் கொண்டு வந்து அதனுடன் தலைமஞ்சள் கொடியின் மாவும், முப்பூவும் வகைக்கு ஒரு விராகன் வீதம் சேர்த்து அரைத்தெடுத்து வில்லை தட்டி உலர்த்தி எடுத்து முறையாகக் குழித் தயிலம் இறக்கிக் கொள்ளவும்.

வாங்கியே ஆள்காட்டி முட்டை தன்னை
வளமான சிற்றண்டத் தயிலம் போலே
தாங்கியே வாங்கியந்தத் தயில நேரே
தயவாகத் தானெடுத்துச் சிமிழிதனில் வைத்து
ஓங்கியே களவுமுதற் சூன்யம் யாவும்
உற்றுப்பார் தோற்றுமடா கள்ள மெல்லாம்
நீங்கியே யதுகண்டு பிடித்துக் கொண்டு
நினைவாகக் குருபாதம் பணிவாய்த் தானே - புலிப்பாணி ஜாலத்திரட்டு 31

அதன்பிறகு ஆள்காட்டி என்கிற குருவியின் முட்டைகளை எடுத்து சிற்றண்டத் தயிலம் போல இதில் தயிலம் இறக்கி, இந்த தயிலத்துடன் முன்னர் எடுத்த தைலத்தை சேர்த்து நன்றாக கலக்கி ஒரு சிமிழினில் வைத்துக் கொள்ளவும். இந்த தயிலத்தை வெற்றிலையில் கொஞ்சம் தடவிப் பார்த்தால் யார் திருடியது யார் சூன்யம் வைத்தது போன்றவைகள் அதில் நன்றாகத் தெரியும். குருவை நினைத்து வணங்கி இதை செய்ய வேண்டும்.

                       பகிர்வில் ர.சடகோபால்.BA 

சனி, 18 அக்டோபர், 2014

உடல் கட்டு மந்திரம்


"ஓம் உள்ளங்கால் இரண்டும் பூமாதேவி காவல் கணுக்கால் இரண்டும் கணபதி காவல் முழங்கால் இரண்டும் முக்கோணர் காவல் துடை இரண்டும் துர்க்கை காவல் அரை ஆதி சிவன் காவல் வயுறு வைரவன் காவல் மார்பு மார்க்கண்டேயன் காவல் கழுத்து கந்தர்வன் காவல் உதடு உத்தமாதேவி காவல் பல்லு பரசுராமன் காவல் நாவு நாராயணன்    காவல்       கண்ணுரெண்டுக்கும்   காளிங்கராயன் காவல் நெத்திக்கு நீலவர்ணன் காவல் தலைக்கு தம்பிரான் காவல் உடம்பு சுற்றிலும் சங்கு சக்கரம் காவல் என்னை கார்க்காவிட்டால் இது என் கட்டல்ல ஈஸ்வரன் கட்டு என்னை கார்க்க நம சிவாய "

இந்த மந்திரத்தை 21 முறை சொல்லிவிட்டு பிறகு பூஜையில் அமரவும்.

 
                    பகிர்வில் ர.சடகோபால்.BA 

ஸ்ரீ அரவிந்த யட்சணி மஹா மந்திரம்

                              

கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 22 நாட்கள் ஜெபம் செய்ய தேவி தரிசனம் உண்டாகும் 

மூல மந்திரம் 
                             ஓம் நமோ பகவதி ஸ்ரீம் க்லீம் ஸௌம் ஐம் ஓம் ஹ்ரீம் அரவிந்த யஷணி த்ரைலோக்ய மோகினி மம வசம் குரு குரு சுவாக 

நிவேதனம் 
                        பழம், தேங்காய் ,சுண்டல்,வடை,தேன், வெற்றிலை பாக்கு, மல்லிகை மலர் 

பலன்: 
            திரி காலமும் சொல்லும், அஞ்சனம் ரசாயனம்  மூலிகை  பொருள்களை கொண்டு வந்து கொடுக்கும், துஷ்ட கிரக தோஷங்களுக்கு விபூதி கொடுத்தால் அவை நீங்கி சுகம் உண்டாகும். 

                     பகிர்வில் ர. சடகோபால்.BA 
                     

வெள்ளி, 17 அக்டோபர், 2014

பால மோகினி

                

கையில் ஒரு மல்லிகைப்பூ எடுத்துக்கொண்டு

ஓம் கணபதி ஸ்ரீயும், ஐயும்,கிலியும்
சவ்வும்,ஹரிஓம் யநம சிவ வசிய கணபதேய
வாவா நான் நினைக்கும் சகல காரியமும்  
பலிதமுடைய என் வசமாக நம சிவய 

இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும்  {11முறை}

  ஓம் பதாகையும் விதானமும் பதகு விதமும் சர்வ சத விதுர்த்தி வசிய வசிய குரு குரு சுவஹா இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும்  {11முறை } 
  
நிவேதனம்:
                        பால், பழம், கற்கண்டு, தேன், அப்பம், தேங்காய், பொங்கல், 
மல்லிகை மலர்  

மூலமந்திரம்

ஓம் ஹ்ரீம்  ஸ்ரீம்  பால மோகினி  சர்வம் உச்சாட உச்சாட பட் ஓம் கிரக ரூபினி ஹும் பட் ஸ்வாஹா

பலன்
 நம் வேண்டும் சகல காரியம் நடத்தி கொடுக்கும்.


                     பகிர்வில் ர.சடகோபால்.BA 

புதன், 15 அக்டோபர், 2014

நந்தி தேவரை தரிசிக்கும் முறை


சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப் படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும்  பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப்படுகிறது . சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப் படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர்.

            

இத்தனை சிறப்புகள் வாய்ந்த நந்தி தேவரை அகத்தில் தரிசிக்கும் ஒரு முறையினையே இன்று பார்க்க இருக்கிறோம். நம்புவதற்கு சற்று சிரமமான தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் எனக்கு கிடைத்த ஒரு தகவலை இங்கே பகிர்கிறேன்.

அகத்தியர் அருளிய "அகத்திய பூரண சூத்திரம்" என்னும் நூலில்தான் நந்திதேவரை தரிக்கும் முறை கூறப் பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....

பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு
பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக
ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்
இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து
மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி
மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு
தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்
சிவசிவா மனதுபூ ரணமாய்நில்லே.

- அகத்தியர்.

நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா
நிஸ்பயமாய் லிங்கிலிசிம் மென்றுஓது
சொல்லந்த மானகுரு நாதன்றானும்
சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு
நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டா
நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு
சொல்லந்தச் சோதிதனைக் கண்டால்மைந்தா
தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.

- அகத்தியர்.

சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து,  திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். உடலையும் மனதையும் தளர்த்திய பின்னர் கண்களை மூடி புருவ மத்தியில் மனதினை ஒருமைப் படுத்தி, தியான நிலையில் இருந்து "லிங் கிலி சிம்" என்கிற மந்திரத்தினை தொடர்ந்து செபிக்க வேண்டுமாம். 

இவ்வாறு தினசரி செபித்து வந்தால் பரமகுருவான நந்திதேவர் நம் இதயத்தில் சோதிவடிவாகக் காட்சி கொடுப்பார் என்றும், அவர் தரிசனத்தினைக் கண்டால் அட்ட  சித்துக்களும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். 

                               பகிர்வில் ர.சடகோபால்.BA 

திங்கள், 13 அக்டோபர், 2014

பலி கொடுத்தல்

பலி கொடுத்தல்

பலி கொடுத்தல் அல்லது காவு கொடுத்தல் ஒரு சமயச் சடங்கு ஆகும். பலி கொடுத்தல் கடவுளை நோக்கி வரம் வேண்டி கடவுளை மகிழ்ச்சி செய்வதற்காக விலங்குகளை உயிர்ப் பலி கொடுப்பதைக் குறிக்கும். யாகம், பூசை போன்ற சடங்குகளோடு இது இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. பெரிய கோயில்களில் பலி கொடுத்தல் வழக்கத்தில் இல்லை, ஆனால் பல கோயில்களில் ஆடு, கோழி போன்ற விலங்குகளைப் பலி கொடுக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது. 

பலி கொடுத்தல் வேத காலத்தில் ஒரு முக்கிய சடங்காக இருந்தது. பெளத்த சமண சமயங்களின் எழுச்சியும், அவை முன்னிறுத்திய அறக் கோட்பாடுகளும் பலி கொடுத்தலை இந்து சமயத்தின் ஓரத்தில் தள்ளி விட்டது.

பலி கொடுத்தல் தத்துவம்

பலி கொடுத்தல் நம்மில் உறையும் விலங்குக் குணங்களைஅழியச் செய்வதன் மூலம் இறைநெருக்கத்தை எட்டுதலாகும். ஆயினும் இதை மக்கள் வேறொரு வடிவம் கொடுத்துப் பின்பற்றி வருகின்றனர். தாம் செய்த பாவத்தை மன்னிக்க வேண்டி வேறொரு உயிரைப் பலியிடுதல் ஆகமம் சாராத வீரசைவ மரபில் எழுந்த கடைப்பிடிப்பு என வாதிப்பாரும் உளர்.

பலியிடும் முறை

பலியிடப்படும் ஆடு, மாடு போன்ற விலங்குகளில் ஆண் பாலினத்தைச் சேர்ந்தவையே பலியிடுவதற்காகத் தேர்வு செய்யப்படுகின்றன. கோழியாக இருந்தாலும் அதன் ஆண் பாலினமான சேவலையே பலியிடத் தேர்வு செய்கின்றனர். இவற்றில் விலங்கிலோ அல்லது சேவலிலோ வெள்ளை நிறமிருந்தால் அவை நிராகரிக்கப்படுகின்றன. பலியிடத் தயாராயுள்ள விலங்கு அல்லது சேவல் மீது மஞ்சள் கலந்த நீர் தெளிக்கப்படுகிறது. அதன் கழுத்தில் மலர்களாலான சிறு மாலைத் துண்டு அணிவிக்கப்படுகிறது. பின்னர் மஞ்சள் நீர் தெளிக்கப்படுகிறது. அது மூன்று முறை தலையைக் குலுக்கும் போது அது சம்மதம் தெரிவித்து விட்டதாகக் கருதி அதைப் பலியிடுகின்றனர்.

அசைவ உணவு

பலி கொடுக்கப்பட்ட ஆடு அல்லது கோழியின் இறைச்சியை உணவாக்கி சிறு தெய்வங்கள் முன்பு படைத்துவிட்டு அதன் பிறகு அந்த அசைவ உணவை உண்ணும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது போன்ற பலியிட்டு வழிபடும் வழக்கம் காவல் தெய்வங்களான கருப்பசாமி, மாடன், இசக்கியம்மன் போன்ற சிறுதெய்வ வழிபாடுகளிலேயே அதிகம் நடைபெறுகிறது. மாரியம்மன் கோயில்களில் இந்தப் பலியிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டாலும் அது மாரியம்மனுக்குப் படைக்கப்படுவதில்லை. கோயிலிலுள்ள காவல் தெய்வமான கருப்பசாமிக்குப் படைப்பதாகவே கருதப்படுகிறது.

மாயன்கள்

இந்து சமயமட்டுமல்லாது, இவ்வழக்கம் உலகின் பல பகுதிகளில் நடைபெற்று வந்துள்ளது. மெக்சிகோ பகுதிகளில் மாயன் என்னும் இனத்தவர்கள் உயிர் பலி கொடுக்கும் வழக்கமுடையவர்கள். 

                       பகிர்வில் ர.சடகோபால்.BA 


வெள்ளி, 10 அக்டோபர், 2014

சுடலை மாடன்



சுடுகாட்டில் வாழும் தெய்வம் என்பதால் “சுடலை” என்றும் மாட்டை வாகனமாகக் கொண்டதால் “மாடன்" என்றும் வழங்கி, அவ்விரண்டும் இணைந்து “சுடலைமாடன்” என்ற பெயர் உருவானது. சிவனை சுடலை எனவும், சுடலைமாடன் எனவும் குறிப்பிடுவதுண்டு. சுடலைமாடனை சிவ அம்சமாகவே சைவர்கள் பார்க்கின்றார்கள்.

                  

பார்வதி சிவனிடம் “தனக்கு ஆண்பிள்ளை வரம் வேண்டும்” என்று கேட்கின்றாள். சிவன் கைலாயத்தில் உள்ள முப்பத்தி இரண்டாம் தூணில் எரிகின்ற மணிவிளக்குகளில் முந்தானையை ஏந்தி நிற்குமாறு கூறுகிறான். அவ்வாறே பார்வதியும் விளக்கின் கீழ் முந்தானை ஏந்தி நிற்க, பரமசிவன் அந்த விளக்கின் சுடரை தூண்டிவிட முந்தானையில் அந்தச் சுடர் தெறித்து விழுகிறது. அந்த சுடர் வெறும் முண்டமாக இருப்பதைக் கண்ட பார்வதி பயந்து தன் கணவனிடம் கூறுகிறாள். சிவன் அந்த முண்டத்தினைத் தலையுள்ள குழந்தையாக உருவாக்குகிறான்.

அந்தக் குழந்தையை அன்போடு வளர்த்து வருகின்றனர். ஆனால் அந்தக் குழந்தை இரவில் சுடலைக்கு சென்று பிணங்களைத் தின்கிறது. அதைக் கண்ட பார்வதியும் சிவனும், அந்தக் குழந்தையை பூமிக்கு அனுப்பி விடுகின்றனர். குழந்தை சுடலையிலேயே தங்கி பிணங்களை தின்று வளர்கிறது. வாலிபம் அடைந்ததும், சுடலைக்கு பெண் தேவைப்படுகிறாள். பூலோகத்தில் இருக்கும் பெண்கள் யாரும் வேண்டாமென சிவனிடம் சென்று தனக்கு ஒரு பெண்துணை வேண்டுமென கேட்கின்றான். சிவனும் இசைந்து சுடலைமாடத்தியை உருவாக்கி கொடுக்கிறான்.

சிவன், சுடலை மாடனின் வெறியைத் தணிக்க இருவருக்கும் கொடை கொடுக்கின்றனர். அந்த விழாவில் இந்திராணியின் நடனம் நடைபெறுகிறது. சுடலை மாடன் ரத்தபலியும், மகுடச் சத்தமும் கேட்கிறான். இந்திராணியின் காற்சிலம்பின் பரல் தெறித்து விழ கணியான் பிறக்கிறான்.

சுடலை மாடனுக்காக மகுடம் வாசித்து, ஆடி, நரபலிக்கு பதிலாக நாக்கை வெட்டி ரத்தம் கொடுக்கிறான். பின்னர் சுடலைமாடன் , சுடலைமாடத்தியோடு பல வழிகளைக் கடந்து கன்னியாகுமரி வந்தடைகிறான்.

அங்கு இருக்கும் பகவதியிடம் தன் நிலையை விளக்கத் தனது காவலுக்கு அவனை வைத்துக் கொள்கிறாள் பகவதி. சில நாள்கள் கழித்து மலையாள தேசம் செல்ல விருப்பம் தெரிவிக்கிறான் சுடலை. மலையாளத்தில் உள்ள மாந்திரீகத் தன்மைகளை விளக்கி, ”அங்கு செல்வது ஆபத்து. எனவே நீ போகக் கூடாது” என்று தடுக்கிறாள் பகவதி. அதை மறுத்த சுடலை, ஆண்டிக்கோலத்தில் காளிப்புலையன், அவன் மகள் மாஇசக்கி வருகிற ஊருக்குச் செல்கிறான். அந்த ஊருக்கு வந்து சுடலைப் பாம்புகளை ஆட்டி வைத்து வேடிக்கை காட்டுகிறான். மாஇசக்கி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எனவே, பிச்சைக்காரனாக வேடம் ஏற்று வீடுவீடாகச் சென்று பிச்சை கேட்கிறான். மாஇசக்கி வீட்டிற்குச் சென்று, தான் அவளைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்கிறான்.

மாஇசக்கியைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்ற சுடலைமாடன் அன்றிரவு பல்லியின் வடிவில் அவளைக் கற்பழிக்கிறான். அதைத் தன் தந்தையிடம் முறையிடுகிறாள் மாஇசக்கி. அவள் தந்தை காளிப்புலையன் மை போட்டுப் பார்க்கிறான். ஆனால், அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுடலை இதை பகவதியிடம் கூறுகிறான். பின்னர் பகவதி அவனை மன்னித்துக் காவலைத் தொடரும்படி சொல்கிறாள்.

காக்காச்சி மலையில் நான்கு பளியர்கள் பயிரிட்டு வருகின்றனர். புழுவாக வடிவம் கொண்டு சுடலை, அப் பயிர்களை அழிக்கிறான். காளிப்புலையன் மீண்டும் மை போட்டுப் பார்க்கிறான். இதற்கெல்லாம் காரணம் சுடலைமாடன்தான் என்பதை அறிகிறான். மாடன் கோபம் கொண்டதாலேயே இப்படியான அழிவுச் செயல்களைச் செய்கிறான் என்று உணர்ந்து மாடனுக்குக் கொடைவிழா எடுக்க முன் வருகின்றனர்.மாடன் காளிப்புலையனின் மகள் சூலியை பலி கேட்கிறான். காளிப்புலையன் முதலில் மறுத்தாலும் பின்னர் அவளை சுடலைமாடனுக்குப் பலி கொடுக்கிறான். பின்னர் ஒரு யானையைப் பலியாகக் கேட்கிறான் சுடலை. பட்டத்து யானையைத் திருடிக் கொண்டு வந்து புலையன் பலியிடுகிறான்.

பட்டத்து யானை காணாமல் போகவே அதைக் கொண்டு சென்றவன் காளிப்புலையன் என்பதை அறிந்த மன்னன் அவனைப் பலியிடுகிறான். அந்த பலியையும் சுடலைமாடன் ஏற்றுக் கொள்கிறான். அங்கிருந்து சொரிமுத்தையன் கோயிலுக்கு வந்து ஐயனோடு சம்போடைக்குப் போகிறான். அங்கு ஆரிய சாம்பன் மகள் ஓடைக்குக் குளிக்கப் போகிறாள். இதைக் கண்ட மாடன் மீன் வடிவில் ஓடையில் சென்று அந்தப் பெண்ணோடு கூடுகிறான். அவள் உடல் நலம் குன்றவே மாடனுக்குப் பூசை செய்கின்றனர். அந்தப் பூசையையும் பெற்றுக் கொள்கிறான்.

அங்கிருந்து கல்லிடைக்குறிச்சிக்குச் செல்கிறான் மாடன். அவ்வூர் அருகில் உள்ள பொன்னிட்டாங்கயத்தில் மீனாகத் துள்ளினான் மாடன். நாடார்கள் மரம் வெட்ட வருகின்றனர். அங்கு மீன் துள்ளிக் கொண்டிருப்பதைக் கண்ட மரம் வெட்டிகள் அந்த மீனைப் பிடித்து வெட்டி பங்கு வைக்கிறார்கள். அவர்கள் வைக்கும் பங்கு குறைந்து கொண்டே இருப்பதைக் கண்ட நாடார்கள், ‘இது மாடனுடைய வேலையே’ என்று அஞ்சி ஓடுகின்றனர். அவர்களுள் பலரை பலி எடுத்துக் கொள்கிறான் மாடன். மிஞ்சியவர்கள் பயந்துபோய்ச் சுடலை மாடனுக்குக் கோயில் எழுப்புகின்றனர். அங்கிருந்து சொரிமுத்தையன் கோயில் வன்னிமரத்தில் குடியேறுகிறான் சுடலைமாடன்.

திருச்செந்தூர் கோயிலுக்குக் கொடிமரம் செய்வதற்கு ஆசாரிகள் காட்டுக்குப் போகிறார்கள். அப்போது சகுனத் தடைகள் பல ஏற்படுகின்றன. இருப்பினும் மாடன் குடியிருக்கும் வன்னிமரத்தைச் சிலர் வெட்டுகின்றனர். அவர்களைப் பலி கொள்கிறான் மாடன். சிலரை சொரிமுத்தையன் காப்பாற்றுகிறான். பயந்து போன மக்கள் மாடனுக்குத் திருச்செந்தூரில் பூசை செய்கின்றனர். அந்தப் பூசையை ஏற்றுக் கொண்ட மாடன் அவர்களுக்குப் பயனளித்து வருகிறான். 

                              பகிர்வில் ர.சடகோபால்.BA 

திங்கள், 6 அக்டோபர், 2014

மாயமாய் மறைவது எப்படி

  
ஒருவரை நாம் கண்டே பிடிக்க முடியாவிடில், அவன் மாயமாய் மறைந்து விட்டான் என உவமையாகச் சொல்வது வழக்கம். மற்றபடி நமது புராணக் கதைகளின் ஊடே ஒரு இடத்தில் இருந்து சட்டென மறைந்து வேறு இடத்தில் தோன்றுதல் போன்ற பல குறிப்புகளை காண முடிகிறது.

நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமா?

சாத்தியமே என்கிறார் அகத்தியர். "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இது பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கிறது. ஆமாம்.. நினைத்த மாத்திரத்தில் நமது உருவத்தை மறைத்துக் கொள்ள உதவிடும் அஞ்சன மை ஒன்றைப் பற்றி கூறியிருக்கிறார்.

அதை எப்படி தயார் செய்வது?

சித்தியுள்ள அஞ்சனந்தா னொன்றுகேளு
    திறமான தேவாங்கு காமரூபி
பத்தியுள்ள கருக்குருவி மூன்றின்பிச்சும்
    பாலகனே ஒன்றாக கருக்கிக் கொள்ளு
சுத்தமுள்ள முட்டோட்டி லிட்டுக்கொண்டு
   சூதுகப டில்லாமல் வருக்கும்போது
பத்தியுடன் தானுருகி மையாய்நிற்கும்
   மார்க்கமுடன் கல்வமதில் வைத்துக்காணே


காணவே பேரண்டத் தயிலம்விட்டு
   கடைந்தெடுக்கும் போதிலிருக் கண்ணிற்காணும்
ஊணவே ஓம்கிலிரங்ரங் கென்றேதான்
   உத்தமனே தான்செபித்து வழித்துக்கொண்டு
பேணவே மதகரியின் கொம்பில்வைத்து
   பிலமான சிமிழதனைப் பதனம்பண்ணி
பண்ணியந்த மையெடுத்துத் திலதம்போட்டு
   கண்ணிறைந்த காட்சியிலே நின்றால்மைந்தா


காசினியி லுனதுருவைக் காணமாட்டார்
   புண்ணியனே மனதுகந்த யிடத்தில்நின்று
போதமுடன் ஞானநெறி தன்னைப் பாரு
   தன்னருளைத் தனதாகப் பார்த்துப்பின்பு
சங்கையுடன் திலதமதை யெடுத்துப்பாரே
   என்னசொல்வேன் உனதுரு கண்ணிற்காணும்

தேவாங்கு, காமரூபி, கருக்குருவி ஆகியவற்றின் பிச்சுக்களை ஒன்றாக எடுத்து கருக்கிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை சுத்தமான முட்டை ஓட்டில் சேகரித்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அப்போது அவை உருகி மை போலாகி இருக்கும் என்கிறார் அகத்தியர். இந்த மையை கல்வத்தில் இட்டு பேரண்டத் தயிலம் சேர்த்து கடைய வேண்டுமாம். 

கடைந்த பின் அதனை வழித்து எடுத்து, யானைத் தந்ததால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இப்படி சேகரம் செய்யும் போது "ஓம் கிலி ரங் ரங்" என்ற மந்திரத்தினை செபித்துக் கொண்டே செய்திட வேண்டுமாம்.

உருவத்தை மறைக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து திலகமாக இட்டுக் கொள்ள உலகில் உள்ள யாரும் உருவத்தைக் காணமுடியாது என்கிறார். பின்னர் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று யோகம் தவம் போன்றன செய்து தன்னை அறிந்து கொள்ள கூறுகிறார். இந்த திலகத்தை அழித்து விட்டால் உருவம் பிறர் கண்களுக்குத் தென்படத் தொடங்கிவிடும் என்கிறார். 

இது ஒரு தகவல் பகிர்வே, இதன் சாத்திய அசாத்தியங்கள் விவாதத்திற்கும் மேலதிக ஆய்வுகளுக்கும் உட்பட்டவை.


                                    பகிர்வில் ர.சடகோபால்.BA